SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மக்கள் என் பக்கம், அடுத்தது என்ன? ‘ஓம்’ பட விழாவில் உண்மையை உடைத்து பேசிய நடிகர் தனுஷ்

Dhanush Political Entry: தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரமான தனுஷ், சமீபகாலமாக தனது அரசியல் சார்ந்த பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகளால் கவனத்தை ஈர்த்து வருகிறார். அவரது சமீபத்திய செயல்பாடுகள், அவரும் விரைவில் அரசியல் அதிகார மையத்திற்குள் நுழையக்கூடும் என்ற ஊகங்களை உருவாக்கியுள்ளன.

Written By Sripriya Sambathkumar
Published: Nov 07, 2026, 07:27 AM IST | Updated: Nov 07, 2026, 07:32 AM IST
Image Credit: Dhanush Political Entry
Join

Dhanush Political Entry: ‘ஓம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பேசிய விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவர் அரசியலில் கால் பதிப்பது பற்றிய பேச்சுகள் அதிகரித்து வரும் சூழலில், இந்த விழாவில் தனுஷின் பேச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முதல்வர் விஜய், ஒரு நடிகராகத் தனது பயணத்தைத் தொடங்கி, பின்னர் அரசியலில் நுழைந்து, தனது சொந்தக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு, தமிழ்நாட்டின் முதலமைச்சராக உயர்ந்து சமீபத்தில் தமிழகத்தில் ஒரு பெரும் மாற்றத்தை கொண்டுவந்துள்ளார், திரைப்படத் துறையிலிருந்து அரசியல் களத்திற்குச் சென்று அவர் அடைந்த இந்த எதிர்பாராத வெற்றி, மற்ற நடிகர்களையும் அதே பாதையைப் பின்பற்றத் தூண்டியுள்ளது.

தனுஷுக்கு பாஜக ஆதரவா?

இந்தச் சூழலில், தமிழ் சினிமாவின் மற்றொரு பிரபல நட்சத்திரமான தனுஷ், சமீபகாலமாக தனது அரசியல் சார்ந்த பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகளால் கவனத்தை ஈர்த்து வருகிறார். அவரது சமீபத்திய செயல்பாடுகள், அவரும் விரைவில் அரசியல் அதிகார மையத்திற்குள் நுழையக்கூடும் என்ற ஊகங்களை உருவாக்கியுள்ளன. இதற்கிடையில், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) ஆதரவு தனுஷிற்கு இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் குறித்து தனுஷ் தற்போது தனது மௌனத்தைக் கலைத்துள்ளார்.

மேலும் படிக்க | தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்?

‘ஓம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், தனக்கு எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது தனிநபரோ ஆதரவு அளிக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். தனக்கு இறைவனும், தனது ரசிகர்களும், பொதுமக்களுமே ஆதரவாக இருப்பதாக அவர் கூறினார். அவரது அடுத்த படமான 'ஓம் - சாப்டர் 1' (Om – Chapter 1) நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் தனுஷுடன் மம்மூட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ளனர்.

எனக்கு இறைவனின் ஆசி உள்ளது: தனுஷ்

நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், "என்னைப் பற்றிப் பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகின்றன. யாரோ எனக்குப் பின்னால் இருக்கிறார்கள் அல்லது எனக்கு ஆதரவளிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது... ஆனால், என்னை வழிநடத்துவது இறைவன்; எனக்குப் பின்னால் என் ரசிகர்கள் இருக்கிறார்கள், மக்கள் என்னுடன் இருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டார். பாஜக தனுஷிற்கு ஆதரவளிப்பதாகவும், அக்கட்சியின் துணையுடன் அவர் அரசியலில் நுழையக்கூடும் என்றும் ஊகங்கள் நிலவி வரும் சூழலில், அவரது இந்த விளக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் படிக்க | CBSE Board Exam 2027: சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு தேதிகள் அறிவிப்பு.. முழு விவரம்!

அரசியல் பிரவேசம் குறித்த சூசகமான அறிகுறி

இதற்கிடையில், தனுஷின் செயல்பாடுகளே அவர் அரசியலுக்கு வரக்கூடும் என்ற ஊகங்களுக்கு மேலும் வலுசேர்க்கின்றன. அவரது ரசிகர் மன்றங்களில் செய்யப்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. தகவல்களின்படி, தனுஷ் தனது ஆதரவாளர்களுக்காக 'நற்பணி இயக்கம்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார்.

இந்த அமைப்பின் மூலம், தமிழ்நாட்டின் அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக குளிரூட்டப்பட்ட பயிற்சி மையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் மூன்று ஆசிரியர்கள் மற்றும் ஒரு உதவியாளர் பணியமர்த்தப்படுவார்கள்; இவர்களுக்கான ஊதியத்தை அந்த அமைப்பே ஏற்கும். இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே தொடங்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் பாதையைப் பின்பற்றுகிறாரா தனுஷ்?

அரசியலில் நுழைவதற்கு முன்பு இதே போன்ற கல்வித் திட்டங்களைச் செயல்படுத்திய விஜய்யின் அடிச்சுவடுகளைத்தான் தனுஷும் நெருக்கமாகப் பின்பற்றுகிறாரோ என்ற ஊகங்களும் எழுந்துள்ளன. மேலும், அக்டோபர் 14 அன்று, தனுஷ் தனது ரசிகர் மன்றத்தை 'தனுஷ் நற்பணி இயக்கம்' என்று பெயர் மாற்றினா.; இந்த இயக்கத்திற்கெனத் தனிச் சின்னமும் கொடியும் கூட உள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், விஜய் தனது பிறந்தநாளில் மக்களுக்கு இலவசமாக ஆட்டோ-ரிக்ஷாக்களை வழங்கியதும் நினைவுகூரத்தக்கது.

இந்த நிலையில், தனுஷின் இந்த சமீபத்திய பேச்சு அவரது அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | ஜெகன் குடும்பத் திருமணத்தில் முதல்வர் விஜய் & அதானி.. சந்திப்பின் பின்னணி என்ன?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES