SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

அர்னாப் புயலுக்கு 5 பேர் பலி..தமிழ்நாட்டுக்கு அடுத்து எப்போ மழை? அப்டேட் இதுதான்..

அர்னாப் புயல், ஆந்திர மாநிலத்தை நோக்கி நகர்ந்த நிலையில் இதற்கு 5 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு அடுத்து எப்போது மழை என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Oct 29, 2026, 06:11 AM IST | Updated: Oct 29, 2026, 06:21 AM IST
Join

ஆந்திராவில், அர்னாப் புயல் வெளுத்து வாங்கிய நிலையில், நர்சாபூர் அருகே கரையை கடந்தது. இதனால் சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் சூரைக்காற்று வீசியது. இந்த புயல் பாதிப்பால் 5 பேர் பலியாகி இருக்கின்றனர்.

அச்சுறுத்திய அர்னாப் புயல்!

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, அர்னாப் புயல் கடந்த புதன்கிழமை அதிகாலை 2 மணி முதல், காலை 8 மணிக்குள், ஆந்திர பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரை பகுதிகளில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையை கடந்துள்ளது.

புயல் கரையை கடக்கும் போது, காற்று 125 முதல் 135கி.மீ வேகத்தில் இருந்துள்ளது. மேலும், காற்றின் வேகம் 150 கி.மீ வரை அதிகரித்ததாக கூறப்படுகிறது. மேலும், சுமார் 8 கி.மீ உயரம் வரை, தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாகவே, அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மேலும் படிக்க | பசும்பொன் பயணத்தை தவிர்க்கும் CM விஜய்? பின்னணியில் உளவுத்துறை.. தேவர் குரு பூஜை அரசியல்!

5 பேர் பலி!

ஆந்திராவை சூரையாடிய அர்னாப் புயலால், மொத்தம் 15,000 மின் கம்பங்களும், சுமார் 50,000 மரங்களும் வேரோடு சாய்ந்துள்ளன. கனமழையால் பல்வேறு கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பயிர்களும் சேதமடைந்துள்ளன. இந்த புயலின் தீவிரத்தை கருத்திற்கொண்டு, முன்னதாக ஆந்திரா ஒடிசா மாநிலங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 180000க்கும் மேற்பட்ட மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். புயல் பாதிப்பால் உயிரிழந்த ஐந்து பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத்தை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு அடுத்து எப்போது மழை?

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் அக்டோபர் மாதத்தின் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. பிர தமிழக பகுதிகளின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

31ஆம் தேதியன்று, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

01.11.2026 அன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

02.11.2026 அன்று வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மந்தமான வடகிழக்கு பருவமழை..

அடுத்த 3 நாட்களுக்கு வடகிழக்குப் பருவமழை மந்தமாக இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாப் பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மந்தமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்காலிக மேற்குக் காற்று வீச வாய்ப்புள்ளதால், பகல் நேரங்களில் இயல்பை விட அதிக வெப்பநிலையுடன், வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை நிலவும். பகல் நேர வெப்பநிலை இயல்பை விட சுமார் 2–3°C அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று தன்னுடைய ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | தீபாவளிக்கு மறுநாளும் விடுமுறை.. தமிழக அரசின் குட் நியூஸ்.. தொடர்ந்து 3 நாட்கள் லீவ்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES