சென்னை: தரவு கசிவு தொடர்பான முக்கிய போர் ஒன்று தமிழகத்தில் வெடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் முக்கியத் தரவுகள், தொழில்துறையில் தமிழ்நாட்டுடன் கடும் போட்டியில் உள்ள மாநிலமான ஆந்திராவுக்கு கசிந்ததாக ஊடக அறிக்கைகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நாட்டிற்குள் முதலீடுகளை ஈர்ப்பதற்கான போட்டி, தற்போது தமிழ்நாட்டிற்கும் ஆந்திரப் பிரதேசத்திற்கும் இடையே ஒரு மோதலை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரம் வெறும் பெருநிறுவன முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியைத் தாண்டி, பணியாளர்களைத் தன்பக்கம் இழுத்தல் (poaching) மற்றும் ரகசியத் தகவல்களைக் கசியவிடுதல் போன்ற குற்றச்சாட்டுகளை உள்ளடக்கியதாக மாறியுள்ளது. தமிழ்நாட்டின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான 'கைடன்ஸ்' (Guidance) மற்றும் ஆந்திரப் பிரதேச பொருளாதார மேம்பாட்டு வாரியம் (EDB) ஆகியவற்றிற்கு இடையிலான இந்த மோதல், அரசியல் பரிமாணத்தையும் பெற்றுள்ளது.
தமிழகத்தின் முதலீடு தொடர்பான ரகசியத் தகவல்கள் ஆந்திரப் பிரதேசத்திற்கு கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதனைத் தொடர்ந்து, மாநிலத்தின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பான 'கைடன்ஸ் தமிழ்நாடு' (Guidance Tamil Nadu) நிறுவனத்திலிருந்து சுமார் 15 அதிகாரிகளைத் தொழில் துறை நீக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்ததைத் தொடர்ந்து, 'கைடன்ஸ் தமிழ்நாடு' (Guidance Tamil Nadu) முதலீட்டு முகமையை மறுசீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனாவின் கட்டுப்பாட்டில் உள்ள 'தமிழ்நாடு வழிகாட்டி' நிறுவனத்திலிருந்து, தமிழகத்திற்கு வரவிருந்த முக்கியத் தொழில் முதலீடுகள் ஆந்திரப் பிரதேசத்திற்குச் சென்றது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்தச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, ரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய முதலீட்டுத் தரவுகள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜூன் 30 அன்று இரு பணியாளர்களை ராஜினாமா செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வந்த வாரத்தில், 15-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அந்த அமைப்பிலிருந்து வெளியேறினர். முக்கியமான தகவல்களைக் கசியவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, சிலர் மீது காவல் துறையில் புகார் (FIR) பதிவு செய்யப்படும் என்று மிரட்டப்பட்டதாக முன்னாள் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நீக்கப்பட்ட அதிகாரிகளில் மூவர் தற்போது ஆந்திரப் பிரதேச அரசுடன் இணைந்து பணியாற்றுவதாகக் கூறப்படுவது மேலும் அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது. தமிழகத்தில் நீக்கப்ப்பட்ட நபர்கள் ஆந்திர பிரதேச அரசுடன் இணைந்து பணியாற்றுவது, இந்த முக்கியமான அமைப்பிற்குள் ஒரு 'உளவு வலைப்பின்னல்' (spy network) செயல்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.
தென் கொரியாவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்களிடமிருந்து கிடைக்கவிருந்த ரூ. 1,614 கோடி மதிப்பிலான முதலீடுகளைத் தமிழ்நாடு இழந்ததாகவும், அவை ஆந்திரப் பிரதேசத்திற்குச் சென்றுவிட்டதாகவும் எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட தரப்பினர் மாநில அரசிடம் கடுமையான கேள்விகளை எழுப்பி வரும் சூழலில், இந்த சர்ச்சை வெடித்துள்ளது.
இதுமட்டுமின்றி, தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்ட ராயல் என்ஃபீல்ட் (Royal Enfield), மசாகான் டாக் (Mazagon Dock) கப்பல் கட்டும் தளம் மற்றும் ஹையர் (Haier) எலக்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்களும் ஆந்திரப் பிரதேசத்தில் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளன. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில், ஆந்திரப் பிரதேசம் தமிழ்நாட்டிற்கு நேரடிப் போட்டியாளராகக் கருதப்படுகிறது.
பணியாளர்களை மிரட்டியதாகவோ அல்லது ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அதிகாரிகளைக் கண்காணிக்க காவல்துறையை ஈடுபடுத்தியதாகவோ கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தமிழ்நாடு அரசு அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார். 'கைடன்ஸ்' நிறுவனத்தில் பணியாளர்கள் வெளியேறும் விகிதம் (attrition rate) வழக்கமாக 17 சதவீதத்தைச் சுற்றியே இருப்பதாகவும், தற்போதைய சூழலும் அந்த வழக்கமான போக்கின் ஒரு பகுதியே என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் இந்த தரவு கசிவு விவகாரம் கடுமையான அரசியல் கண்டனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் வழிவகுத்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தற்போதைய அரசை விமர்சித்துள்ளார். பல தசாப்தங்களாக அனுபவம் வாய்ந்த நிபுணர்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தை, முதிர்ச்சியற்ற, சமூக ஊடகங்களை மையமாகக் கொண்ட அரசியலின் மூலம் அரசு சர்ச்சைக்குள் சிக்க வைப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
தற்போது வெளியேறியவர்கள் 2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள் என்றும், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு திமுக அரசு அவர்களைப் பதவியிலிருந்து நீக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்த அரசு நிறுவனத்தைச் சீர்குலைத்துவிட்டு, தனது தோல்விகளுக்கு திமுக மீது பழி சுமத்துவதாகக் குற்றம் சாட்டிய அவர், துறையை இழிவுபடுத்துவதையும், தமிழ்நாட்டின் முதலீட்டு ஈர்ப்புத் திறனைக் குறைத்து மதிப்பிடுவதையும் நிறுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, 'அமைச்சர் கீர்த்தனா ஆந்திராவிற்கு எந்த முதலீடுகளும் செல்லவில்லை என்றும், தற்போதைய ஆட்சியில் ஒரு திட்டம் கூட கைநழுவிப் போகவில்லை என்றும் துணிச்சலாகக் கூறி வருகிறார். ஆனால், அவரது துறையிலிருந்தே முதலீட்டாளர்கள் குறித்த முக்கியமான தகவல்கள் ஆந்திர அதிகாரிகளுக்குக் கசிந்ததாக இந்தியா டுடே அறிக்கை தெரிவிக்கிறது. இந்தத் தகவல் கசிவு தொடர்பாக 15 உயர் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், அவர்களில் மூவர் பின்னர் ஆந்திரப் பிரதேச அரசாங்கத்தில் பணியாற்றுவது கண்டறியப்பட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையானால், இது வெறும் திறமையின்மை அல்ல; மாறாக, தமிழ்நாட்டின் தொழில் எதிர்காலத்தைச் சீர்குலைக்கும் திட்டமிட்ட சதிச் செயல். முதலீடுகள் குறித்த ரகசிய விவாதங்களையே தனது சொந்தத் துறையில் பாதுகாக்க முடியாத ஒரு அரசாங்கம், திட்டங்கள் ஆந்திராவிற்குச் செல்கின்றன என்ற குற்றச்சாட்டை எப்படி மறுக்க முடியும்? அமைச்சரின் இந்த மறுப்புகள், இப்போது அர்த்தமற்றதாகவும், மக்களை அவமதிக்கும் வகையிலும் உள்ளன.' என சாடியுள்ளார்.
The ‘India Today’ @IndiaToday report alleging a massive data leak from Guidance Tamil Nadu @Guidance_TN to Andhra Pradesh is nothing short of explosive and exposes the rot inside the current government. While Minister Keerthana @Keerthana4VNR has been brazenly claiming that no investments are going to Andhra and that the state has not lost a single project under this government, the report claims that sensitive investor data from her own department was leaked to Andhra officials. According to the report, 15 senior officials were sacked for the breach, and three of them were later found working for the Andhra Pradesh government. If these allegations are true, this is not incompetence — it is outright sabotage of Tamil Nadu’s industrial future. How can a government that cannot even protect confidential investment discussions in its own nodal agency stand up and deny that projects are slipping to Andhra? The denials from the minister now look hollow and insulting. The people of Tamil Nadu are watching investments that were in advanced talks with the state go to the neighbouring state, and now there is a report of moles operating inside Guidance itself. This demands an immediate, independent investigation — not more spin and blame-shifting to the previous @arivalayam government. If the report is accurate, it will be treated as the failure of the TVK @TVKPartyHQ govt and heads must roll at the highest level in the concerned department. Tamil Nadu’s economic interests cannot be sold out or leaked away under the cover of press statements. Narayanan Thirupathy, Chief Spokesperson, BJP, Tamil Nadu.
— Narayanan Thirupathy (@narayanantbjp) November 19, 2026
இதற்கிடையில், ஆந்திரப் பிரதேசத்தில் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் (TDP) மாநிலத் தலைவர் பல்லா சீனிவாச ராவ், உளவு பார்த்தல் மற்றும் தரவு கசிவு குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். ஆந்திரப் பிரதேசம் மற்ற மாநிலங்களைப் பின்பற்றுவதன் மூலம் அல்லாமல், தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழல் மற்றும் முதலீட்டாளர்களுக்கான சிறந்த கொள்கைகளின் வலிமையைக் கொண்டே முதலீடுகளை ஈர்த்து வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.