பள்ளி மாணவர்களுக்கு புதுச்சேரியில் மதிய உணவு திட்டத்தின் கீழ், உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, புதுச்சேரி சட்டப்பேரவையில், பொதுப்பணி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவை, கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் ஜவகர் சமீபத்தில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் உள்ளிட்ட பிராந்தியங்களில் இருக்கு மீன் வளங்களை பெருக்கி, அதன் மூலமாக ஏற்றுமதி, வேலைவாய்ப்புகள், மீன் தொடர்புடைய தொழில்கள் தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
புதுச்சேரி பிராந்தியத்தின் பாகூர் பகுதியிலும், காரைக்கால் பிராந்தியத்தின் போலகம் தொழிர்பேட்டை பகுதியிலும், மீன்வள பூங்கா ஒன்றினை அமைத்திடவும், ஏனாம் பிராந்தியத்தில், கல் நண்டு வளர்ப்பு முறையினை மேம்படுத்திடவும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் ஆலோசனை வழங்கி இருக்கிறார். இத்திட்டங்களுக்கு ஆணையம் தக்க நிதியுதவி அளித்திடும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் தற்போது முதன்முறையக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, மதிய உணவு வழங்கும் போது, அதனுடன் சேர்த்து மீனும் வழங்கிட, புதுச்சேரி மற்றும் ஏனாம் பிராந்தியத்தில் ஒரு பளியில் பரிச்சார்த்த முறையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் முதன்மையாக இணை இயக்குநர் கந்தன், சென்னை பிராந்தியத்தின் தலைவர் அருள்மூர்த்தி, மீன்வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில், இணை இயக்குநர் கோவிந்தசாமி, ஏனாம் மீன்வள துணை இயக்குநர் கொந்தையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.