• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /‘தமிழக முதல்வருக்கு அரோகரா..’ திருச்செந்தூர் கோயிலில் முழக்கமிட்டதால் சர்ச்சை! வலுக்கும் கண்டனம்..

‘தமிழக முதல்வருக்கு அரோகரா..’ திருச்செந்தூர் கோயிலில் முழக்கமிட்டதால் சர்ச்சை! வலுக்கும் கண்டனம்..

திருச்செந்தூரில் சமீபத்தில் சூரசம்ஹார விழா நடைப்பெற்றது. இதையடுத்து, இந்த நாளில் அங்கு முருகர் பாடலை பாடி கச்சேரி நடத்திய வேல்முருகன், புஷ்பவனம் குப்புசாமி குழுவினர், பக்தி பாடல்கள் பாடினர். அப்போது அவர்கள் தமிழக முதல்வருக்கு அரோகரா என கோஷமிட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

Written ByYuvashree M
Published: Nov 16, 2026, 13:16 IST|Updated: Nov 16, 2026, 13:58 IST
joinshare
‘தமிழக முதல்வருக்கு அரோகரா..’ திருச்செந்தூர் கோயிலில் முழக்கமிட்டதால் சர்ச்சை! வலுக்கும் கண்டனம்..
Image Credit: Tiruchendur Murugan Arohara | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக இருக்கிறது, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். வருடா வருடம், கந்த சஷ்டி விழாவிற்கு பல்வேறு ஊரிலிருந்தும் வரும் மக்கள் இங்கு கூடி, முருகனை தரிசனம் செய்வர். இந்த கந்த சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வாக இருக்கிறது, சூரசம்ஹாரம். இந்த விழா நேற்று நடைப்பெற்றது.

சூரசம்ஹார விழாவில் முதல்வருக்கு அரோகரா கோஷம்!

சூரசம்ஹார விழா நடைபெறும் போது, அன்றைய நாளில் சூரனை வதம் செய்ய முருகப்பெருமான் வெளியில் வரும் போது அவரை புகழ்ந்து கோஷமிடப்படுவது வழக்கம். அதுவரை, முருகன் பாடல்களை பாடிக்கொண்டிருப்பர். அரோகரா கோஷமும் எழுப்பப்படும்.

நேற்றைய சூரசம்ஹார விழாவில் வேல்முருகன், புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி உள்ளிட்டோர் பாடல்கள் பாடினர். அப்போது, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..என்று முழக்கமிடும் போது சைக்கிள் கேப்பில் ‘தமிழக முதல்வருக்கு அரோகரா, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா..’ என்றும் முழக்கமிட்டார் வேல்முருகன்.

இன்னொரு பக்கம் புஷ்பவனம் குப்புசாமியோ, “விஜய் போல வேல் எடுத்து சூரனை வதம் செய்த முருகன்..” என்று முழக்கமிட்டார். இது, பலருக்கும் அதிர்ச்சியளித்தது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நயினார் நாகேந்திரன் ட்வீட்..!

பாஜக மாநில தலைவரான நயினார் நாகேந்திரன், முதல்வர் விஜய்க்காக அரோகரா கோஷம் எழுப்பியதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருக்கிறார்.

“திருக்கோவில்களை திரு. ஜோசப் விஜய் அவர்களின் புகழ்பாடும் அரசியல் மேடைகளாக மாற்ற முயற்சிக்கிறதா தவெக அரசு?

எம்பெருமான் முருகன், சூரபத்மன் எனும் அசுரனை வதம் செய்து தர்மத்தை நிலைநாட்டிய கந்த சஷ்டி திருநாளை முன்னிட்டு, நேற்றைய தினம் திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெற்ற ‘சூரசம்ஹாரம்’ நிகழ்வின் போது, ‘முருகனுக்கு அரோகரா’ என்ற வரிசையில் ‘முதலமைச்சருக்கு அரோகரா, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு அரோகரா’ என்று கோஷமிட்ட பாடகர் திரு. வேல்முருகனுக்கு எனது கடும் கண்டனங்கள்!

கந்தனின் திருப்புகழ் ஓங்கி ஒலிக்க வேண்டிய திருச்செந்தூர் திருத்தலத்தில், கண்டவர்களுக்கெல்லாம் ‘அரோகரா’ முழக்கமிடும் துணிச்சல் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது? கடந்த ஆறு நாட்களாகக் கடும் விரதமிருந்து, நாள் முழுவதும் கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்து, சிந்தையிலும் நெஞ்சிலும் எம்பெருமான் முருகனைச் சுமந்து நிற்கும் பக்தர்கள், திரு. ஜோசப் விஜய் அவர்களின் புகழைக் கேட்பதற்காகவா ஆண்டவனின் சந்நிதியில் கூடுகிறார்கள்? ஒருவேளை, அரசியல் அதிகாரமும் திரையுலகப் புகழும் இருப்பதால், பிரபஞ்சத்தைப் படைத்த கடவுளைவிட, திரு. ஜோசப் விஜய் எனும் சினிமா பிரபலம் உயர்ந்தவர் என்று இந்த மூடர் கூட்டம் கருதுகிறதா?

எவ்வித ஆன்மீகப் புரிதலோ அல்லது பற்றுதலோ இல்லாத ஒரு சினிமா பிரபலத்தை, இந்து சமய அறநிலையத்துறையின் அறங்காவலர் தேர்வுக் குழு உறுப்பினராக நியமித்தால், அதன் விளைவுகள் இப்படித்தான் இருக்கும். கோடிக்கணக்கான முருக பக்தர்களின் உணர்வுகளையும், ஆலயத்தின் ஆன்மீகப் புனிதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்ட திரு. வேல்முருகன் அவர்கள், உடனடியாக பொது மன்னிப்பு கோர வேண்டும்” என கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க | அமைச்சருக்கு மட்டும் தனிச்சட்டமா? முதுமலையில் புலியை துரத்தி ரீல்ஸ்.. வன்னி அரசு செயலால் வெடித்த சர்ச்சை

அண்ணாமலை கண்டனம்:

இப்படி இவர்களுக்கு அரோகரா கோஷம் போட்டது ரொம்பவே தவறான விஷயம் என்று கூறிய அவர், இதை மன்னிப்பு கேட்டு கடந்து விட முடியாது எனவும் தெரிவித்தார்.

நேற்று, திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது, இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான திரு.வேல்முருகன், தமிழக முதலமைச்சருக்கு “அரோகரா”, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு "அரோகரா" என முழக்கமிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முருகப்பெருமானின் திருவிழாவையும், பக்தி முழக்கங்களையும் அரசியல் புகழ்ச்சிக்குப் பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. “அரோகரா” என்பது முருகப்பெருமானை போற்றிப் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் எழுப்பும் புனிதமான முழக்கம். அந்த இறை முழக்கத்தை அரசியல் தலைவர்களுக்காகப் பயன்படுத்துவது ஆன்மிக மரபுகளைக் கொச்சைப்படுத்துவதுடன், முருகப்பெருமானை வழிபடும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயலாகும். இந்து சமய அறநிலையத்துறையின் குழு உறுப்பினராக இருப்பவரே இத்தகைய செயலில் ஈடுபடுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பக்தர்களின் நம்பிக்கையையும் வழிபாட்டு மரபுகளையும் அவமதிக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் அறிவுறுத்த வேண்டும்.

— K.Annamalai (@annamalai_k) November 16, 2026

 மேலும், “அரோகரா” என்பது முருகப்பெருமானை போற்றிப் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் எழுப்பும் புனிதமான முழக்கம். அந்த இறை முழக்கத்தை அரசியல் தலைவர்களுக்காகப் பயன்படுத்துவது ஆன்மிக மரபுகளைக் கொச்சைப்படுத்துவதுடன், முருகப்பெருமானை வழிபடும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயலாகும்.

இந்து சமய அறநிலையத்துறையின் குழு உறுப்பினராக இருப்பவரே இத்தகைய செயலில் ஈடுபடுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. பக்தர்களின் நம்பிக்கையையும் வழிபாட்டு மரபுகளையும் அவமதிக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவுறுத்த வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் திருத்தம்! தமிழ்நாடு அரசின் புதிய அப்டேட்

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu