SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மதுராந்தகம், தாராபுரம்: நாளை மாலை முதல் அமலுக்கு வரும் விதிகள் என்னென்ன?

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் தேர்தல் பரப்புரை நாளையுடன் நிறைவடையும் நிலையில், அதற்கு பின் வாக்குப்பதிவு வரை அமலில் இருக்கும் விதிமுறைகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.

Written By Sudharsan G
Published: Oct 03, 2026, 04:03 PM IST | Updated: Oct 03, 2026, 04:10 PM IST
Join

Madurantakam Dharapuram By-Election Updates: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெறும்.

இந்நிலையில், நாளையுடன் (அக். 4) இரு தொகுதிகளிலும் பரப்புரை நிறைவடைய இருக்கிறது. இதனால், நாளை மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் சில விதிகள் நடைமுறையில் இருக்கும். இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவற்றை இங்கு வரிசையாக காணலாம்.

மேலும் படிக்க | ஆபாசம், வன்மம், வக்கிரம்.. சத்யபாமாவை உருவக்கேலி செய்த ஸ்டாலினை விளாசிய CM விஜய்

நாளை மாலை அமலுக்கு வரும் விதிமுறைகள்

இந்த விதிமுறைகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது அபராதம், சிறை என இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

மேலும் படிக்க | பல்டி பாமா... சர்ச்சையை கிளப்பிய ஸ்டாலின் பேச்சு - அமைச்சர்கள் கண்டனம்

வாக்குப்பதிவு அன்று கவனிக்க வேண்டியவை

இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்கள்/அரசியல் கட்சிகளின் தேர்தல் அலுவலகம் வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர்கள் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது.

வாகன அனுமதி தொடர்பாக வாக்குப்பதிவு அன்று வேட்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

  1. வேட்பாளரின் சொந்த பயன்பாட்டிற்கான ஒரு வாகனம்
  2. தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்கான தொகுதிக்கு ஒரு வாகனம்
  3. தேர்தல் முகவர் அல்லது அவரது பணியாளர்கள் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம்.

இந்த வாகனங்களுக்கான அனுமதி தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்படும்.

வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச்சாவடிகளில் இருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை
வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது. இது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும்.

மேலும் படிக்க | வெற்றி பயண திட்டம்: எந்தெந்த பேருந்துகளில் கட்டணம் செலுத்த வேண்டும்? வேண்டாம்? - Explained

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES