SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சிறப்பு TET தேர்வு முடிவுகள் வெளியீடு.. ரிசல்ட் பார்ப்பது எப்படி? எத்தனை ஆசிரியர்கள் தேர்ச்சி?

Teachers TET Exam Result: பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகள் வெளியானது. டெட் தேர்வு முடிவுகளை எப்படி பார்க்கலாம் என்பது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் அறிந்து கொள்ளுங்கள்.

Written By Umabarkavi K
Published: Oct 13, 2026, 08:35 AM IST | Updated: Oct 13, 2026, 08:50 AM IST
Join

Teachers TET Exam Result: பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2026 (Tamil Nadu Teacher Eligibility Test For Working Teachers 2026) முடிவுகள் இன்று (அக்டோபர் 13)வெளியானது. நேற்று (அக்டோபர் 12) வெளியாகும் என ஆசிரியர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், அரசு தரவு மையத்தில் தேர்வு முடிவுகளை பதிவேற்றம் செய்வதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேர்வு முடிவுகள் வெளியீடுவது தள்ளிப்போனது. இந்த நிலையில், இன்று காலையிலேயே ஆசிரியர்கள் சிறப்பு டெட் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் சிறப்பு டெட் தேர்வு முடிவுகள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1, தாள் 2 கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் 1 தேர்வு ஜூலை மாதம் 4ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை 59,535 ஆசிரியர்கள் எழுதினர். தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தாள் 2 தேர்வு ஜூலை 5ஆம் தேதி நடைபெற்றது.  இத்தேர்வை 1.60 லட்சம் ஆசிரியர்கள் எழுதினர். தேர்வுகள் முடிந்த நிலையில், தேர்வு முடிவுகளுக்காக ஆசிரியர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில், டெட் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு இருக்கிறது.

மேலும் படிக்க: நெருங்கும் TNPSC குரூப் 4 தேர்வு! தேர்வில் வெற்றி பெற சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க

தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

மேலும் படிக்க: சென்னையில் சூப்பர் வேலை: தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் 9 காலியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தேர்வு பெற்றவர்கள் எத்தனை பேர்?

பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதிய 1,60,929 பேரில் 61,153 பேரும், இடைநிலை ஆசிரியர் தேர்வு எழுதிய 59,535 பேரில் 47,628 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.  பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் பொதுப்பிரிவினர் 150 மதிப்பெண்களுக்கு குறைந்தது 90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். பிசி, எம்பிசி, பிசிஎம் பிரிவினர் 75 மதிப்பெண்களும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 60 மதிப்பெண்களும், மாற்றுத்திறனாளிகள் 60 மதிப்பெண்களும் பெற வேண்டும். இந்த மதிப்பெண்கள் அடிப்படையில் தான், ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு.. ரூ.1.25 லட்சம் பெறுவது எப்படி?
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES