Tamil Nadu Weather Forecast, October 23: வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் இரவு நேரங்களிலும் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.
அந்த வகையில், சென்னை மாநகரின் தி.நகர், நந்தனம், வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, ஆலந்தூர், பழவந்தாங்கல், நங்கநல்லூர், பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பின்படி மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் (மிக கனமழை: 15.6 மி.மீ - 204.4 மி.மீ); 26 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் இன்று (அக். 23) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாகவும், இது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணிப்பு தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த உருவாக உள்ள புயலுக்கு என்ன பெயர் சூட்டப்பட உள்ளது என்பதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது.
இதுகுறித்து இன்று பதிவிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், "அடுத்த 4-5 நாட்களில் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் புயல், தமிழ்நாட்டைப் பாதிக்காமல் ஆந்திரப் பிரதேசத்தை நோக்கி நகரும் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு முரசு என பெயரிடப்படாது; அர்னாப் என்று பெயரிடப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.
The cyclone expected to form in the next 4–5 days, which is forecast to move towards Andhra Pradesh without affecting Tamil Nadu, will be named Arnab, not Murasu. Please verify the official naming sequence before sharing such information. Don’t leave behind a wrong digital footprint.
— Tamil Nadu Weatherman (@praddy06) October 23, 2026
இதுபோன்ற தகவல்களைப் பகிர்வதற்கு முன், அதிகாரப்பூர்வ பெயரிடும் வரிசையை சரிபார்க்க வேண்டும் என்றும் தவறான டிஜிட்டல் தடயத்தை விட்டுச் செல்லாதீர்கள் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையின் இன்றைய வானிலை நிலவரம் குறித்து பதிவிட்டுள்ள அவர், "பல மணிநேரங்களுக்கு பிறகு தென் சென்னையில் இருந்து மேகங்கள் மெதுவாக சென்னையை நோக்கி நகர்ந்து வருகின்றன. சென்னையின் கடலோரப் பகுதிகளில் மழை தொடங்கி, நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழைப்பொழிவு இருக்கும்.
Good morning all, what day it was once again for Tamil Nadu. Chennai to wake up to rainy morning Chennai ---------- After hours and hours the clouds from south Chennai is slowly moving into Chennai. Rains to start from coastal areas of Chennai and cover most of the city areas. These rains will weaken as we sun starts to come out. steady light / drizzle type of rains will continue. Today is not the big day for Chennai. 24, 25 and 26 looks very good for Chennai. Interior Tamil Nadu - Delta and South TN areas, Cuddalore ------------- Virudhunagar, Dindigul, Theni, Erode, Thenkasi, Tiruppur, Ariyalur, Delta areas of Peacockdancesir, Tiruvarur, Cuddalore, Nagapattinam all got widespread rains.
— Tamil Nadu Weatherman (@praddy06) October 23, 2026
சூரியன் வெளிவரத் தொடங்கும்போது இந்த மழை பலவீனமடையும். சீரான லேசான / தூறல் போன்ற மழை தொடரும். இன்று சென்னைக்கு பெரியளவில் மழை இருக்காது. வரும் அக். 24, 25, 26 ஆகிய தேதிதகளில் சென்னையில் மிக நன்றாக மழை இருக்கும் என தெரிகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு என பதிவிட்டுள்ள அவர், விருதுநகர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தென்காசி, திருப்பூர், அரியலூர் மாவட்டங்களிலும்; டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.