• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /2 வெள்ளியை வென்ற தமிழக வீராங்கனை... யார் இந்த இளவேனில் வாலறிவன்?

2 வெள்ளியை வென்ற தமிழக வீராங்கனை... யார் இந்த இளவேனில் வாலறிவன்?

Elavenil Valarivan: ஆசிய விளையாடுப் போட்டித்தொடரில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைப்பிள் அணி பிரிவிலும், மகளிர் 10 மீட்டர் ஏர் ரைஃப்பிள் தனிநபர் பிரிவிலும் இளவேனில் வாலறிவன் வெள்ளி வென்றார். தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட இவர் குறித்து இங்கு விரிவாக காணலாம்.

Written BySudharsan G
Published: Sep 20, 2026, 03:48 PM IST|Updated: Sep 20, 2026, 03:58 PM IST
joinshare
2 வெள்ளியை வென்ற தமிழக வீராங்கனை... யார் இந்த இளவேனில் வாலறிவன்?
Image Credit: Elavenil Valarivan | Image Source : X, AI Designed Photo: ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா:  பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

2

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

3

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

4

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

5

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Asian Games 2026, Elavenil Valarivan: ஜப்பான் நாட்டில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டித்தொடர் நேற்று (செப். 19) தொடங்கியது. வரும் அக்டோபர் 4ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது.

இந்தியா மொத்தம் 36 போட்டிப் பிரிவுகளில் பங்கெடுக்கிறது. அதில் 267 ஆண்கள், 234 பெண்கள் என 501 வீரர்கள் பங்கேற்கின்றனர். கடந்த முறை சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுத் தொடரில் 106 பதக்கங்களை பெற்று, சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு பிறகு 4வது இடத்தையே பிடித்தது.

பதக்கங்களை குவித்த இந்தியா

இம்முறை அதை மிஞ்சி வரலாற்று வெற்றியை குவிக்க இந்தியா களமிறங்கியிருக்கிறது. அந்த வகையில் இன்றே பல பதக்கங்களை கைப்பற்றியிருக்கிறது. மகளிர் 10 மீட்டர் ஏர் ரைஃப்பிள் துப்பாக்கிச்சூடு பிரிவில் இளவெனில் வாலறிவன், சோனம் மஸ்கர், விதர்சா வினோத் ஆகியோர் அடங்கிய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

அதேபோல், மகளிர் 10 மீட்டர் ஏர் ரைஃப்பிள் துப்பாக்கிச்சூடு தனிநபர் பிரிவில் இளவெனில் வாலறிவன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதன்மூலம் 2 பதக்கங்களை இந்தியா வென்றிருக்கிறது.

மேலும், மகளிர் கிரிக்கெட்டில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று, ஒரு பதக்கத்தை உறுதிசெய்துள்ளது. இறுதிப்போட்டியில் இலங்கை அணியை இந்தியா எதிர்கொள்ளும். சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியிலும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதியது குறிப்பிடத்தக்கது.

சாதனை படைத்த இளவேனில் வாலறிவன்

தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன், அகமதாபாத்தில் பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில், இளவேனில் வாலறிவன் இன்று இந்திய அணிக்கு இரண்டு வெள்ளி பதக்கங்களை உறுதி செய்தார்.

ஆசிய விளையாட்டுத் தொடர் நடைபெறும் ஜப்பானில் ANI செய்தி முகமையிடம் அளித்த பேட்டியில், "இந்த வெற்றியை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள எனக்கு இன்னும் சிறிது காலம் எடுக்கும். இது மிகவும் புதிய உணர்வு.

#WATCH | Aichi-Nagoya Asian Games 2026: On winning the two Silver medals, Indian shooter Elavenil Valarivan says, "I think I'm still letting it settle in; it is all very fresh. I spoke to my family, my mentor, my coach, and my psychologist, and I could see happy faces all around.… pic.twitter.com/QjrpkLMX12

— ANI (@ANI) September 20, 2026

மேலும் படிக்க |  PAK கிரிக்கெட்டில் என்னதான் நடக்கிறது? ரிஸ்வான் முதல் மொஹ்சின் நக்வி வரை தொடரும் சர்ச்சைகள்!

எனது குடும்பத்தினர், ஆலோசகர், பயிற்சியாளர், உளவியலாளர் ஆகியோரிடம் பேசினேன். அவர்கள் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியைக் காண முடிந்தது. அவர்களுக்கு மகிழ்ச்சியடையும் வாய்ப்பை வழங்க முடிந்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.

நீண்ட நாள் தவத்திற்கு கிடைத்த பலன்

இந்த வெற்றிக்கு முன்பு இரண்டு ஒலிம்பிக் மற்றஉம் ஒரு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றிருந்தாலும் பதக்கம் வெல்லும் நிலையில் நான் இருந்ததில்லை" என்றார்.

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் அறிமுகமான இவர் தனிநபர் 10 மீட்டர் ஏர் ரைஃப்பிள் பிரிவில் 16வது இடத்தையும், கலப்பு அணிகள் பிரிவில் 12வது இடத்தையும் அவர் பிடித்திருந்தார். 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் தனிநபர் 10 மீட்டர் ஏர் ரைஃப்பிள் பிரிவில் 10வது இடத்தையும், கலப்பு அணிகள் பிரிவில் 12வது இடத்தையும் பிடித்திருந்தார்.

யார் இந்த இளவேனில் வாலறிவன்?

  • தமிழ்நாட்டின் கடலூரைச் சேர்ந்த சர்வதேச துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான இளவேனில் வாலறிவன், 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி பிறந்தவர். இவரது தந்தை ருத்ராபதி வாலறிவனுக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பணி அமைந்ததால், இளவேனில் 2 வயதாக இருக்கும்போதே அவரது குடும்பம் அங்கு சென்றுவிட்டது.
  • அதனால், இளவேனில் பள்ளிப் படிப்பையும், விளையாட்டுப் பயிற்சியையும் அகமதாபாத்திலேயே தொடர்ந்தார். ஒலிம்பிக் வென்ற ககன் நாரங்கின் 'Gun for Glory' அகாடமியில் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியை தொடங்கினார்.
  • 10 மீட்டர் ஏர் ரைஃப்பிள் பிரிவில் பங்கேற்கும் இவர் 2018 ஜூனியர் உலகக் கோப்பையில் உலக சாதனையுடன் தங்கம் வென்று சர்வதேச அளவில் கவனம் பெற்றார். தொடர்ந்து 2019ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த ISSF உலகக் கோப்பையில் தங்கம் வென்று கவனம் பெற்றார். உலகக் கோப்பையில் தங்கம் வென்ற மிக இளம் இந்திய வீராங்கனைகளில் ஒருவரானார்.
  • அதே ஆண்டில் சீனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் தங்கம் வென்று அசத்தினார். உலகத் தரவரிசையில் முதலிடத்தை பிடித்த இவர் டோக்கியா ஒலிம்பிக் போட்டியிலும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். இவரது விளையாட்டு சாதனைகளுக்காக 2022ஆம் ஆண்டு இவருக்கு நாட்டின் மதிப்புமிக்க அர்ஜுனா விருதை வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.

மேலும் படிக்க |  IND கோப்பை வென்றால் நக்வியிடம் இருந்துதான் வாங்க வேண்டுமா? ஏசியன் கேம்ஸில் புதிய சிக்கல்!

Add Zee News as a Preferred Source
TAGS:
Asian Games