SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained : ஜெம் வீரமணி வழக்கு கடந்து வந்த பாதை! கைது to முதல்வர் உத்தரவு

ஜெம் குழுமத்தலைவர் வீரமணி மீதான போக்சோ வழக்கு குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Sep 21, 2026, 17:54 IST | Updated: Sep 21, 2026, 18:06 IST
Image Credit: Veeramani | X Page
Join

Veeramani Case : தமிழ்நாடு முழுவதும், கடந்த சில நாட்களாகவே ஜெம் வீரமணி குறித்த பேச்சுதான் தீயாய் பரவி வருகிறது. இவர், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார் என்பது, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கு குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

யார் இந்த ஜெம் வீரமணி?

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆர்.வீரமணி, கிரானைட் தொழில்துறையின் முன்னோடிகளில் ஒருவராக இருக்கிறார். பல தொழில்துறை அமைப்புகளுக்கு தலைமை தாங்கியிருக்கும் இவர், மத்திய அரசால் கவுரவிக்கப்பட்ட தொழிலதிபர்களுள் ஒருவர். இவருக்கு தற்போது 84 வயது ஆகிறது.

கைது:

கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் 6ஆம் தேதி,சென்னை அண்ணா நகரை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் குழந்தைகள் உரிமை ஆர்வலர் ஒருவர், திடுக்கிடும் புகர் ஒன்றை, சென்னை விபச்சார தடுப்பு பிரிவில் பதிவு செய்திருந்தார். அந்த புகாருடன், ஒரு பென் ட்ரைவும் இணைக்கப்பட்டிருந்தது.

இதில், தொழிலதிபர் வீரமணி ஒரு சிறுமியை கொடுமைபடுத்தும், பாலியல் வன்கொடுமை கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனை அடிப்படையாக வைத்து, முதற்கட்டமாக வழக்கு ஒன்று பதிவுசெய்யப்பட்டது.

இந்த வழக்கில், பென் ட்ரைவின் வீடியோவில் இருந்த காட்சிகள் தெளிவாக இல்லை என்றும், பதிக்கப்பட்ட சிறுமியை அடையாளம் காண முடியவில்லை என்றும் கூறி, சென்னை போலீசார் இந்த வழக்கின் விசாரணையை முடிக்க இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

போக்சோ சிறப்பு நீதிமன்றம், இந்த இறுதி அறிக்கையை நிராகரித்ததோடு, மேலும் இந்த வழக்கை மீண்டும் தீவிரமாக மறு விசாரணை செய்ய உத்தரவிட்டது. அதோடு, உதவி ஆணையர் ராஜலட்சுமியின் தலைமையில் ஒரு சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது.

கைது நடவடிக்கை:

மேற்கூறிய நீதிமன்ற உத்தரவின் பேரில், மறுவிசாரணை நடந்தது. இதில், வீடியோவில் இருந்த பாதிக்கப்பட்ட அந்த பெண், தேடி கண்டுபிடிக்கப்பட்டார். அவர், சம்பவத்தின் போது சிறுமியாக இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. அவரிடம், நீதித்துறை நடுவர் முன்னிலையில் வாக்குமூலமும் பெறப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி, வீரமணி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் மட்டுமல்லாமல், இந்த குற்றங்களுக்கு உடந்தையாகவும், வீரமணியிடம் குழந்தைகளை அழைத்து சென்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டு சாந்தி மற்றும் அவருடைய கணவர் மகேந்திர சிம்மன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பல், ஏழை, எளிய சிறுமிகளை டார்கெட் செய்து, இந்த குற்றங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. வீரமணியால், குறைந்தது, 9 சிறுமிகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தப்பிக்க விட்டார்களா?

வீரமணி குறித்து புகார் பதியப்பட்டது, திமுக ஆட்சியில் இருந்த காலத்தில்தான். தற்போது அது தவெகவின் ஆட்சியில் விசாரணைக்கு வந்திருக்கிறது. இப்போது பலருக்கும் இருக்கும் கேள்வி என்னவென்றால், திமுக ஆட்சியில் ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணியை அந்த ஆட்சியில் இருந்த அதிகாரிகள் தப்பிக்க விட்டார்களா? என்பதுதான். மேலும், வீரமணி முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்கு அறிமுகமானவர் என்று தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டுகிறார்.

அதே சமயத்தில் இந்த புகார் பதியப்பட்ட போது, விபச்சார தடுப்பு பிரிவு உதவி கமிஷனரான யாஸ்மின் விசாரணை அதிகாரியாக செயல்பட்டு வந்தார். இவர்தான், அந்த வழக்கு குறித்து விசாரிக்காமௌம், சரியாக கையாளாமலும் தாமதப்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து யாஸ்மின் மீதும், இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் மீதும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது, இந்த வழக்கில் முந்தைய காலத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் எவ்வாறு செயல்பட்டனர் என்பது குறித்த தீவிர விசாரணையும், சம்மன் அனுப்பும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க | காலை உணவுத் திட்டம் உணவுப் பட்டியல்! பள்ளி மாணவர்களுக்கு அரசின் குட் நியூஸ்

திமுக தரப்பில் கூறுவது என்ன?

வீரமணி விவகாரத்தில் திமுக நடவடிக்கை எடுக்க தவறுவதாக தவெகவினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து, திமுகவின் மூத்த வழக்கறிஞர், என்.ஆர்.இளங்கோ சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், திமுக இதை நீர்த்துப்போக செய்ததாக ஒரு கருத்து பரவலாக பகிரபட்டு வருவதாகவும் அது முற்றிலும் தவறான கருத்து என்றும் கூறியுள்ளார். கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் பதியப்பட்ட இந்த வழக்கு, அப்போது காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வீடுகள் சோதனையிடப்பட்டு, அப்போதைக்கு கிடைத்திருந்த ஆதாரங்களை வைத்து மேல் புலன் விசாரணை செய்து, உரிய ஆதாரங்கள் கிடைக்காததால் நீதிமன்றத்தில் ஆதாரங்கள் கிடைக்கவில்லை, இந்த வழக்கை கைவிடாமல் உரிய ஆதாரங்கள் கிடைக்கும் வரை மேல் விசாரணையை தள்ளி வைத்துள்ளோம் என்று போக்சோ நீதிமன்றத்தில் குறிப்பாணை தாக்கல் செய்த்தாக தெரிவித்திருந்தார்.

முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு:

வீரமணியால் பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் தற்போது விசாரணை நடைப்பெற்று வருகிறது. இதையடுத்து, போக்சோ சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியோடு, புழல் மத்திய சிறையில் வைக்கப்பட்டிருந்த வீர்மணியை தங்களுடைய காவலில் எடுத்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எந்த குற்றவாளியும் தப்பிவிடக்கூடாது என்று, சென்னை காவல் ஆணையர் அமல்ராஜிற்கு, தமிழ்நாடு முதல்வர் விஜய் நேரடியாகவே உத்தரவிட்டிருக்கிறார். இந்த விவகாரத்தை தாேண்ட தோண்ட, பல்வேறு உண்மைகள் வெளியில் வரும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், 50 வயது பெண் ஒருவர், 1989ஆம் ஆண்டில் தான் 13 வயதாக இருந்த போது வீரமணியால் பாதிக்கப்பட்டதாக வாக்குமுலம் ஒன்றை கொடுத்திருக்கிறார். பிற்கால்த்தில் கல்வி உதவி வழங்குவ்தாக கூறி, ஏழை சிறுமிகளை வீரமணியிடம் தான் அறிமுகப்படுத்தியடகவும் அவர் கூறியுள்ளார். இதுவரை, 7 பெண்களின் வாக்குமூலங்களும் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க | குழந்தை தொழிலாளர்கள் - கடை உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் கடும் எச்சரிக்கை

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES