SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

திருப்பதி கோவிலுக்கு காசுமாலை அணிந்து வந்த விவகாரம்..அமைச்சர் கீர்த்தனா அதிரடி பதில்!

தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சராக இருக்கும் கீர்த்தனா, சமீபத்தில் தங்கத்தால் செய்த காசுமாலைகளை அணிந்து திருப்பதி கோயிலுக்கு சென்றது வைரலானது. இது குறித்து அமைச்சர் கீர்த்தனா ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

Written By Yuvashree M
Published: Oct 27, 2026, 11:33 AM IST | Updated: Oct 27, 2026, 12:46 PM IST
Join

தமிழ்நாட்டில், தவெக ஆட்சியை பிடிக்கும் முன்னரே அக்கட்சியின் குரலாகவும் முகமாகவும் வெளியில் பிரபலமானவர், கீர்த்தனா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தனா, சமீபத்தில் தன்னை சுற்றி வலம் வந்த சர்ச்சை குறித்து பேசியிருக்கிறார்.

அமைச்சர் கீர்த்தனா தங்க நகை அணிந்த விவகாரம்..

அமைச்சர் கீர்த்தனா, சமீபத்தில் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருந்தார். அப்போது, அவர் தன்னுடைய கழுத்தில் தங்கத்தினால் ஆன காசுமாலையை அணிந்திருந்தார். ஒரு சில நிகழ்வுகளிலும் நகையுடன் காணப்பட்டார். இதை பார்த்த சில நெட்டிசன்கள், இது குறித்த கேள்விகளை எழுப்பினர்.

தேர்தல் சமயத்தில் சமர்ப்பித்த் affidavit;. வெறும் 24 கிராம் தங்கம், அதாவது 3 பவும் மட்டுமே இருக்கு என குறிப்பிட்டிருப்பதாகவும், இப்போது இந்த தங்க காசுமாலை மட்டுமே 10 பவுன் வரும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இதை பலர் அரசியல் ரீதியாகவும், சிலர் இது குறித்து கேள்வி கேட்டு வந்தனர்.

பள்ளியில் பேசியது..

அமைச்சர் கீர்த்தா சமீபத்தில் விருதையில் தான் படித்த பள்ளிக்கு சென்று உரையாற்றினார். அப்போது, “சத்த்ரியன் என சொல்வதற்கு..சத்ரியர் மகளிர் பள்ளியில் படித்தேன் என சொல்வதற்கு பெருமையாக இருக்கிறது” என்று நெஞ்சில் கை வைத்து பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வந்தது. ஒரு சிலர் அவர் சாதியை குறிப்பிட்டு பேசியதாக கூற, இன்னும் சிலர் அவர் பள்ளியின் பெயரைத்தான் அப்படி குறிப்பிட்டு என பேசினர். இதுவும் ஒரு புறம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

அமைச்சர் கீர்த்தனாவின் பதில்..!

அமைச்சர் கீர்த்தனா, சமீபத்தில் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஒரு பதிவை வெளியட்டிருக்கிறார். ட்விட்டரில் ஒருவர் பலரும் அமைச்சர் கீர்த்தனா அணிந்திருந்தது தங்க நகை என நினைத்து அதனை விமர்சித்ததாகவும், ஆனால் அது கவரிங் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு தனியார் நகைக்கடை அமைச்சர் கீர்த்தனாவின் நகையை சுட்டிக்காட்டி, “இதே போன்ற கலக்ஷன்ஸை வாங்கிக்கோங்க” என்று குறிப்பிடப்பட்டுள்ளதை மேற்கோள் காண்பித்திருக்கிறார். மேலும், “ஒரு பெண் சுயமா தன்னுடைய உழைப்பால் இந்த வயதில் அமைச்சரா இருந்து இந்த மக்களுக்காக வேலை பார்த்துட்டு இருந்தா இவனுங்க அவங்கள பத்தியே பேசி அவதூறு பரப்புறதையே முழு நேர வேலையா பார்த்துட்டு இருக்கானுங்க”  என்று கூறியிருந்தார். இதற்கு அமைச்சர் கீர்த்தனா கொடுத்திருந்த பதில்தான் வைரலாகி பரவுகிறது.

மேலும் படிக்க | தமிழ்நாடு கட்டிட விதிகளில் மாற்றம்: உயரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளைத் தளர்த்திய தமிழக அரசு

“என் பின்னால் என் விஜய் அண்ணா இருக்கிறார்..”

அமைச்சர் கீர்த்தனா தன்னுடை பதிவில், “நான் ஒரு சாதாரணப் பெண்… அதனால்தானோ என்னவோ, என் ஒவ்வொரு சொல்லையும், செயலையும், ஏன் என் தங்கத்தின் தரத்தைக்கூடச் சோதிக்கத் துடிக்கிறார்கள்!

இனி நான் பேசும் ஒவ்வொரு பேச்சும் வைரலாகும்போது, அதையும் ஆய்வகத்தில் வைத்துப் பிரித்துப் பிரித்து ஆராய்வார்கள். ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் தேடுவார்கள்!

ஆனால் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்… தங்கத்தை எத்தனை முறை சோதித்தாலும், அதன் மதிப்பு குறைவதில்லை!

என் பின்னால் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அண்ணா அவர்களின் ஆதரவும், என் மீது அன்புகொண்ட மக்களின் நம்பிக்கையும் இருக்கிறது.

விமர்சியுங்கள்… ஆராயுங்கள்… சோதித்துப் பாருங்கள்! என் வார்த்தைகளைப் பிரித்துப் பார்க்கலாம்; என் தன்னம்பிக்கையைப் பிரிக்க முடியாது. என் தங்கத்தைச் சோதிக்கலாம்; என் துணிச்சலைச் சோதிக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

கீர்த்தனாவை தொடரும் சர்ச்சைகள்..

கீர்த்தனா, எந்த இடத்தில் எது பேசினாலும், செய்தாலும் அது அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்துவதுண்டு. கடந்த ஜூலை மாதம், ஒரு அரசு பள்ளியில் திடீர் ஆய்வுக்கு சென்று, அங்கிருக்கும் குழந்தையிடம் ஆங்கிலத்தில் பேச கூறி வீடியோ எடுத்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பிறகு தவெக அரசு யாரும் பள்ளிகளுக்கு திடீர் விசிட் செய்யக்கூடாது என அர்டர் போட்டது.

அதே போல, மாற்றுத்திறனாளியை ஊனமுறோர் என கூறி, அது பெரும் சர்ச்சைகளை சந்தித்தவுடன், தன் தாயும் ஒரு மாற்றுத்திறனாளிதான் என கூறி அதற்கு அவர் மன்னிப்பும் கேட்டார்.

கோயம்புத்துர் சிறுமி விவாகரம் குறித்து கேள்வி எழுப்பிய போது, அரசியல் கேள்விகளை மட்டும் கேளுங்கள் என்று பேசியதும் சர்ச்சையை கிளப்பியது.

மேலும் படிக்க | தவெக அரசின் லட்சணத்தைக் கண்டு ஊரே கைகொட்டிச் சிரிக்கிறது -எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES