அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விவாகரத்து? மனைவி டெய்சி மார்டின் பகிர்ந்த உருக்கமான கடிதம்
தமிழ்நாடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அவரது மனைவி டெய்சி மார்ட்டின் ஆகியோர், 14 ஆண்டுகாலத் திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக டெய்சி மார்ட்டின் திங்கள்கிழமை அறிவித்தார்.
சென்னை: தமிழ்நாடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அவரது மனைவி டெய்சி மார்ட்டின், 14 ஆண்டுகாலத் திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக டெய்சி மார்ட்டின் திங்கள்கிழமை அறிவித்தார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்சி மார்டின் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள
ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
"கடந்த 14 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் இணைந்து பயணித்தோம். அந்தப் பயணம் அன்பு, புரிதல் மற்றும் மாற்றங்கள் நிறைந்ததாக இருந்தது. நண்பர்களாகவும், வாழ்க்கைத்துணைகளாகவும், பெற்றோர்களாகவும் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களை நாங்கள் ஒன்றாகக் கடந்து வந்தோம். இன்று, ஆதவ் அர்ஜுனாவும் நானும் ஒரு தம்பதியாகப் பிரிந்து, தனித்தனிப் பாதைகளில் பயணிக்க ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம்."
"இது எங்கள் இருவருக்கும் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கினாலும், குழந்தையை இணைந்து வளர்ப்பதிலும், குழந்தையின் மகிழ்ச்சியையும் நலனையும் உறுதி செய்வதிலுமான எங்கள் அர்ப்பணிப்பு எப்போதும் முதன்மையான முன்னுரிமையாகவே இருக்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆதவ் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும், அவரது எதிர்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையவும் மகிழ்ச்சியாக இருக்கவும் விரும்புவதாகவும் டெய்சி கூறியுள்ளார். மேலும், தாங்கள் பிரிந்து செல்லும் இந்தச் சூழலில், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை (தனியுரிமையை) மதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
"ஆதவ் அர்ஜுனா மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அவர் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் அவருக்கு மகிழ்ச்சியும், அமைதியும், வெற்றியும் கிடைக்க மனதார வாழ்த்துகிறேன். மாற்றத்திற்கான இந்த காலகட்டத்தில், உங்கள் புரிதலையும் கனிவையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்; அதேபோல் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்" என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்கள் குழந்தையை இருவரும் இணைந்து வளர்ப்பதிலும், குழந்தையின் மகிழ்ச்சியையும் நலனையும் உறுதி செய்வதிலும் தாங்கள் தொடர்ந்து உறுதியாக இருப்பதாகவும் டெய்சி கூறியுள்ளார்.
மேலும் படிக்க | உருவாகும் அக்வான் புயல்.. நாளை இரவு முதல் தீவிரமாகும் மழை.. வெதர்மேன் அலர்ட்
பின்தங்கிய சமூகங்களுக்காக உழைக்கும் டெய்ஸி மார்ட்டின் யார்?
ஆதவ் அர்ஜுனா, முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசின் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் நிலையில், டெய்ஸி மார்டின் ஒரு தொழில்முனைவோராக உள்ளார்.
அவரது லிங்க்டு-இன் (LinkedIn) ப்ரொஃபைலின் படி, அவர் 'அரைஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்ட் கேபிடல் பிரைவேட் லிமிடெட்' (Arise Investments and Capital Private Limited) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். பின்தங்கிய சமூகங்களுக்கு, குறிப்பாக பெண்களின் அதிகாரமளித்தலை மையமாகக் கொண்டு, பாதுகாப்பான நிதி ஆதரவை வழங்குவதற்காக அவர் பணியாற்றுவதாக அவரது ப்ரொஃபைல் குறிப்பிடுகிறது.