• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /CoBRA படையின் முதல் பெண் தலைவர்... அசாமின் இரும்புப் பெண்மணி - யார் இந்த சன்யுக்தா பராஷர்?

CoBRA படையின் முதல் பெண் தலைவர்... அசாமின் இரும்புப் பெண்மணி - யார் இந்த சன்யுக்தா பராஷர்?

CRPF-ன் சிறப்பு அதிரடி படையான கோப்ரா பிரிவின் புதிய தலைவராக அசாமின் 'இரும்புப் பெண்மணி' சன்யுக்தா பராஷர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கோப்ரா பிரிவுக்கு தலைமை தாங்கும் முதல் பெண் அதிகாரி இவர். இவர் யார்...? இவரது முழு பின்னணி என்ன? என்பதை இங்கு காணலாம்.

Written BySudharsan G
Published: Sep 17, 2026, 02:56 PM IST|Updated: Sep 17, 2026, 03:04 PM IST
joinshare
CoBRA படையின் முதல் பெண் தலைவர்... அசாமின் இரும்புப் பெண்மணி - யார் இந்த சன்யுக்தா பராஷர்?
Image Credit: Sanjukta Parashar | Image Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

2

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

3

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

4

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

5

RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் சிறப்பு அதிரடி பிரவுதான் கோப்ரா (CoBRA). இந்த பிரிவின் தலைவராக (IG) பெண் ஐபிஎஸ் அதிகாரி சன்யுக்தா பராஷர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், 10 பட்டாலியன்களைக் கொண்ட கோப்ரா கமாண்டோ பிரிவுக்கு தலைமை தாங்கும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

டெல்லியில் உள்ள கோப்ரா பிரிவு தலைமையகத்தின் ஜ.ஜி-யா இருந்த தனேஷ் ராணாவின் பதவிக்காலம் சமீபத்தில் நிறைவடைந்தது. அவர் 1996 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாவார். இந்நிலையில் அவரது பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து அசாம்-மேகாலயா 2006 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சன்யுக்தா பராஷர் இந்த புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க | PM Modi Birthday: பிரதமர் மோடி குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்...

யார் இந்த சன்யுக்தா பராஷர்?

  • அசாம் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சன்யுக்தா பராஷர், 1979ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்தவர்.
  • பள்ளிப் படிப்பை அசாமில் முடித்தவர், டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்திரபிரஸ்தா கல்லூரியில் அரசியல் அறிவியலில் பட்டப்படிப்பையும், புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் பிரிவில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார்.
  • அதன்பின்னர், சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று 2006ஆம் ஆண்டில் இந்திய காவல் பணியில் இணைந்தார்.
  • அசாமின் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் இவர் அச்சமின்றி, அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

மேலும் படிக்க | பிரதமர் மோடியின் சுறுசுறுப்புக்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன? காலை முதல் மாலை வரை... பிரதமரின் ரொடீன் இதோ!

  • இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் இவரை அசாமின் 'இரும்பு பெண்மணி' என்று பரவலாக அழைக்கப்பட்டார்.
  • சன்யுக்தா பராஷர் தனது சொந்த மாநிலமான அசாமில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முன்னின்று தலைமை தாங்கியது மட்டுமின்றி, தேசிய புலனாய்வு முகமையிலும் (NIA) முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார்.
  • தேசிய புலனாய்வு முகமையின் டி.ஐ.ஜி (DIG) ஆக இவர் பணியாற்றிய காலத்தில், காவல்துறை பயிற்சி பிரிவில் ஆற்றிய சிறந்த பணிக்காக கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் இருந்து சிறப்பு விருதைப் பெற்றார்.
  • தற்போது சிஆர்பிஎப் தலைமை இயக்குநராக உள்ள ஜி.பி. சிங் முன்னர் அசாம் மாநில டிஜிபியாக இருந்தவர். அவரது தலைமையின் கீழ் சன்யுக்தா பராஷர் ஏற்கெனவே பணியற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர் என்பது குறஇப்பிடத்தக்கது.

CoBRA கமாண்டோ படையின் சிறப்பு

இந்தியாவின் நக்சலைட்கள் மற்றும் இடதுசாரி பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காகவும், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்வதற்காகவும் 2008-09ஆம் ஆண்டு காலகடத்தில் Commando Battalion for Resolute Action சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்பட்டது.

அடர்ந்த காடுகளில் புகுந்த தாக்குதல் நடத்துவதில் இப்படை வீரர்கள் சிறப்பான பயிற்சியாளர்களை பெற்று தேர்ச்சிப் பெற்றவர்கள். இத்தகைய துணிச்சல் மிக்க கமாண்டோ படைப்பிரிவுக்கு தற்போது முதல்முறையாக பெண் அதிகாரி ஒருவர் தலைமை ஏற்றிருப்பது நாடு முழுவது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | தொடரும் ஆட்குறைப்பு... என்ன நடக்கிறது Oracle நிறுவனத்தில்?

Add Zee News as a Preferred Source
TAGS:
India