• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /சென்னைவாசிகளுக்கு சூப்பர் செய்தி! ரூ.150 கோடி செலவில் சாலை மேம்பாட்டு பணிகள்

சென்னைவாசிகளுக்கு சூப்பர் செய்தி! ரூ.150 கோடி செலவில் சாலை மேம்பாட்டு பணிகள்

Chennai: பெருநகர சென்னை மாநகராட்சி (GCC), தனது 15 மண்டலங்களிலும் உள்ள சேதமடைந்த பேருந்து வழித்தடங்கள் மற்றும் உட்புறச் சாலைகளை சுமார் ₹150 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written BySripriya Sambathkumar
Published: Sep 25, 2026, 01:03 PM IST|Updated: Sep 25, 2026, 01:12 PM IST
joinshare
சென்னைவாசிகளுக்கு சூப்பர் செய்தி! ரூ.150 கோடி செலவில் சாலை மேம்பாட்டு பணிகள்
Image Credit: Representative / Chennai Roads Revamp

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் அரசாங்கங்கள் மாறினாலும், மழை காலத்தில் மக்கள் படும் அவஸ்தைகள் மட்டும் மாறாமல் அப்படியே தொடர்கின்றன. மும்பை போன்ற நகரங்களில் ஏற்படும் அதே நிலைதான் சென்னையிலும் உள்ளது. பழுதடைந்த சாலைகள், முறையற்ற கழிவுநீர் வடிகால் என மழையுடன் சேர்ந்து ஒவ்வொரு முறையும் இவையும் மக்களை பாடாய் படுத்துகின்றன.

இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி (GCC), தனது 15 மண்டலங்களிலும் உள்ள சேதமடைந்த பேருந்து வழித்தடங்கள் மற்றும் உட்புறச் சாலைகளை சுமார் ₹150 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 160 கி.மீ நீளமுள்ள 780 சாலைகளை (அதாவது, 45.13 கி.மீ நீளமுள்ள 66 பேருந்து வழித்தடங்கள் மற்றும் 114.87 கி.மீ நீளமுள்ள 714 உட்புறச் சாலைகள்) மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கைகளை (DPRs) மாநகராட்சி நிர்வாகம் தயாரித்துள்ளது.

பழுதடைந்த சாலைகள் பற்றிய புகார்கள்

சென்னையில் உள்ள சாலைகள் பல இடங்கள் சேதமடைந்திருப்பதாகவும், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகவும் புகார்கள் வந்தன. இதன் தொடர்ச்சியாக, சென்னையில் சேதமடைந்த பேருந்து வழித்தட சாலைகள் மற்றும் உட்புற சாலைகளை மேம்படுத்தும் பணிகளுக்கு சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க | சென்னை உயர் நீதிமன்றத்தில் 115 காலிப் பணியிடங்கள்.. கைநிறைய சம்பளம்.. டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

150 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட அறிக்கை

  • சாலைகளை மேம்படுத்தும் பணிகளுக்காக, 160 கிலோமீட்டர் நீளமுள்ள 780 சாலைகளை மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
  • மொத்தம் 150 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திட்ட அறிக்கைகள், நிர்வாக ஒப்புதலுக்காக தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
  • முதற்கட்டமாக 15 மண்டலங்களிலும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 
  • இதில் 66 பேருந்து வழித்தட சாலைகளில் 45 புள்ளி 13 கிலோமீட்டரும், 714 உட்புற சாலைகளில் 114 புள்ளி 87 கிலோமீட்டரும் அடங்கும்.
  • சென்னையில் 360 கிலோமீட்டர் பேருந்து வழித்தட மற்றும் உட்புற சாலைகளை மேம்படுத்த 2026-27ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சட்டப்பேரவையில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு

முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதன் அடிப்படையில், இந்த சாலை மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.  தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகமான டியூஃபிட்கோ திட்ட மதிப்பீடுகளை ஆய்வு செய்யும்.

இதைத்தொடர்ந்து, செப்டம்பர் 29ஆம் தேதி சி.எம்.ஐ.யு.டி.எம் திட்டத்திற்கான மாநில அளவிலான ஒப்புதல் குழுவிடம் திட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்திற்குத் தேவையான ஒப்புதல்கள் கிடைத்தவுடன் உடனடியாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

தற்போது சென்னை மாநகராட்சி, 418.5 கிலோமீட்டர் நீளம் மொண்ட 488 பேருந்து வழித்தட சாலைகள் மற்றும் 5,654 கிலோமீட்டர் நீளம் கொண்ட 35,978 உள் சாலைகள் ஆகியவற்றை பராமரித்து வருகின்றது. சாலை அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், நடைபாதைகள், சந்திப்பு பகுதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளையும் மாநகராட்சியின் பேருந்து வழித்தட சாலைகள் துறை மேற்கொண்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழைக்கு முன் பணிகள் முடியுமா?

சாலைப் பணிகளை வடகிழக்கு பருவமழைக்கு முன் செய்து முடிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதற்குள் சாலைப் பணிகள் முடிந்தால், சென்னையில் பேருந்து பயணம் மற்றும் பொதுமக்களின் தினசரி போக்குவரத்து மேலும் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | சென்னையில் செப். 29 வரை இந்த இடங்களுக்கு தண்ணீர் வராது... முழு விவரம் இதோ

பருவமழைக்குப் பிறகு இரண்டாம் கட்டப் பணிகள்

மொத்தம் 360 கி.மீ நீளமுள்ள சாலைகளைச் சீரமைக்க ₹300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். பருவமழைக்குப் பிறகு இத்திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் பேருந்து வழித்தடச் சாலைகளை மாநில நெடுஞ்சாலைத் துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளவுள்ளது. இவற்றின் ஒட்டுமொத்தப் பராமரிப்புப் பணிகளுக்காக சுமார் ₹1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை பராமரிப்புப் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்தவுடன் சென்னையின் தோற்றமும், போக்குவரத்தும் மேன்மையடையும் என சென்னைவாசிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க | சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு : படித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்

Add Zee News as a Preferred Source
TAGS:
Chennai