SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

2027 ஐசிசி உலகக் கோப்பை: விராட் கோலி, ரோஹித் சர்மா பிளான் என்ன? Explained

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஓடிஐ தொடரில் விளையாட உள்ள விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் 2027 ஐசிசி உலகக் கோப்பை தொடர் குறித்த தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தி உள்ளனர். அந்த வகையில், அவர்களின் பிளான் என்ன?, இந்திய அணியில் அவர்களின் தேவை என்ன? மற்றும் அவர்களுக்கு இருக்கும் சவால்கள் என்ன? ஆகியவற்றை இங்கு காணலாம்.

Written By Sudharsan G
Published: Sep 26, 2026, 20:31 IST | Updated: Sep 26, 2026, 20:49 IST
Image Credit: Virat, Rohit on ICC World Cup 2027 | AI Generated Image : ChatGPT
Join

2027 ஐசிசி உலகக் கோப்பை தொடரை நோக்கிய நெடும்பயணத்தின் தொடக்கமாக மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஓடிஐ தொடர் நாளை (செப். 27) தொடங்க இருக்கிறது. வரும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் நவம்பர் 21ஆம் தேதிவரை 2027 ஐசிசி உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது.

மேற்கு இந்திய தீவுகள், நியூசிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே என அடுத்த ஐபிஎல் தொடர் வரை 4 ஓடிஐ தொடர்களில் 14 ஓடிஐ போட்டிகளில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இது நிச்சயம் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றாகும்.

ஓடிஐ தொடர்  மொத்த போட்டிகள் ஹோம்/அவே மாதம்
மேற்கு இந்திய தீவுகள் 3 போட்டிகள் ஹோம் செப்டம்பர் - அக்டோபர்
நியூசிலாந்து 5 போட்டிகள் அவே நவம்பர்
இலங்கை 3 போட்டிகள் ஹோம் டிசம்பர்
ஜிம்பாப்வே 3 போட்டிகள் ஹோம் ஜனவரி (2027)

ரசிகர்களின் தவம்

டி20ஐ மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து இருவரும் ஓய்வு பெற்ற பின்னர் ஐபிஎல் போட்டியை தவிர்த்து, வேறு போட்டிகளில் அவர்கள் விளையாடுவதை அடிக்கடி பார்க்க முடியவில்லை என்பதால் அவர்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் காண பெரும் தவத்தை மேற்கொள்கிறார்கள்.

இந்தச் சூழலில், திருவனந்தபுரத்தில் நாளைய தினம் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஓடிஐ போட்டி நடைபெற இருக்கிறது. இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | Explainer: வெஸ்ட் இண்டீஸ் ODI தொடர்... இந்திய அணிக்கு ஏன் ரொம்ப முக்கியம்...?

விராட், ரோஹித் கருத்து

இந்நிலையில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் JioStar தளத்திற்கு, தங்களின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கலந்துரையாடி உள்ளனர். அவற்றை இங்கு காணலாம்.

உலகக் கோப்பை குறித்து விராட் கோலி

உலகக் கோப்பை குறித்து ரோஹித் சர்மா

இந்திய அணியில் ரோஹித் - கோலியின் பங்கு என்ன?

ரோஹித்த்தின் அதிரடி தொடக்கம்

முதல் 10 ஓவர்களில் புதிய பந்தில் பவர்பிளேவை பயன்படுத்தி எதிரணியின் பந்துவீச்சை நிலைகுலையச் செய்யும் ஆக்ரோஷமான அணுகுமுறையை ரோஹித் தொடர வேண்டும். இது மிடில் ஆர்டரில் விளையாடும் இளம் வீரர்களின் மீதான அழுத்தத்தை குறைக்க உதவும்.

