AI தொழில்நுட்ப வளர்ச்சி வேகமெடுக்கும் நிலையில், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆட்குறைப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், Oracle நிறுவன ஊழியர்களுக்கு அதிகாலையில் Email வந்துள்ளது. அதில், “உங்கள் பதவி தொடர்பாக கடினமான முடிவை பகிர்கிறோம்... இன்று உங்கள் கடைசி வேலை நாள்...” என அந்த தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது ஊழியர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்த Layoff-ல் எத்தனை ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர் என்பது குறித்து Oracle இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. ஊழியர்களின் பதவி, பரந்த அளவிலான நிறுவன மாற்றத்தின் ஒரு பகுதியாக நீக்கப்படுவதாகவும், தனிப்பட்ட காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும், Oracle-ன் கணினி, Email, Voicemail மற்றும் Files-க்கான Access விரைவில் முடக்கப்படும் என ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. AI மற்றும் Cloud