• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /Explained : புதிய தலைமை செயலகம்.. பல்லவன் இல்லத்திற்கு மாறுமா? முதல்வர் அடுத்த மூவ்..?

Explained : புதிய தலைமை செயலகம்.. பல்லவன் இல்லத்திற்கு மாறுமா? முதல்வர் அடுத்த மூவ்..?

புதிய தலைமைச்செயலகம், பட்டினப்பாக்கத்தில் மாற இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து, அந்த திட்டம் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Sep 24, 2026, 06:16 PM IST|Updated: Sep 24, 2026, 06:24 PM IST
joinshare
Explained : புதிய தலைமை செயலகம்.. பல்லவன் இல்லத்திற்கு மாறுமா? முதல்வர் அடுத்த மூவ்..?
Image Credit: Tamil Nadu Secretariat | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா:  பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

2

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

3

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

4

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

5

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தவெக அரசு ஆட்சியமைத்த பிறகு, சென்னை செயின்ட் ஜார்ஜ் காேட்டையில் அமைந்திருக்கும் தலைமை செயலகம், விரைவில் வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு பட்டினப்பாக்கம் சரியான தேர்வாக இருக்கும் என்று, தீவிர பரிசீலனை நடந்தது வந்தது. இருப்பினும், அந்த இடத்தில் தலைமைச்செயலகம் வருவதால் மீனவர்கள், அப்பகுதி மக்கள் வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற கருத்து எழுந்ததால், இதனை எதிர்கட்சியினர் விமர்சித்தும் வந்தன. இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்பட இருக்கலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

தலைமை செயலகம் மாறுது ஏன்?

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில், இட நெருக்கடி, வாகனம் நிறுத்துமிட பற்றாக்குறை மற்றும் கட்டடம் பழைமை போன்ற காரனங்களால், தமிழக அரசு தலைமை செயலகம் அமைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இருக்கும் தலைமை செயலகத்தில், சுமார் 6000த்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர். இத்தனை பேர் வருகை புரிவதால், அவர்களுக்கான இட வசதி இல்லை என்று கூறப்படுகிறது. தவெக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கான பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டாலும், தங்களின் அதிகாரிகள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் நலனை கருத்தில் கொண்டு, தலைமை செயலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்தது.

பட்டினப்பாக்கம் திட்டம் ரத்தாகிறதா?

தலைமை செயலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என்று, தவெக அரசு அறிவித்ததை அடுத்து, சுமார் ரூ.1,200 கோடி செலவில் 25.55 ஏக்கர் பரப்பளவில், சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டுவது குறித்து அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையானது, கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள கடற்கரையை அப்பகுதியை ஒட்டியுள்ள , முள்ளிக்குப்பம், முள்ளிமாநகர் உள்ளிட்ட 9 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தவும் மீன் வலைகளை உலர்த்தவும் பயன்படுத்தி வருகின்றனர். இப்போது புதிய தலைமை செயலகம் அங்கு கட்டப்பட்டால், இந்த இடத்தை நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, அவர்களின் தொழில்நிலை பறிபோகும் நிலையும் ஏற்படும். எனவே, இதை எதிர்த்து மீனவர்கள் போராடி வருகின்றனர்.

அதே சமயத்தில், இப்பகுதி 2004ஆம் ஆண்டில் சுனாமி பாதிப்பு ஏற்பட்ட பகுதி என்றும், இங்கு தலைமை செயலகம் கட்டப்படுவது அவ்வளவு சிறந்தது அல்ல என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மீனவர்கள் நலன், இயற்கை சீற்றம் குறித்த அச்சம் உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி பல்வேறு கட்சியினரும் இதற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தலைமை செயலகம் குறித்து ஒரு முறை செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, புதிய தலைமை செயலகம் கட்டுவது குறித்து முதல்வர் விஜய் எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கு வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய, முதல்வர் விஜய் உத்தரவிட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், பட்டினப்பாக்கம் திட்டத்தை ரத்து செய்ய, பொதுத்துறை செயலாளருக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல் வழங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள், ரயில்கள்.. பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு!

பல்லவன் இல்லத்தில் புதிய தலைமை செயலகம்?

பட்டினப்பாக்கம் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், மத்திய சென்னையில் அமைந்திருக்கும் போக்குவரத்து கழகத்தின் ‘பல்லவன் இல்லம்’ வளாகத்தில், புதிய நிர்வாக கட்டிடங்களை கட்டுவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த புத்தம் புதிய திட்டத்தின் படி, சட்டப்பேரவையை தவிர்த்து, பிற அரசு துறைகளின் முக்கிய நிர்வாக அலுவலகங்கள் மற்றும் தலைமை செயலக கட்டடங்களை பல்லவன் இல்ல வளாகத்திலேயே அமைக்க, திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்.

தமிழக அரசு, தற்போது பரிசீலனை செய்து வரும் பல்லவன் இல்லம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக இருக்கிறது. அது மட்டுமல்ல, இதற்கு அருகிலேயே தீவுத்திடலும் தலைமை செயலகம் கட்டுவதற்கான இடங்களின் பரிசீலனை பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. இது, சுமார் 30 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக இருக்கிறது. இந்த இடத்தில் தற்போது வரை பொருட்காட்சியும், தீவுத்திடலும் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும், வருடத்திற்கு ஒருமுறை சில நாட்கள் மட்டுமே நடக்கும் நிகழ்வாகும்.

உண்மையில் பட்டினப்பாக்கத்திற்கு மாற்றி இருப்பார்களா?

தவெக அரசை பொறுத்தவரை, “நாங்கள் எப்போதும் மக்களுக்கு துணையாக நிற்போம்” எனும் ஒரே மந்திரத்தை எங்கு சென்றாலும் உச்சரித்து வருகிறது. உதாரணத்திற்கு, முந்தைய கட்சியான திமுகவின் கனவுத்திட்டமாக இருந்த ‘பரந்தூர் விமான நிலைய’ திட்டத்தை ரத்து செய்ததோடு, தங்களது கட்சி விவசாயிகளுக்கு துணை நிற்பதாக கூறினார் விஜய். இது திமுகவினரின் கடும் கொந்தளிப்பிற்கு ஆளானது. காரணம், சென்னைக்கு இன்னொரு விமான நிலையம் வேண்டும் என்கிற பட்சத்தில், அனைத்தையும் தீர ஆராய்ந்துதான், பரந்தூரை தேர்வு செய்ததாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். அந்த விமான நிலையம் சென்னையில் வந்திருந்தால், கண்டிப்பாக அது இந்த மாவட்டத்தின் பொருளாதாரத்தை உயர்த்தி இருக்கும் என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. இருப்பினும், தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக, தவெக அரசு அந்த இடத்தில் விமான நிலையம் வரப்போவதில்லை என்கிற முடிவை எடுப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

அப்படி இருக்கையில், இந்த பட்டினப்பாக்க தலைமை செயலகம் திட்டத்திலும் பிரச்சனை இருக்கிறது என்பது தவெக அரசிற்கு முன்னரே தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும், அதை மீனவர்கள் போராட்டம் அளவிற்கு ஒரு பிரச்சனையாக வளர்த்து விட்டு, பின்பு “நாங்கள் மீனவர்களுடன் துணை நிற்போம்” என்று கூறி, அவர்களின் வாக்குகளையும் அல்ல தவெக அரசு இப்படியொரு இல்லாத பிரச்சனையை உருவாக்கி, அதை பின்பு தாங்களே தீர்ப்பது போன்று தவெக அரசு சூழ்நிலைகளை உருவாக்குகிறதா? என்கிற கேள்வியை எதிர்கட்சிகள் முன்வைக்கின்றனர்.

மேலும் படிக்க | TN Weather: செப்.30 வரை தமிழகத்தில் மழை.. சென்னை உட்பட இந்த மாவட்டங்களுக்கு அலர்ட்!

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu