Bus Strike : பொதுமக்கள் கவனத்திற்கு..இன்று நள்ளிரவு முதல் தனியார் பேருந்துகள் இயங்காது!
Bus Strike : தமிழ்நாடு முழுவதும், தனியார் பேருந்துகள் ஒரு நாள் மட்டும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
மகளிர் இலவச பயண திட்டத்தின் கீழ், தனியார் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளலாம் என்று சில மாதங்களுக்கு முன்னதாக முதல்வர் விஜய் அறிவித்தார். இதனால், தனியார் பேருந்துகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
மகளிருக்கு கட்டணமில்லா பயணம்:
தமிழ்நாட்டை பொருத்தவரை, மாநகர சாதாரண பேருந்துகளில், பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் செயல்பட்டு வந்தது. இதையடுத்து, தவெக தங்களின் தேர்தல் வாக்குறுதியில், மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்துகளிலும், பெண்கள் இலவசமாக பய்ணம் மேற்கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தது. ஆட்சிக்கு வந்த பின்பு, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விதி எண் 110-ன் கீழ், ‘வெற்றிப்பயண திட்டத்தை’ முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். அதில், அக்டோபர் 2ஆம் தேதி, அதாவது காந்தி ஜெயந்தி முதல், எக்ஸ்பிரஸ், டீலக்ச் மற்றும் புறநகர் பேருந்துகளில், பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தனியார் பேருந்துகள் அமைப்பு:
முதல்வரின் இந்த ‘வெற்றிப்பயண திட்டம்’ குறித்த அறிவிப்பு, தனியார் பேருந்துகள் நடத்துபவர்களின் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறது. ஏனெனில், சென்னையை தவிர பிற பெரும்பாலான மாவட்டஙக்ளில், தனியார் பேருந்துகள்தான் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. முதல்வரின் இந்த வெற்றி பயண திட்டத்தால், தனியார் பேருந்துகளுக்கு பாதிப்பு ஏற்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். மேலும், தாங்களும் பெண்களை கட்டணமின்றி ஏற்றிச்செல்ல தயாராக இருப்பதாகவும், வெற்றிப்பயணம் திட்டத்தை தனியார் பேருந்துகளுக்கு விரிவு படுத்தினாலும், அதற்கு தமிழக அரசு தங்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என்று தனியார் பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தி இருந்தது.
தனியார் பேருந்துகள் இயங்காது:
தமிழக அரசு, இந்த கட்டணமில்லா பயணத்தை தனியார் பேருந்துகளுக்கும் விரிவுப்படுத்தியத்தை அடுத்து, தங்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, செப்டம்பர் 29ஆம் தேதியான இன்று இரவு 12 மணி முதல், நாளை ஒரு நாள் தமிழ்நாடு முழுவதும் தனியார் பேருந்துகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மினி பேருந்துகள் இயங்கும்:
தமிழ்நாடு முழுவதும் மினி பேருந்துகள் நாளை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கு கட்டணமில்லா பயண விரிவக்கமான ’வெற்றி பயண திட்டம்’ அக்டோபர் 2ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதை அடுத்து, தனியார் பேருந்துகள் ஸ்ட்ரைக் அறிவிப்பதை அடுத்து, மினி பஸ்கள் வழக்கம் போல இயங்கும் என்று தமிழ்நாடு மினிபஸ் உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் கொடியரசன் அறிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க | கல்லூரிகளில் இனி எழுத்துத் தேர்வு கிடையாது! தமிழக அரசின் அதிரடி திட்டம் Explained
பஸ் டிக்கெட் விலை ரூ.5000
ஆயுத பூஜை விடுமுறைகள் வருவதையொட்டி, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காகவும், சுற்றுலா செல்வதற்காகவும் பஸ் டிக்கெட் புக் செய்து வருகின்றனர். இதன் காரணமாக, கொடைக்கானலுக்கு செல்வதற்கான பஸ் டிக்கெட் விலை ரூ.4999ஆக இருக்கிறது. ஊட்டிக்கான பேருந்து கட்டணம் ரூ.3000ஆக இருக்கிறது.
கடைசி நிமிடத்தில் டிக்கெட் புக்கிங் செய்தால்தான், பஸ் டிக்கெட் விலை அதிகமாக இருக்கும் என்று நினைத்து, 20 நாட்களுக்கு முன்கூட்டியே புக் செய்தாலும் கூட, கட்டணம் 3000-5000 வரை இருப்பதாக மக்கள் புலம்பி வருகின்றனர்.
இது குறித்து, அனைத்து ஆம்னி பேருந்துகள் உரிமையாள்ர் சங்கத்தின் தலைவர் ஏ.அன்பழகன் பேசினார்.அப்போது, இதற்கு சீரான கட்டண நடைமுறை இல்லாததே காரணம் என்று கூறினார். இதில், AOBOA சங்கம் நிர்ணயித்துள்ள அதிகபட்ச கட்டண வரம்புகள் குறித்தும் பேசினார்.
- சென்னை-கொடைக்கானல் : ரூ. 2,880
- சென்னை-ஊட்டி : ரூ. 2,980
- சென்னை-கோயம்புத்தூர் : ரூ. 2,880 ஆகும்.
தாங்கள் கட்டணங்களை முறைப்படுத்த முயற்சித்தாலும், புதிய பேருந்து நிறுவனங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதாக இந்த சிக்கல் தீர்க்கப்படாமல் இருப்பதாக கூறினார்.