• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /ஜெம் வீரமணி வழக்கு: யாரையும் காப்பாற்ற உத்தரவிடவில்லை... ஸ்டாலின் சொன்ன விளக்கம்

ஜெம் வீரமணி வழக்கு: யாரையும் காப்பாற்ற உத்தரவிடவில்லை... ஸ்டாலின் சொன்ன விளக்கம்

MK Stalin : ஜெம் வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் கடந்த திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை என்றும் எவரையும் காப்பாற்ற வேண்டிய தேவை திமுக ஆட்சிக்கு இல்லை என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Written BySudharsan G
Published: Sep 25, 2026, 07:18 AM IST|Updated: Sep 25, 2026, 07:23 AM IST
joinshare
ஜெம் வீரமணி வழக்கு: யாரையும் காப்பாற்ற உத்தரவிடவில்லை... ஸ்டாலின் சொன்ன விளக்கம்
Image Credit: GEM Veeramani (Left), MK Stalin (Right) | Image Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா:  பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

2

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

3

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

4

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

5

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

MK Stalin On GEM Veeramani Case Allegation : பல்வேறு சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டிருப்பதும் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவருக்கு துணையாக செயல்பட்டதாக சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோர் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல ஆண்டுகளாக சிறுமிகளிடம் ஜெம் வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் உதவியுடன் அத்துமீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், 2019ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட வீடியோ அடங்கிய பென்டிரைவ் கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அடையாளம் தெரியாத நபரால் சென்னை காவல்துறையினரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Explained : ஜெம் வீரமணி வழக்கு கடந்து வந்த பாதை! கைது to முதல்வர் உத்தரவு

கடந்தாண்டு வழக்குப்பதிவு

தொடர்ந்து இந்திய குழந்தைகள் நல அமைப்பு கடந்த அக்டோபர் 6ஆம் தேதி புகார் அளித்தது. அடுத்த நாளே (அக். 7)வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வீடியோவின் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட சிறுமியை கண்டறிய முடியவில்லை என காவல்துறை தெரிவித்தது.

விபச்சார தடுப்பு பிரிவின் உதவி ஆணையராக இருந்த யாஸ்மின்தான் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக (IO) இருந்தார். இவர்தான் வீரமணிக்கு எதிரான வழக்கை முடித்து வைப்பதாக கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அன்று போக்சோ நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.

மறுவிசாரணைக்கு உத்தரவு

இந்த அறிக்கையை ஏற்காத போக்சோ நீதிமன்ற நீதிபதி, கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி மறுவிசாரணைக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து ஆகஸ்ட் 28ஆம் தேதி ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டு, அடுத்த நாளே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிகள் அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிறுமிகளின் அடையாளத்தையும் போலீசார் பாதுகாப்பாக வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தீவிரம் காட்டும் காவல்துறை

சாந்தி, மகேந்திர சிம்ஹன் மட்டுமின்றி ஜெம் வீரமணியிடம் 23 ஆண்டுகாலமாக பணியாற்றி வந்த கணேசன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் SRMU தலைவர் கண்ணையனின் மகன் பிரகாஷிற்கு சென்னை காவல்துறை சம்மன் மற்றும் லுக்-அவுட் நோட்டீஸை அனுப்பியிருக்கிறது. இவர் அரசியல் புள்ளிகள், அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு 70 கோடி ரூபாய் வரை செட்டில்மென்ட்டுக்கு உதவியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க | வீரமணி வழக்கில் ஒருத்தரையும் விடக்கூடாது” - அமல்ராஜுக்கு முதல்வர் விஜய் போட்ட உத்தரவு!

திமுக மீது குற்றச்சாட்டு; ஸ்டாலின் பதில்

மேலும், கடந்த திமுக ஆட்சியில் இந்த வழக்கின் விசாரணை நியாயமான முறையில் நடைபெறவில்லை என்றும்; இதில் அரசியல் தலையீடுகள் இருந்திருக்கலாம் என்றும் ஆளும் தவெக தரப்பு குற்றஞ்சாட்டி வந்தது. இந்தச் சூழலில், முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் அவரது X பக்கத்தில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளார்.

