SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

இனி திமுகவால் ஜெயிக்கவே முடியாது... அடித்துச் சொல்லும் அமைச்சர் விஸ்வநாதன்

காங்கிரஸ் கட்சி இல்லாமல் திமுக இனி ஜெயிக்கவே முடியாது என்றும்; திமுகவிற்கு காங்கிரஸ் துரோகம் செய்தது என்று யாரும் சொல்லக் கூடாது என்றும் உயர்க்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Written By Sudharsan G
Published: Oct 23, 2026, 10:07 AM IST | Updated: Oct 23, 2026, 10:12 AM IST
Join

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூரில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் 32வது பட்டமளிப்பு விழா சி.முட்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று (அக். 23) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் நாகராஜன் வரவேற்புரை ஆற்றி ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பங்கேற்று 1048 மாணவ, மாணவிகளுக்கு நேரடியாக பட்டங்களை வழங்கினார். மேலும் அவர் மேடையிலும் உரையாற்றினார்.

மேலும் படிக்க | இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...? கனமழை எச்சரிக்கை

திமுக 2004இல் சொல்லியிருக்கலாம்...

இதை தொடர்ந்து, அமைச்சர் விஸ்வநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியோடு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று இப்போதுதான் சொல்கிறார். 2004ஆம் ஆண்டிலேயே ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று அவர் சொல்லி இருந்திருக்கலாம்.

அப்படி சொல்லி இருந்தால் 2004ஆம் ஆண்டில் கூட்டணி அமைச்சரவையில் திமுக இடம்பெற்று இருந்திருக்காது. ஆட்சியில் அவர்கள் அங்கம் வகித்திருக்க மாட்டார்கள். இத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் கிடைத்திருக்க மாட்டார்கள். 2009ஆம் ஆண்டிலும் கூட்டணி மந்திரி சபையிலும் இடம்பெற்றிருக்க மாட்டார்கள். அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் திமுகவிற்கு வந்திருக்காது.

திமுகவால் இனி ஜெயிக்கவே முடியாது...

2014ஆம் ஆண்டில் அவர்கள் தனித்தே போட்டியிட்டார்கள். அவர்களது உண்மையான சுயரூபம் வெட்ட வெளிச்சமானது. காங்கிரஸ் தயவு இல்லாமல் திமுக கரை சேர்வது என்பது கஷ்டம். இது முன்னாள் முதலமைச்சருக்கு தெரிந்தும் கூட ஏன் அடிக்கடி அப்படி பேசுகிறார் என்பது எனக்கு மிகப் பெரிய அச்சமாகவே இருக்கிறது. இதை அவருக்கு சொல்லுங்கள். காங்கிரஸ் கட்சி இல்லாமல் திமுக இனி ஜெயிக்கவே முடியாது.

மேலும் படிக்க | 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் - சென்னையில் இன்று மழை இருக்குமா...? வானிலை அப்டேட்

துரோகம் செய்தது யார்?

திமுகவிற்கு காங்கிரஸ் துரோகம் செய்தது என்று யாரும் சொல்லக் கூடாது. 2024ஆம் ஆண்டில் துரோகம் செய்தது யார்? 2026ஆம் ஆண்டில் துரோகம் செய்தது யார்? 2026 தேர்தல் நிலவரம் வந்துகொண்டிருக்கிறது, அப்போது பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்த துவங்கியது யார்...? அதிமுகவோடு சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் என திட்டமிட்டது யார்...?

காங்கிரஸ் 143 ஆண்டு கால வரலாறு கொண்ட கட்சி. இவர்களைப் போல் 40, 20, 50 ஆண்டுகள் கொண்ட கட்சி அல்ல. எங்களுக்கு அரசியல் அரிச்சுவடியை கற்றுக் கொடுக்கும் அளவுக்கு திமுக ஒன்றும் எங்களுக்கு பெரிய கட்சி எல்லாம் கிடையாது" என்றார்

புதிய கல்லூரிக்கு கோரிக்கை

மேலும் "புதிய கல்லூரிகள் தொடங்க வேண்டும் என பல மனுக்கள் வந்துள்ளன. உட்கட்டமைப்பு, விளையாட்டு மைதானம், லேப் வசதி, விடுதி, கேண்டீன் போன்றவை வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன.

இதை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளேன். நான் படித்த நந்தனார் கல்விக் கழகத்திற்கு நான் உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும்போதே அரசு பெண்கள் கல்லூரி அமைப்பதை நான் பெருமையாகவே கருதுகிறேன்.

இதுகுறித்த மனு முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றுள்ளது. சிதம்பரத்தில் நந்தனார் பெண்கள் கலைக் கல்லூரி அமையும் என நம்புகிறேன். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகளிடம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | அக்.26ம் தேதி உருவாகிறது 'அர்னாப்' புயல்.. தமிழகத்திற்கு ஆபத்தா? வானிலை மையம் எச்சரிக்கை!

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES