• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /வெற்றியை ருசித்த இந்தியா... கிங் கோலியின் மிரட்டல் சதம் - சாதனை லிஸ்ட் இதோ

வெற்றியை ருசித்த இந்தியா... கிங் கோலியின் மிரட்டல் சதம் - சாதனை லிஸ்ட் இதோ

IND vs WI 1st ODI, Virat Kohli: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஓடிஐ போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 139 ரன்களை அடித்து மிரட்டினார்.

Written BySudharsan G
Published: Sep 27, 2026, 09:40 PM IST|Updated: Sep 27, 2026, 10:35 PM IST
joinshare
வெற்றியை ருசித்த இந்தியா... கிங் கோலியின் மிரட்டல் சதம் - சாதனை லிஸ்ட் இதோ
Image Credit: Virat Kohli scored 139 off 88 at Thiruvanathapuram | Image Source : X/@BCCI

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

2

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

3

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

4

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

5

வீடு கட்டுவோருக்கு சூப்பர் நியூஸ்: உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிய தமிழ்நாடு அரசு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

IND vs WI 1st ODI, Virat Kohli: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஓடிஐ போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 139 ரன்களை அடித்து மிரட்டினார்.

கேரள தலைநகர் திருவனந்தபுரம் நகரில் கிரீன்பீல்ட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஓடிஐ போட்டி இன்று நடைபெற்றது.

மேலும் படிக்க | 2027 ஐசிசி உலகக் கோப்பை: விராட் கோலி, ரோஹித் சர்மா பிளான் என்ன? Explained

296 ரன்கள் இலக்கு

டாஸை இழந்த மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஓபனர் ஜஸ்டின் கிரீவ்ஸ் 101 ரன்களையும், ஜான் கேம்பெல் 62 ரன்களையும், அமிர் ஜாங்கோ 58 ரன்களையும் குவித்தனர்.

குல்தீப் யாதவ் 4, பிரசித் கிருஷ்ணா 2, நிதிஷ் குமார் ரெட்டி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 296 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. ரோஹித் - கில் இடையிலான ஓபனிங் பார்ட்னர்ஷிப் மூலம் 74 ரன்கள் சேர்க்கப்பட்டது.

சுப்மான் கில் சதம்

ரோஹித் சர்மா 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 35 பந்துகளில் 32 ரன்களை அடித்து முதல் பேட்டராக ஆட்டமிழந்தார். அதன்பின் கில் - கோலி ஜோடி 22 ஓவர்களுக்கு மேல் நீடித்து, 151 ரன்களை குவித்தது. சுப்மான் கில் 96 பந்துகளில் சதம் அடித்தார். இது அவரது 10வது ஓடிஐ சதமாகும். அவர் 108 பந்துகளில் 13 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 110 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

A partnership of Pure Class 🤌

Shubman Gill 🤝 Virat Kohli 

RELIVE ▶️ https://t.co/sA3ks3wpp6 #TeamIndia | #INDvWI | @mflone_ | @ShubmanGill | @imVkohli pic.twitter.com/tfyPHDl2QY

— BCCI (@BCCI) September 27, 2026

விராட் கோலியின் வெறியாட்டம்

அடுத்து வந்த ருதுராஜ் நிதானம் காட்ட விராட் கோலி மறுமுனையில் ருத்ரதாண்டவம் காட்டினார். சிக்ஸர்களாக பறக்கவிட்டார். 44இல் இருந்து சிக்ஸ் அடித்து அரைசதத்தை பதிவு செய்த அவர், 94இல் இருந்து சிக்ஸ் அடித்து சதத்தை கடந்தார்.

மேலும் படிக்க | Asian Games 2026: இந்தியா - பாகிஸ்தான் மோதல் எப்போது? ஃபைனலில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பா?

🔙 to 🔙 to seal the deal 👊#TeamIndia with a clinical chase in just 4️⃣1️⃣.4️⃣ overs to win by 8️⃣ wickets 👏👏

Scorecard ▶️ https://t.co/O2cs86p4gq#INDvWI | @mflone_ pic.twitter.com/SUj4bbE9rh

— BCCI (@BCCI) September 27, 2026

கடைசியாகவும் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு ஆட்டத்தை முடித்துவைத்தார். 41.4 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டை அடித்து இலக்கை கடந்து இந்திய அணி வெற்றிபெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ்

விராட் கோலி 88 பந்துகளில் 10 பவுண்டரி, 9 சிக்ஸருடன் 129 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 157.95 ஆகும். ருதுராஜ் 19 பந்துகளில் பவுண்டரி இல்லாமல் 13 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்டநாயகன் விருதை குல்தீப் யாதவ் வென்றார். பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு மேற்கு இந்திய தீவுகள் அணியின் ரன் வேகத்தை அவர் குறைத்தது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலியின் இன்றைய சாதனை பட்டியல்

  • விராட் கோலி இன்று 59 ரன்களை கடந்த நிலையில், ஓடிஐ கிரிக்கெட்டில் 15 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன்மூலம், ஓடிஐ கிரிக்கெட்டில் 15 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார், விராட் கோலி. சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்களை அடித்து இந்த லிஸ்டில் முதலிடத்தில் உள்ளார்.
  • லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் 60 சதங்களை அடித்து, சச்சின் டெண்டுல்கரின் சாதனை சமன் செய்தார். இதன்மூலம் லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் உடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டார், விராட் கோலி.
  • ஓடிஐ கிரிக்கெட்டை பொருத்தவரை சொந்த நாட்டில் அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்தார். 7,006 ரன்களை அடித்து இதில் முதலிடம் பிடித்தார். சச்சின் டெண்டுல்கர் 6,976 ரன்களை குவித்து இந்த பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார்.
  • விராட் கோலி இந்த இன்னிங்ஸில் 9 சிக்ஸர்களை அடித்ததன்மூலம், ஒரு ஓடிஐ இன்னிங்ஸில் அவரது அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் இதுதான். இதற்கு முன், 2023ஆம் ஆண்டில் இதே திருவனந்தபுரத்தில் இலங்கை அணிக்கு எதிரான ஓடிஐ போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 8 சிக்ஸர்களை அடித்ததே அதிகபட்ச சிக்ஸராக இருந்தது.

மேலும் படிக்க | Explainer: வெஸ்ட் இண்டீஸ் ODI தொடர்... இந்திய அணிக்கு ஏன் ரொம்ப முக்கியம்...?

Add Zee News as a Preferred Source
TAGS:
Indian Cricket Team