சிறுமிகளுக்கு எதிரான மனிதத்தன்மையற்ற இழிவான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். இதில் வீரமணியும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள், அவரைக் காப்பாற்ற முயன்றவர்கள் எவராயினும், எத்தகைய பொறுப்பில் இருந்தவர்கள் ஆயினும் தப்பிக்க…

— M.K.Stalin (@mkstalin) September 24, 2026

திமுகவின் நிலைப்பாடு

அதில் அவர், "சிறுமிகளுக்கு எதிரான மனிதத்தன்மையற்ற இழிவான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். இதில் வீரமணியும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள், அவரைக் காப்பாற்ற முயன்றவர்கள் எவராயினும், எத்தகைய பொறுப்பில் இருந்தவர்கள் ஆயினும் தப்பிக்க கூடாது. அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கின் முடிவு, இனி இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடும் எண்ணமே எவருக்கும் வராத வகையில் அமைய வேண்டும் என்பதுதான் ஓர் அரசியல் இயக்கத்தின் தலைவனாகவும், ஒரு குடும்பத்தலைவனாகவும், மனசாட்சி உள்ள மனிதனாகவும் எனது விருப்பம் எனவும் மு.க.ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

யாரை காப்பாற்ற உத்தரவிடவில்லை...

ஆனால், இந்த வழக்கில் தேவையே இல்லாமல், குறுகிய அரசியல் நோக்கத்துடன் திமுகவின்  மீது பொய்யாக அவதூறுகளைப் பரப்பி, ஒரு கூட்டம் குளிர்காய்ந்து வருவது மிகவும் அருவெறுப்பான செயலாகும் என்றும்; வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் கடந்த திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாரபட்சமின்றி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, தண்டனை பெற்றுத் தரப்பட்டது என குறிப்பிட்டுள்ள மு.க. ஸ்டாலின், இவை அனைத்தும் பொதுவெளியில் இருக்கும், மறுக்க முடியாத உண்மைகள் என்றும்; எவரையும் காப்பாற்ற வேண்டிய தேவை திமுக ஆட்சிக்கு இல்லை என்றும் குறிப்பிட்டிள்ளார்.

தவெக மீது குற்றச்சாட்டு

தற்போதைய தவெக ஆட்சியில் நடப்பதுபோல, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது அனைத்துப் பத்திரிகைகளின் முன்பும் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பின்னரும், நடவடிக்கை எடுக்காமல், சமரசம் பேசி வழக்கை முடித்து வைக்கும் இழிசெயல்கள் திமுக ஆட்சியில் நடைபெறவில்லை என தவெகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

மு.க. ஸ்டாலின் கோரிக்கை

சிறுமிகளுக்கு ஏற்பட்ட துயரத்தை இடைத்தேர்தலுக்கான கருவியாகப் பயன்படுத்தும் இழிவான செயலையும், முற்றிலும் பொய்யான அவதூறுகளை ஊடகங்கள் மூலமாக பரப்புவதையும் ஆளும்கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என தவெக மீது மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடி உள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி பெற்றுத் தருவது மட்டுமே நம் அனைவரின் நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை

இவை ஒருபுறம் இருக்க, 2024ஆம் ஆண்டே சென்னையின் கூடுதல் ஆணையராக இருந்த கண்ணனிடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்ததாக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ரஞ்சன் குமார் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில், அந்த காலகட்டத்தில் சென்னை காவல் ஆணையராக இருந்த அருண், கூடுதல் காவல் ஆணையராக இருந்த கண்ணன், இந்த வழக்கை விசாரித்த காவல் அதிகாரி யாஸ்மின் ஆகியோர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்... ஜெம் வீரமணி வழக்கு காரணமா?

Add Zee News as a Preferred Source
TAGS:
MK Stalin