கோலியின் நீண்ட இன்னிங்ஸ்

ஓடிஐ பொருத்தவரை, கோலி அதில் கிங் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க வாய்ப்பில்லை. அதிலும் 11-40 ஓவர்கள் வரை ஆட்டமிழக்காமல் நீண்ட இன்னிங்ஸை விளையாடுவதில் அவர் வல்லவர். விக்கெட்டுகள் சரிந்தால் ஒருமுனையில் நிலைத்து நின்று விளையாடி ரன்களை குவித்து அணியை சரிவில் இருந்து மீட்கும் மீட்பர் அவர். குறிப்பாக, உலகக் கோப்பை நடைபெற இருக்கும் தென்னாப்பிரிக்காவின் வேகமும் பவுன்ஸும் நிறைந்த ஆடுகளங்களில் விராட் கோலியின் விக்கெட் விலைமதிப்பற்றது.

இருவரின் அனுபவம்

இளம் வீரர்களுக்கு வழிகாட்ட ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு இருக்கும் அனுபவம் தற்போது வேறு யாருக்கும் அணியில் இல்லை. குறிப்பாக, கில், ஷ்ரேயாஸ், ருதுராஜ், ஜெய்ஸ்வால் போன்ற அடுத்த தலைமுறை பேட்டர்கள் ஐசிசி தொடர்களில் நெருக்கடியை கையாள்வதற்கு இருவரிின் ஆலோசனைகள் மிக மிக அவசியமானது.

மேலும் படிக்க | ரோஹித் சர்மா vs ஜெய்ஸ்வால்: 2027 உலகக் கோப்பையில் யார் ஓபனர்? அகர்கர் முக்கிய முடிவு!

ரோஹித், விராட் முன் உள்ள சவால்கள்

ஃபார்ம் பிரச்னை

டெஸ்ட், டி20 போட்டிகளில் இருந்து விடைபெற்றுவிட்டதால், ஐபிஎல் தொடரை தவிர்த்து இருவர் விளையாடும் ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை என்பது மிக மிக குறைவு. தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடாததன் காரணமாக பார்மை தக்கவைப்பது மிக மிக கடினம்.

வயது காரணி

2027 உலகக் கோப்பையின் போது ரோஹித் சர்மாவுக்கு வயது 40 ஆகவும், விராட் கோலிக்கு 39 ஆகவும் இருக்கும். இதனால், 50 ஓவர் போட்டிகளில் பீல்டிங் செய்வதிலும், ஆடுகளத்தில் ரன் எடுக்க ஓடுவதிலும் உடற்தகுதியில் சமரசம் செய்ய இயலாது. இருவரும் தற்போது நல்ல பிட்னஸில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்க சூழல்

வேகப்பந்துவீச்சுக்கு அதிகம் சாதகங்களை கொண்ட தென்னப்பிரிக்க ஆடுகளங்களில் உடற்தகுதி மட்டுமின்றி, போட்டியில் Reflex முக்கியம். அதுமட்டுமின்றி உலகக் கோப்பை தொடர் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறுவதால் ஒவ்வொரு போட்டிக்கும் அதிக தூரம் பயணிக்க வேண்டும். இதுவும் இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு பெரும் சவாலை அளிக்கும்.

முடிவுரை

2023 உலகக் கோப்பை தொடரில் பைனல் வரை சென்று, உலகக் கோப்பைக்கு மிக நெருங்கி வந்து தறவிட்ட இவ்விருவருக்கும் 2027 உலகக் கோப்பை என்பது வெறும் தொடர் மட்டுமல்ல... சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கம்பீரமாக ஓய்வு பெறுவதற்கான ஒரு இறுதி வேட்டை என வைத்துக்கொள்ளலாம்.

நாளை தொடங்கி அடுத்தாண்டு நடைபெற இருக்கும் ஐசிசி உலகக் கோப்பை தொடரை வரையிலான இவரின் பயணம், இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றுப் பக்கங்களில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய ஜாம்பவான்களின் கடைசி அத்தியாயம் எவ்வாறு அமையப்போகிறது என்பதைத் தீர்மானிக்கும் எனலாம்.

மேலும் படிக்க | Asian Games 2026: இந்தியா - பாகிஸ்தான் மோதல் எப்போது? ஃபைனலில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பா?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES