SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

இந்தியா படுதோல்வி... மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ் - பெங்களூருவில் மான் கொம்பு பைட் உறுதி!

மேற்கு இந்திய அணிக்கு எதிரான 4வது டி20ஐ போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனால், டி20ஐ தொடர் 2-2 என சமநிலையில் உள்ளது. பெங்களூருவில் வரும் அக். 17ஆம் தேதி நடைபெற இருக்கும் 5வது மற்றும் கடைசி போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Written By Sudharsan G
Published: Oct 14, 2026, 23:16 IST | Updated: Oct 15, 2026, 00:08 IST
Image Credit: IND vs WI 4th T20I Highlights | Image Source : X
Join

IND vs WI, 4th T20I Highlights: இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4வது டி20ஐ போட்டி இன்று ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருந்த இந்தியா இப்போட்டியில் வென்று தொடரை வெல்லும் முனைப்பில் இருந்தது.

தொடர்ந்து டாஸ் வென்ற இந்தியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி பிளேயிங் லெவனில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. மேற்கு இந்திய தீவுகள் அணியில் கமில் பூரன், சாம்சன் ஆகியோருக்கு பதில் ஆண்ட்ரூ, ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்தது.

மேலும் படிக்க | அடுத்த ஹர்திக் பாண்டியா... இந்திய ஓடிஐ அணிக்கு புது வரவு - நியூசிலாந்து பறக்கும் சூர்யான்ஷ் ஷெக்டே

வெஸ்ட் இண்டீஸ் சிறப்பான தொடக்கம்

முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி, இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தது. பவர்பிளேவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்களை அடித்தது. ஓபனர் ஆண்ட்ரூ 21 ரன்களில் ஆட்டமிழந்தாலும், வழக்கம்போல், ஷாய் ஹோப் இந்திய பந்துவீச்சாளர்களை திணறடித்து அரைசதம் கடந்தார்.

தொடர்ந்து ஹெட்மயர் 12 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் என 33 ரன்களுடனும், ரோவ்மான் பாவெல் 17 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் என 24 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். 13வது ஓவரில் ஹோப் உடன் ரூதர்போர்ட் ஜோடி சேர்ந்தார். அப்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை அடித்திருந்தது.

மீண்டும் சதம் அடித்த ஷாய் ஹோப்

20 ஓவர்கள் முடிவில் அதே 3 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அடித்திருந்தது. இந்த ஜோடி 43 பந்துகளில் 91 ரன்களை குவித்தது. ஷாய் ஹோப் 50 பந்துகளில் 4 பவுண்டரி, 9 சிக்ஸர் என 102 ரன்களுடனும், ரூதர்போர்ட் 26 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர் உடன் 49 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி பந்துவீச்சில் அர்ஷ்தீப், பிரின்ஸ் யாதவ், அக்சர் பட்டேல் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

நெருப்பை கக்கிய சஞ்சு சாம்சன்

தொடர்ந்து 248 ரன்கள் என்ற பெரும் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் பட்டாசான ஓபனிங்கை கொடுத்தார். மறுபக்கம் அபிஷேக் சர்மா சைலண்டாக வேடிக்கை பார்த்தார். முதல் 3 ஓவர்களிலேயே இந்திய அணி 50 ரன்களை கடந்தது. 18 பந்துகளில் சாம்சன் அரைசதம் அடித்தார். ஆனால் அவர் 5வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழக்கவும் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

மேலும் படிக்க | SRH அணிக்கு நடராஜன்... DC அணிக்கு வந்த மிரட்டல் ஸ்பின்னர் - இந்த டிரேட் யாருக்கு லாபம்?

சாம்சன் 23 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 56 ரன்களை சேர்த்திருந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு, சாம்சன் ஆட்டமிழந்த அதே ஓவரின் 4வது பந்திலேயே அவரும் பெவிலியன் சென்றார்.

பவர்பிளே முடியும்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்களை சேர்த்திருந்தது. அதாவது, வெஸ்ட் இண்டீஸ் அணியை விட பவர்பிளேவில் ஒரு ரன் அதிகம், ஆனால் ஒரு விக்கெட்டை கூடுதலாக இழந்திருந்தது. அபிஷேக் சர்மா தொடர்ந்து நிதானம் காட்ட, கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 11 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரிகளுடன் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சொதப்பிய அபிஷேக் சர்மா

மோட்டீ வீசிய 12வது ஓவரில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 24 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 29 ரன்களையே அடித்திருந்தார். ஹைதராபாத் மைதானம் அவருக்கு பழக்கப்பட்டது என்றாலும் இன்று அவரது வழக்கமான அதிரடியை பார்க்க முடியவில்லை. அவரது சுமாரான ஆட்டமும் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அபிஷேக் சர்மா ஆட்டமிழந்த அடுத்த பந்திலேயே நமன் திர் ஸ்டம்பிங் ஆகி டக்அவுட்டானார்.

மிரட்டிய திலக் வர்மா - NKR ஜோடி

தொடர்ந்து திலக் வர்மா - நிதிஷ் குமார் ரெட்டி ஆகிய உள்ளூர் வீரர்கள் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து அதிரடி காட்டினர். இந்த ஜோடி இருக்கும்வரை இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. இந்த ஜோடி 32 பந்துகளில் 70 ரன்களை சேர்த்தது.

திலக் வர்மா 25 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர் என 43 ரன்களுடன் 17வது ஓவரிலும்; நிதிஷ் குமார் ரெட்டி 20 பந்துகளில் 1 பவுண்டரி, 4 சிக்ஸர் என 41 ரன்களுடனும் 19ஓவரிலும் ஆட்டமிழக்க இந்தியாவின் தோல்வி ஏறத்தாழ உறுதியானது. இதற்கிடையே பிரின்ஸ் யாதவ் வந்த முதல் பந்திலேயே டக்அவுட்டானார்.

இந்திய அணி படுதோல்வி

கடைசி ஓவரில் ஷமார் ஜோசப் வீசிய அதிவேக பந்தில் அர்ஷ்தீப் யாதவின் இடது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ரிட்டையர் ஆக இந்திய அணி 223 ரன்களில் ஆல்-அவுட்டானது. தொடர்ந்து 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. கீமோ பால் 5 விக்கெட்டுகளையும், மோட்டீ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் 5வது போட்டி

ஆட்டநாயகன் விருதை ஷாய் ஹோப் வென்றார். இந்த போட்டியை வென்றதன் மூலம் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையை அடைந்தது. இதனால், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் தொடரின் 5வது போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஒருவேளை இந்திய அணி அடுத்த போட்டியில் தோல்வியடைந்து, டி20ஐ தொடரை இழக்கும்பட்சத்தில், 2019ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி தனது சொந்த மண்ணில் டி20ஐ தொடரை இழக்க நேரிடும். 2019ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20ஐ தொடரை 0-2 என இந்தியா இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மீண்டும் காயத்தில் சிக்கிய CSK வீரர்... 3-4 வாரங்கள் விளையாட முடியாது - என்னாச்சு?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES