SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தாராபுரத்தில் தவெக வெற்றி; குறைந்தது வெற்றி வித்தியாசம் - 3வது இடத்தில் அதிமுக

Dharapuram By Election Result 2026: தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை வீழ்த்தி வெற்றிபெற்றார். மதுராந்தகம் தொகுதியிலும் தவெக வென்றது குறிப்பிடத்தக்கது.

Written By Sudharsan G
Published: Oct 09, 2026, 03:53 PM IST | Updated: Oct 09, 2026, 04:54 PM IST
Join

Dharapuram By Election Result 2026: தாராபுரம் இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடைந்தது. 23 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தபால் வாக்குகளும் எண்ணப்பட்டன. 

வாக்கு எண்ணிக்கை முடிவில், ஆளும் தவெகவின் வேட்பாளர் சத்யபாமா 66 ஆயிரத்து 841 வாக்குகளை பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுகன்யா 57 ஆயிரத்து 690 வாக்குகளையும்; அதிமுக வேட்பாளர் பானுமதி 45 ஆயிரதது 280 வாக்குகளையும் பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.

மேலும் படிக்க | மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக 3வது இடத்திற்கு போனது எப்படி? பாமக ஒரு காரணமா?

தவெக பலம் 109 ஆக உயர்வு

தவெக வேட்பாளர் 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை வீழ்த்தி வெற்றிபெற்றார். மதுராந்தகத்திலும் தவெக வெற்றி பெற்றதால் சட்டப்பேரவையில் தவெகவின் பலம் 109 ஆக உயர்ந்துள்ளது.

வெற்றி வித்தியாசம் குறைந்தது

கடந்த பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்யபாமா 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் தற்போது தவெக சார்பில் போட்டியிட்டு வென்றிருந்தாலும் வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் குறைந்துள்ளது. அதேநேரத்தில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. திமுக 2வது இடத்தை தக்கவைத்திருக்கிறது.

மேலும் படிக்க | Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

அதிமுகவின் வீழ்ச்சி

தாராபுரம் தொகுதியில் காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் தவெக முன்னிலை வகித்து வந்தது. திடீரென அதிமுக வேட்பாளர் முன்னிலை பெற்றார். சில சுற்றுகளில் தொடர்ந்து அதிமுக முன்னிலை பெற்ற வந்த நிலையில், காலை 10.30 மணியளவில் மீண்டும் தவெக முன்னிலை பெற்றது.

அதற்கு பிறகு தவெக சரியவே இல்லை. தொடர்ச்சியாக தவெகவின் வாக்கு வித்தியாசமும் அதிகரித்தே வந்தது. ஒருகட்டத்தில், திமுக வேட்பாளர் சுகன்யா, அதிமுக வேட்பாளர் பானுமதியை பின்னுக்குத் தள்ளி 2ஆம் இடம் பிடித்தார். அதன்பின், அதிமுகவால் இரண்டாம் இடம் கூட வர முடியவில்லை. தாராபுரம் தொகுதியை இழந்தது மட்டுமின்றி மூன்றாவது இடத்திற்கும் சென்றதால் அதிமுக தரப்பு கடும் அதிருப்தியில் உள்ளது.

2வது இடத்தை தக்கவைத்த திமுக

2021 தேர்தலில் பாஜகவின் எல். முருகனை வீழ்த்தி திமுகவின் கயல்விழி செல்வராஜ் வெற்றி பெற்று அமைச்சரானார். அமைச்சரவையில் நீடித்த அவருக்கு 2026 பொதுத்தேர்தலில் போட்டியிட திமுக வாய்ப்பளிக்கவில்லை. இந்திராணி என்பவர் போட்டியிட்டு 2ஆம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

சத்யபாமா மீது கடும் குற்றச்சாட்டுகளும், புகார்களும் இருந்தபோதிலும் விஜய் அலை காரணமாக வெற்றி உறுதியாகி உள்ளது. இருப்பினும், பொதுத்தேர்தலை விட இடைத்தேர்தல் அவருக்கு கடினமாகவே இருந்ததுள்ளது என்பதை தேர்தல் முடிவுகளின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

தபால் வாக்குகளில் திமுக முன்னிலை

அதேபோல் தபால் வாக்குகளில் ஆளும் தவெகவை விட திமுக, அதிமுகவே அதிக வாக்குகளை பெற்றிருக்கின்றன. தாராபுரம் தொகுதியில் மொத்தம் 1,406 தபால் வாக்குகள் பதிவாகின. இதில் அதிகபட்சமாக திமுக 613 வாக்குகளையும், அதிமுக 406 வாக்குகளையும் பெற்றன. ஆனால் தவெக 255 வாக்குகளையே பெற்றிருக்கிறது. நாம் தமிழர் கட்சிக்கு 19 வாக்குகள், சிபிஐ 7 வாக்குகளும் பெற்றிருக்கின்றன.

தொண்டர்கள் கொண்டாட்டம்

தாராபுரம் தொகுதியில் முதலமைச்சர் விஜய் இரண்டு நாட்கள் பரப்புரை மேற்கொண்டார். தவெக அதன் இரண்டு இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்றதை அடுத்து அவர்களின் தொண்டர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர். பட்டாசு வெடித்து, பொது இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES