• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்... ஜெம் வீரமணி வழக்கு காரணமா?

2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்... ஜெம் வீரமணி வழக்கு காரணமா?

ஜெம் வீரமணி மீது பாலியல் புகார் எழுந்த நேரத்தில் சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் மற்றும் சென்னை கூடுதல் ஆணையராக இருந்த கண்ணன் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

Written BySudharsan G
Published: Sep 24, 2026, 06:48 PM IST|Updated: Sep 24, 2026, 07:06 PM IST
joinshare
2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்... ஜெம் வீரமணி வழக்கு காரணமா?
Image Credit: Arun IPS (Left) and Kannan IPS (Right) | Image Source : Facebook / Greater Chennai Police

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

பல்வேறு சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய குற்றச்சாட்டின் கீழ், போக்சோ வழக்கில் பிரபல தொழிலதிபரான ஜெம் வீரமணி (84) கைதானார். தொடர்ந்து இந்த வழக்கில் சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் வீரமணியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சிறையிலேயே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

மேலும் படிக்க | வீரமணி வழக்கில் ஒருத்தரையும் விடக்கூடாது” - அமல்ராஜுக்கு முதல்வர் விஜய் போட்ட உத்தரவு!

2 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

இந்தச் சூழலில், கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் ஐபிஎஸ் மற்றும் காவலர் பயிற்சி பள்ளியின் தலைவராக இருந்த அருண் ஐபிஎஸ் ஆகியோர் காத்திருப்பு பட்டியலுக்கு தமிழ்நாடு அரசால் மாற்றப்பட்டுள்ளனர். கோவை மேற்கு மண்டல ஐஜி ஆர்.வி. ரம்யா பாரதிக்கு, கோவை மாநகர காவல் ஆணையர் பொறுப்பு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Senior IPS officer A. Arun, who had served as Chennai Police Commissioner and was currently ADGP, Tamil Nadu Police Academy, has been transferred and brought to Vacancy Reserve (VR) without posting.

The transfer comes amid raging controversy over alleged inaction by the city…

— ANI (@ANI) September 24, 2026

ஜெம் வீரமணி வழக்கு காரணமா?

தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையின் பின்னணியில் ஜெம் வீரமணி வழக்கு இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. முன்னதாக, 2024ஆம் ஆண்டு நவம்பரில் காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் தலைவர் ரஞ்சன் குமார் வீரமணி குறித்து வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்திருந்ததாக தெரிவித்தார்.

அந்த நேரத்தில், சென்னை காவல் ஆணையராக அருணும், சென்னை கூடுதல் ஆணையராக கண்ணனும் பொறுப்பு வகித்தனர். ஆதாரத்துடன் புகார் அளித்தும், பாதிக்கப்பட்ட பெண்ணை அடையாளம் காண இயலவில்லை என நீதிமன்றத்தில் வழக்கை முடிக்க போலீசார் முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், இவர்கள் இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியிருப்பது கவனிக்கத்தக்கது.

மேலும் படிக்க | Explained : ஜெம் வீரமணி வழக்கு கடந்து வந்த பாதை! கைது to முதல்வர் உத்தரவு

சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள் காவல்

முன்னதாக, ஜெம் வீரமணி வழக்கில் கைதான சாந்தி, மகேந்திர சிம்ஹனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, சென்னை போக்சோ நீதிமன்றத்தில் சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். சென்னை போக்சோ நீதிமன்றத்தில் இருந்து முகத்தை மூடியபடி சாந்தி அழைத்துச் செல்லப்பட்டார்.

ஜெம் வீரமணி வழக்கில் சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

பொதுவெளியில் பகிரக் கூடாது...

மேலும், இந்த போக்சோ வழக்கு தொடர்பாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ளது.

அதில், போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் தொடர்பான ஒரு முக்கிய வழக்கை சென்னை பெருநகர காவல்துறை விசாரித்து வரும் நிலையில், சிறுமியின் புகைப்படம் அல்லது காணொளி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

🚨 போக்சோ வழக்கு தொடர்பாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு 🗣️

🛡️ சென்னை பெருநகர காவல்துறை, போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் தொடர்பான ஒரு முக்கிய வழக்கை விசாரித்து வருகிறது. இதில், சிறுமி ஒருவரின் புகைப்படம் அல்லது காணொளி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில்… pic.twitter.com/8mDKXAvG9E

— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) September 24, 2026

சிறுமி ஒருவரின் இத்தகைய புகைப்படங்களைப் பகிர்வது ஒரு குற்றமாகும் என்றும் அத்தகைய புகைப்படங்களை வெளியிடுவது போக்சோ சட்ட பிரிவு 23(2)-இன் கீழ் குற்றமாகக் கருதப்படுகிறது என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. எனவே, இது தொடர்பான தகவல்களைப் பொதுவெளியில் பகிர வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்கள் ஏதேனும் இருருந்தால், அவற்றை பெருநகர சென்னை காவல்துறையிடம் சமர்ப்பிக்குமாறும் போலீசார் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது

மேலும் படிக்க | Explained : புதிய தலைமை செயலகம்.. பல்லவன் இல்லத்திற்கு மாறுமா? முதல்வர் அடுத்த மூவ்..?

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu