ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்? சங்கத்தின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா அரசு?
Diwali Bonus: தமிழக ரேஷன் கடை ஊழியர்கள், தங்கள் நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்து விவாதிக்க தமிழக அரசு ஒரு கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
Ration Shop Employees Diwali Bonus: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் இவ்வேளையில், அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் என பலருக்கு தீபாவளி போனசுக்கான அறிவிப்பு கிடைத்துள்ளது. பலர் இன்னும் இந்த அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், தமிழக ரேஷன் கடை ஊழியர்கள், தங்கள் நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்து விவாதிக்க தமிழக அரசு ஒரு கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
ரேஷன் ஊழியர்களின் கோரிக்கை என்ன?
தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் நீண்ட நாட்களாக அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸை சீராக வழங்க வேண்டும் என்பது இதில் ஒரு முக்கிய கோரிக்கையாக உள்ளது. இது குறித்து விவாதிக்க, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் ஒரு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர் சங்கம் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர் சங்கம் அரசாங்கத்திடம் ஒரு மனுஇவை சமர்ப்பித்துள்ளது. இந்த மனுவில், பின்வரும் முக்கிய பிரச்சனைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது:
- ஊழியர்களின் நலன்,
- கூட்டுறவு நிறுவனங்களின் செயல்பாடு மற்றும்
- பொது விநியோகத் திட்டத்தில் நிர்வாக நடைமுறைகளைச் செயல்படுத்துவது
இவற்றில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க அரசு தலையிட வேண்டும் என்று சங்கம் கோரியுள்ளது.
ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்பார்க்கும் முக்கிய நடவடிக்கைகள்
- ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்முதல் செய்வது, அவற்றின் தரத்தை மதிப்பீடு செய்வது மற்றும் விநியோகிப்பது தொடர்பான நடைமுறைகளை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
- ஒவ்வொரு நிலையிலும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் என சங்கம் வலியுறுத்தியுள்ளது.
- மேலும், ஊழியர்களின் கட்டுப்பாட்டில் இல்லாத குறைபாடுகளுக்காக அவர்கள் மீது தேவையற்ற பழியைச் சுமத்துவதைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவை தவிர, கூட்டுறவு நிறுவனங்களின் நிதி நிலை மற்றும் செயல்பாடுகள் குறித்த கவலைகளை வெளிப்படுத்தியுள்ள சங்கம், அவற்றின் செயல்பாடுகளை வலுப்படுத்தவும், ஊழியர்களின் நலனைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
மேலும் படிக்க | அரசு ஊழியர்கள் சொத்துக் கணக்கு தாக்கல் செய்யத் தேவையில்லையா? லேட்டஸ்ட் அப்டேட்
20 சதவீத சீரான தீபாவளி போனஸ்
மற்றொரு முக்கிய கோரிக்கையையும் சங்கம் முன்வைத்துள்ளது. அந்தந்த கூட்டுறவு நிறுவனங்களின் நிதி நிலையைப் பொருட்படுத்தாமல், அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் 20 சதவீத தீபாவளி போனஸை சீராக வழங்க வேண்டும் என்று சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகள் திறம்பட மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்து, ஊழியர்களின் பணிச் சூழலை மேம்படுத்த வேண்டும் என்றும், முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை விரிவாகப் பரிசீலித்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய்யை ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்
முன்னதாக, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை C, D பிரிவு பணியாளர்களுக்கு, நேற்று முதல்வர் விஜய் 20% வரை தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார். ரூ.21,000 சம்பள உச்சவரம்பு உடைய தொழிலாளர்களுக்கு இதன் மூலம் பலன் கிடைக்கும்.
மேலும் படிக்க | கைத்தறி நெசவாளர்களுக்கு தீபாவளிப் பரிசு! போனஸ் அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு