• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்: தானியங்கி சுங்கக் கட்டண வசூல் முறை அறிமுகம்

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்: தானியங்கி சுங்கக் கட்டண வசூல் முறை அறிமுகம்

Multi-Lane Free Flow tolling system: அக்டோபர் 1, 2026 நள்ளிரவு முதல் 'மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ' (MLFF) எனப்படும் பல வழித்தட தடையற்ற போக்குவரத்து முறை செயல்பாட்டுக்கு வந்தது. இதன் மூலம், தமிழ்நாட்டிலேயே முழுமையான தடையற்ற (barrier-free) சுங்கக் கட்டண வசூல் முறையை அமல்படுத்திய முதல் சுங்கச்சாவடியாக பரனூர் திகழ்கிறது.

Written BySripriya Sambathkumar
Published: Oct 01, 2026, 01:12 PM IST|Updated: Oct 01, 2026, 01:17 PM IST
joinshare
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்: தானியங்கி சுங்கக் கட்டண வசூல் முறை அறிமுகம்
Image Credit: Multi-Lane Free Flow tolling system

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

2

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

3

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

4

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

5

RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சென்னை: வாகன ஓட்டிகளுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள பரனூர் சுங்கச்சாவடியில், வாகனங்கள் நிற்காமல் கடந்து செல்லும் வகையிலான முழுமையான தானியங்கி சுங்கக் கட்டண வசூல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 1, 2026 நள்ளிரவு முதல் 'மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ' (MLFF) எனப்படும் பல வழித்தட தடையற்ற போக்குவரத்து முறை செயல்பாட்டுக்கு வந்தது. இதன் மூலம், தமிழ்நாட்டிலேயே முழுமையான தடையற்ற (barrier-free) சுங்கக் கட்டண வசூல் முறையை அமல்படுத்திய முதல் சுங்கச்சாவடியாக பரனூர் திகழ்கிறது.

பல வழித்தட தடையற்ற போக்குவரத்து முறை

இந்த புதிய முறையானது, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்குக் காத்திருக்கும் நேரத்தையும் போக்குவரத்து நெரிசலையும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி (GST) சாலையில் அமைந்துள்ள பரனூர் சுங்கச்சாவடி, சென்னையைத் தென் மாவட்டங்களுடன் இணைக்கும் ஒரு பரபரப்பான சுங்கச்சாவடியாகும். தினமும் சுமார் 46,500 வாகனங்கள் இந்தச் சுங்கச்சாவடி வழியாகச் செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காந்தி ஜெயந்தி வார இறுதி நாட்கள் மற்றும் வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னதாகவே இந்த MLFF முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய முறை இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பெரிய அளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் படிக்க | கட்டணமில்லா பேருந்து திட்டம்: நாளை முதல்... இந்த பஸ்களில் இனி டிக்கெட் எடுக்க வேண்டாம்!

புதிய MLFF முறை எவ்வாறு செயல்படுகிறது?

இந்த புதிய முறையின் கீழ், தற்போதுள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக RFID ரீடர்கள், ரேடார் ஸ்கேனர்கள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தானியங்கி வாகன எண் பலகை கண்டறியும் (ANPR) கேமராக்கள் பொருத்தப்பட்ட உயரமான கட்டமைப்புகள் (gantries) அமைக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய முறையில் செல்லுபடியாகும் ஃபாஸ்டேக் (FASTag) கணக்குகள் கொண்ட வாகனங்கள் சுங்கச்சாவடியில் நிற்காமல் கடந்து செல்ல முடியும். வாகனம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் இடத்தை நெருங்கும்போது, ​​RFID ரீடர்கள் ஃபாஸ்டேக்கை ஸ்கேன் செய்கின்றன.

RFID அமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கொண்ட ANPR கேமராக்கள் வாகனம் மற்றும் அதன் ஃபாஸ்டேக் கணக்கை அடையாளம் கண்டு, அதற்கான சுங்கக் கட்டணத்தை இணைக்கப்பட்ட கணக்கிலிருந்து தானாகவே கழிக்கின்றன.

ஒருவேளை ஃபாஸ்டேக் வேலை செய்யவில்லை என்றால், ANPR கேமராக்கள் வாகனத்தின் பதிவு எண்ணைப் படம் பிடித்து, மாற்று நடைமுறை மூலம் சுங்கக் கட்டணத்தை வசூலிக்க உதவுகின்றன.

ஃபாஸ்டேக் இல்லாமலோ அல்லது போதுமான இருப்புத் தொகை இல்லாமலோ பயணிக்கும் வாகனங்களுக்கு, நடைமுறையில் உள்ள விதிகளின்படி அபராதம் விதிக்கப்படலாம்.

மேலும் படிக்க | Tamil News LIVE: CM விஜய் முக்கிய அறிவிப்பு; பைனலில் இந்திய அணி

MLFF முறையின் முக்கிய நன்மைகள் என்ன?

போக்குவரத்து நெரிசல்: 'மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ' (பல வழித்தட தடையற்ற போக்குவரத்து) சுங்கக் கட்டண வசூல் முறையால், வாகனங்கள் சுங்கச்சாவடியில் நிற்கவோ அல்லது வேகத்தை வெகுவாகக் குறைக்கவோ வேண்டியதில்லை. இதன் காரணமாக சுங்கச்சாவடிகளில் ஏற்படும் நெரிசல் குறைந்து வாகன வரிசைகளைக் குறைவதோடு, நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஓட்டத்தையும் இது மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எரிபொருள் நுகர்வு, உமிழ்வு: வழக்கமான சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பதால் ஏற்படும் பயண நேரம், எரிபொருள் நுகர்வு மற்றும் வாகன உமிழ்வு ஆகியவற்றைக் குறைக்கவும் இந்த அமைப்பு உதவுகிறது.

பராமரிப்புப் பணிகளின் தேவை: பாரம்பரிய சுங்கச்சாவடிகளுடன் தொடர்புடைய பராமரிப்புப் பணிகளின் தேவையை இப்புதிய அமைப்பு குறைக்கும் என்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தெரிவித்துள்ளது.

பிற சுங்கச்சாவடிகளிலும் MLFF அமைப்பு

பரனூரில் செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சோதனை ஓட்டங்களுக்குப் பிறகு, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள நெமிலி மற்றும் வாலாஜா அருகிலுள்ள சென்னசமுத்திரம் உள்ளிட்ட பிற சுங்கச்சாவடிகளிலும் MLFF அமைப்பைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மதுரவாயல் வழியாக தாம்பரம் மற்றும் புழல் பகுதிகளை இணைக்கும் சென்னை புறவழிச்சாலையில் (Chennai Bypass) உள்ள சுங்கச்சாவடிகளிலும் இந்த மேம்பட்ட சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறையை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளிகளையும் NHAI கோரியுள்ளது.

தமிழகம் முழுதும் இந்த முறை செயல்படுத்தப்பட்டால், போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறைந்து வாகன ஓட்டிகளுக்கு உகந்த சூழல் மாநிலம் முழுதும் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் படிக்க |  PM Yasasvi மூலம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: எப்படி விண்ணப்பிப்பது? சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu