SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

இனி 8 மணிநேர மின் வெட்டா...? தமிழ்நாடு அரசு கொடுத்த விளக்கம்

தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறையை சமாளிக்க பராமரிப்புப் பணி என்ற பெயரில் மின் தடையை 8 மணி நேரம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், TANGEDCO தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Written By Sudharsan G
Published: Oct 04, 2026, 03:06 PM IST | Updated: Oct 04, 2026, 03:24 PM IST
Join

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலும் தமிழ்நாட்டில் கடும் வெயில் நிலவுவதால் மின் பயன்பாடு அதிகரித்துள்ளது. மின் தேவை அதிகரித்த நிலையில், நீர்மின் நிலையங்களிலும் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களிலும் மின் உற்பத்தியும் குறைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மின் தேவை அதிகரித்தும், உற்பத்தி திடீரென சரிந்ததாலும் மின் தடை அதிகமாக இருந்ததாக அரசு தரப்பில் கூறப்பட்ட நிலையில், தனியாரிடம் இருந்து தேவைக்கு ஏற்ப வாங்கி மின்தடை பிரச்னையை போக்கிவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டாலும், அரசு தரப்பில் விளக்கமும் அளிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | CM விஜய்க்கு அரண்போல் பாதுகாப்பாக இருக்கும் பவுன்சர் மூஸா! 8 நாடுகளில் பிசினஸ் இருக்கு.

8 மணிநேர மின்வெட்டு

அந்த வகையில், தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறையை சமாளிக்க பராமரிப்புப் பணி என்ற பெயரில் மின் தடையை 8 மணி நேரம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அலுவலகங்களில் தடை இன்றி மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக சில ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன.

TANGEDCO மறுப்பு

இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து TANGEDCO அதன் X தளத்தில் போட்ட பதிவில், ஒரு செய்தி குறிப்பை குறிப்பிட்டு அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் முற்றிலும் தவறானது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சிறிதளவு கால அவகாசம் அதிகரிக்கலாம்

தமிழ்நாடு மின்வாரியம் பராமரிப்பு பணிகளுக்கான மின் நிறுத்தத்தை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே நிர்ணயத்துள்ளது என்றும்; இந்தக் கால அளவை கண்டிப்பாக பின்பற்றுமாறு அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தமிழ்நாடு அரசின் யுபிஎஸ்சி உதவித்தொகைக்கான தேர்வில் முறைகேடா? அப்டேட்

ஒரு சில இடங்களில் பராமரிப்பு பணியின் போது வேறு பழுதுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் அதை சரி செய்ய சிறிதளவு கால அவகாசம் கூடுதலாக எடுக்கப்பட்டது என்றும் TANGEDCO அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.

மின் இருப்பு உபரியாக உள்ளது

மேலும் அந்த பதிவில், "பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யும்போது, முன்னதாகவே பாதிக்கப்படும் மின் நுகர்வோர்களுக்கு செய்தி குறிப்புகள், குறுஞ்செய்தி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் முன்னறிவிப்பு செய்த பின்பே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் பகல் நேரங்களில் மின் தேவையை விட மின் இருப்பு உபரியாகவே உள்ளது" என்றும் தெரிவித்துள்ளது.

புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்

அதேபோல், மின்சார சேவை தொடர்பான புகார்களை பொதுமக்கள் வாட்ஸ்அப் எண் மூலம் எளிதாகப் பதிவு செய்ய, 24 மணிநேரமும் செயல்படும் வகையில் புதிய WHATSAPP CHATBOT வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்திருந்தார். 

மேலும், தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் புகார்களை தெரிவிக்க 9498794987 என்ற வாட்ஸ்அப் எண்ணில் வாட்ஸ்ப் மெசேஜ் அனுப்பலாம்.

மேலும் படிக்க | மாஃபியா கும்பல்களுக்கான தவெக ஆட்சி... வேட்பாளரை துரத்தி அடியுங்கள் - ஸ்டாலின் போட்ட வீடியோ

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES