• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /தமிழக நகர்ப்புற உள்ளாட்சி மன்றக் கூட்டங்களில் யார் எங்கு அமர வேண்டும்? அரசின் புதிய வழிகாட்டுதல்கள்

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி மன்றக் கூட்டங்களில் யார் எங்கு அமர வேண்டும்? அரசின் புதிய வழிகாட்டுதல்கள்

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி மன்றக் கூட்டங்களில் யார் எங்கு அமர வேண்டும்? என அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் இங்கே

Written ByKarthikeyan Sekar
Published: Oct 15, 2026, 12:47 PM IST|Updated: Oct 15, 2026, 12:51 PM IST
joinshare
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி மன்றக் கூட்டங்களில் யார் எங்கு அமர வேண்டும்? அரசின் புதிய வழிகாட்டுதல்கள்
Image Credit: Tamil Nadu Local Body Meeting Rules

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னையில் ஒரே நாளில் 354 மி.மீ மழைப்பொழிவு.. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்வரத்து என்ன?

சென்னையில் ஒரே நாளில் 354 மி.மீ மழைப்பொழிவு.. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்வரத்து என்ன?

2

அஜித்தின் 12 படங்களுக்கு இசையமைத்த தேவா..இரங்கல் செய்தி கூட இல்லையே! ரசிகர்கள் வருத்தம்..

3

கோவில் வாசலில் லாரி விபத்து: 12 பக்தர்கள் பலி - மத்திய பிரதேசத்தில் நடந்தது என்ன?

4

இனி 360 டிகிரி சொர்க்க பயணம்.. அக்.23 முதல் கண்ணாடி மேற்கூரை ரயில் சேவை - மதுரை பயணிகள் குஷி!

5

சுக்கிரன் பெயர்ச்சி: 2027 புத்தாண்டு முதல் உச்சத்திற்கு போகும் 4 ராசிகள்.. தொழில், வேலையில் ராஜயோகம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் மன்றக் கூட்டங்களில் மேயர், ஆணையர், நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அமர்வதற்கான இருக்கை வசதிகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.  

மேலும் படிக்க | காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு : ரூ.25 ஆயிரம் சம்பளம்! விண்ணப்பிப்பது எப்படி?

உயர்பீடத்தில் மேயர், ஆணையர் அமரும் முறை:

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள இந்த சுற்றறிக்கையில், மன்றக் கூட்ட அரங்கின் மையத்தில் உள்ள மேடையில் மேயர் அல்லது நகர்மன்ற மற்றும் பேரூராட்சித் தலைவர் அமர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு இடதுபுறம் துணை மேயர் அல்லது துணைத் தலைவரும், வலதுபுறம் மாநகராட்சி ஆணையர் அல்லது நகராட்சி ஆணையர், பேரூராட்சி செயல் அலுவலரும் அமர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

எம்பி, எம்எல்ஏ மற்றும் கவுன்சிலர்களுக்கான இருக்கைகள்:

கூட்டத்தில் பங்கேற்கும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்வதற்கு ஏதுவாக மன்றக் கூடத்தில் முதன்மையான இடத்தில் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும். மேலும், மேடைக்கு எதிரே உள்ள வரிசைகளில் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் நியமன உறுப்பினர்கள் அமர வேண்டும். இவர்கள் வார்டு எண்களின் அடிப்படையில் இடமிருந்து வலமாகவோ அல்லது வலமிருந்து இடமாகவோ அமர வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

அலுவலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள்:

உள்ளாட்சி அமைப்புகளின் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் செய்திகளைச் சேகரிக்க வரும் உள்ளூர் பத்திரிகை நிருபர்கள் மன்ற நடவடிக்கைகளைக் கவனிக்கும் வகையில் போதுமான இடவசதி செய்து தரப்பட வேண்டும். தலைவரின் முன் அனுமதி பெற்ற பார்வையாளர்கள் அவையின் மாண்பைக் காக்கும் வகையில், உறுப்பினர்களின் இருக்கைகளுக்குப் பின்னால் அரங்கின் வசதிக்கேற்ப அமர அனுமதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த நெறிமுறைகளை உடனடியாக அனைத்து மாநகராட்சிகள், அதாவது சென்னை தவிர்த்து, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்துமாறு நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்

மேலும் படிக்க | UCO வங்கியில் வேலை வாய்ப்பு! 530 காலியிடங்கள்-Any Degree..உடனே அப்ளை பண்ணுங்க..

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu