கன்னியாகுமரி, மாவட்டம் நாகர்கோவில் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவு பீரோ பூட்டை உடைத்து 118 பவுன் தங்க நகைகள் 50 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தொழிலதிபர் வினோத் குமார் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலீஸார் விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்பத்து கோணம் வி. ஜ. பி கார்டன் பகுதியில் வசித்து வருபவர் தொழிலதிபர் வினோத் குமார் நேற்று மனைவி மதுமிதா வுடன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றவர்கள் நள்ளிரவில் வீட்டுக்கு வந்தார்கள் அப்போது இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ பூட்டுகள் உடைக்கப்பட்டு அதிலிருந்த 118 பவுன் தங்க நகைகள் 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தடயங்கள் சேகரித்து விசாரனை செய்து வருகின்றனர் வீடு மற்றும் அக்கம் பக்கம் உள்ள சிசிடிவி கேமாரக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர் இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டின் உள்ளே புகுந்த கொள்ளையர்கள், கதவை மெஷின் கட்டர் மூலம் (Machine cutter) அறுத்து உள்ளே சென்று கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
சம்பவம் நடந்த வீட்டின் உரிமையாளரும் தொழிலதிபருமான வினோத் குமாரின் மனைவியின் பெயர், மதுமிதா. இவர், இன்ஸ்டாவில் தன் குடும்பத்துடன் இருப்பது போன்று அடிக்கடி பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அது மட்டும் கிடையாது, நகைக்கடைக்கு நகை வாங்க செல்வது, நகை வாங்குவது, பணத்தை குவித்து வைப்பது, தன் குழந்தைக்கு பணக்குளியல் செய்வது போன்ற காட்சிகளை அடிக்கடி பதிவிட்டு வந்தார். இது குறித்து யாரும் எதுவும் சொல்லி விடக்கூடாது எனும் காரணத்திறாக உஷாராக கமெண்ட் செக்ஷனை ஆஃப் செய்து விடுவார். சும்மா இருக்கும் வீட்டிலேயே பூட்டை உடைத்து, நகையை திருடும் கும்பல் இருக்கும் போது, அவர்கள் கண்களில் படும்படி இவர் தங்கள் வீட்டில் இவ்வளவு நகையும் பணமும் இருப்பதாக பதிவிட்டது, இந்த திருட்டுக்கு வழி வகுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதுவரை இவர் இது குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என்பதற்கான தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.