• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /வறண்டு கிடக்கும் அணைகளும்... தமிழகத்தை நெருங்கும் ஆபத்தும்... Explained

வறண்டு கிடக்கும் அணைகளும்... தமிழகத்தை நெருங்கும் ஆபத்தும்... Explained

தமிழ்நாட்டின் 90 முக்கிய அணைகளின் ஒட்டுமொத்த நீர் இருப்பு 34% ஆக குறைந்துள்ளது. இதில் El Nino தாக்கம், வெயில் அதிகரிப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை குறித்த விரிவான பார்வையை இங்கு காணலாம்.

Written BySudharsan G
Published: Oct 03, 2026, 12:03 PM IST|Updated: Oct 03, 2026, 12:18 PM IST
joinshare
வறண்டு கிடக்கும் அணைகளும்... தமிழகத்தை நெருங்கும் ஆபத்தும்... Explained
Image Credit: Tamil Nadu Water Crisis | AI Designed Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
8வது ஊதியக் குழு: அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு அரியர் கிடைக்கும்? கணக்கீடு என்ன?

8வது ஊதியக் குழு: அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு அரியர் கிடைக்கும்? கணக்கீடு என்ன?

2

வறண்டு கிடக்கும் அணைகளும்... தமிழகத்தை நெருங்கும் ஆபத்தும்... Explained

3

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்! பயிர்க்கடன் வசூலிப்பது நிறுத்தம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

4

அரியலூரில் செப்டிக் டேங்க் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி மரணம்

5

100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு சனிக்கிழமை இனி விடுமுறை.. தமிழக அரசின் அறிவிப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ்நாடு தற்போதைய நிலையில் கடும் நீர் நெருக்கடியில் திண்டாடி வருகிறது. பெரும் பிரச்னையின் விளம்பில் நின்று, வானத்தை பார்த்து மழையை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது ஒட்டுமொத்த தமிழ்நாடும்.

அக்டோபர் வந்தும் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கிறது. போதிய பருவமழை இல்லை. இந்தச் சூழலில், தமிழ்நாட்டின் நீர் இருப்பு மிக வேகமாக சரிந்து வருகிறது.

தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை மற்றும் வேளாண்மைத் துறையின் தரவுகளின்படி, அணைகளின் நீர் இருப்பு அபாயகரமான நிலையை எட்டி உள்ளது. இது தமிழ்நாட்டின் குடிநீர் தேவைக்கும், விவசாய தேவைக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.

மேலும் படிக்க | விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்! பயிர்க்கடன் வசூலிப்பது நிறுத்தம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

இயல்பை விட அதிக வெப்பம்

சென்னை வானிலை மையம் வெளியிட்ட தரவுகளில், நேற்றைய (அக். 2) நிலவரப்படி மதுரை விமான நிலையம் மற்றும் ஈரோடு மாவட்டப் பகுதிகளில் 3.1 டிகிரி செல்சியஸ் முதல் 5.0 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட மிக அதிக வெப்பம் பதிவாகி உள்ளது.

சென்னை, கோவை, மதுரை நகரம், திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர், கரூர், திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் 1.6 டிகிரி செல்சியஸ் முதல் 3.0 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக வெப்பம் பதிவாகி உள்ளது.

அணைகளின் நீர் இருப்பு - தற்போதைய நிலவரம்

  • தமிழ்நாடு நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் 90 முக்கிய அணைகள் உள்ளன. இவற்றின் மொத்தக்கொள்ளலவு 224 டிஎம்சி ஆகும்.
  • ஆனால், தற்போதைய நிலவரப்படி 90 முக்கிய அணைகளில் தற்போதைய நீர் இருப்பு வெறும் 76.4 டிஎம்சி ஆக குறைந்துள்ளது. இது மொத்தக் கொள்ளளவில் வெறும் 34% ஆகும்.
  • 90 அணைகளில் ஏறத்தாழ 63 நீர்த்தேக்கங்கள் தங்களது மொத்தக் கொள்ளளவில் 25 % குறைவான நீரையே கொண்டுள்ளன.
  • மேட்டூர் அணை, பவானிசாகர் அணை, வைகை அணை, பேச்சிப்பாறை அணை உள்ளிட்ட முக்கிய அணைகளிலும் தொடர்ந்து நீர்வரத்து குறைந்து, நீர்மட்டம் தொடர்ந்து இறங்குமுகமாகவே உள்ளது.
  • தலைநகர் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் போன்ற ஏறிகளிலும் நீர் சேமிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

El Nino ஏற்படுத்திய தாக்கம்

  • பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம்தான் El Nino. மத்திய மற்றும் கிழக்கத்திய பசிபிக் பெருங்கடலில் 2 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் சராசரி வெப்பம் பதிவானால் அது வலுவான El Nino ஆக கருதப்படும். இதை Super El Nino என்றும் அழைப்பார்கள்.
  • El Nino நிகழ்வுகளால் தமிழ்நாட்டில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து. இதனால், இப்போதே அணைகளில் நீர் விரைவாக வற்றத் தொடங்கியிருக்கிறது. பொதுவாக கோடை காலத்திலேயே அணைகளில் நீர் வற்றும்.
  • அதேபோல், தென்மேற்கு பருவமழைக் காலத்தில்தான் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பதிவாகும். ஆனால் El Nino காரணமாக இப்பகுதிகளில் மழைப்பொழிவு கணிசமாக குறைந்து, அணைகளுக்கு வரும் நீர்வரத்து பெருமளவில் தடைப்பட்டது.

மேலும் படிக்க | மின்தடை பிரச்னையா? உடனடி தீர்வுக்கு வாட்ஸ் அப்பில் சூப்பர் வசதி.. புகார் எண் அறிமுகம்

மண்டலம்  மழையின் அளவு  IMD வகைப்பாடு
கேரளா (வயநாடு உட்பட நீர்ப்பிடிப்புப் பகுதிகள்)-34%  மழை பற்றாக்குறை
தெற்கு உள் கர்நாடகா  -24% முதல் -27% வரை  மழை பற்றாக்குறை
கடலோர கர்நாடகா  -19% குறைவான மழைப்பொழிவு
காவிரி நீர்பிடிப்பு மாவட்டங்கள் (குடகு, ஹாசன், மண்டியா)-30% முதல் -45% வரைதீவிரப் பற்றாக்குறை
  • தென்மேற்கு பருவமழையின் உச்சகட்ட மாதமாக ஆகஸ்ட் உள்ளது. ஆனால் El Nino காரணமாக அகில இந்திய அளவில் இயல்பை விட 36% பற்றாக்குறை ஏற்பட்டது.
  • குறிப்பாக, தென்னிந்திய தீபகற்பப் பகுதியில் (South Peninsula) ஆகஸ்ட் மாதத்தில் வழக்கத்தை விட 60% வரை மழை குறைந்துள்ளது. கடந்த 120 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிக வறண்ட ஆகஸ்ட் மாதமாக தற்போது பதிவாகி உள்ளது.
  • நிலத்தடி நீர் மறுஊட்டத்திற்கான வாய்ப்புகளே தற்போது இல்லை. இதனால் நிலத்தடி நீரும் ஆழத்திற்கு சென்றுவிட்டது.

எதிர்காலத்தில் என்னென்ன பிரச்னைகள் வரலாம்?

தமிழ்நாட்டின் முக்கிய அணைகளின் ஒட்டுமொத்த நீர்மட்டம் 34% ஆக குறைந்திருப்பது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய பல சவால்களையும் கொண்டுவரும்.

1. விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு

டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்குத் தேவையான பாசன நீர் திறப்பது பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.

பாசனத்திற்கு தண்ணீர் இல்லாத சூழல் பயிர் இழப்புகளுக்கும், விவசாயிகளின் வாழ்வாதாரப் பாதிப்பிற்கும், உணவு தானிய உற்பத்திக் குறைவிற்கும் வழிவகுக்கும்.

2. குடிநீர் தட்டுப்பாடு

சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பெருநகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு தலைதூக்கும் அபாயம் உள்ளது. பல நகராட்சிகள் லாரிகள் மூலமாகவும், மாற்று வழிகளிலும் குடிநீர் விநியோகிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

3. நிலத்தடி நீர் அதீதமாக உறிஞ்சப்படலாம்

அணைகளில் நீர் இல்லாதபோது விவசாயம் மற்றும் வணிகத் தேவைகளுக்கு நிலத்தடி நீர் அளவுக்கதிகமாக உறிஞ்சப்படும்.

இதனால் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக சிவப்பு மண்டல நிலைக்குச் செல்லும்.

4. சுற்றுச்சூழல் பாதிப்பு

கிராமப்புறங்களில் மேய்ச்சல் நிலங்கள் வறண்டு, கால்நடைகளுக்குக் குடிநீரும் தீவனமும் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும்.

நீர்நிலைகளை நம்பியிருக்கும் பறவைகள் மற்றும் வனவிலங்குகளும் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழையும் சூழல் உருவாகும்.

செய்ய வேண்டிய அவசர நடவடிக்கைகள்

குடிநீருக்கு முன்னுரிமை: தற்போது கையிருப்பில் இருக்கும் 76.4 டிஎம்சி நீரை விரயமின்றி பங்கீடு செய்து குடிநீர்த் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

சொட்டுநீர்ப் பாசனம்: விவசாயத்தில் நீரைக் குறைவாக பயன்படுத்தும் நுண்ணீர்ப் பாசன முறைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

நீர்நிலைகள் தூர்வாருதல்: குறைந்த நீர் இருப்பு உள்ள இந்த காலகட்டத்தை பயன்படுத்தி ஏரிகள், குளங்கள், கால்வாய்களைத் தூர்வாரி அடுத்த பருவமழைக்குத் தயார்படுத்த வேண்டும்.

மழைநீர் சேகரிப்பு: வீடுகளிலும் வணிக வளாகங்களிலும் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளைச் சரிபார்த்து, எதிர்கால மழையை முழுமையாகச் சேமிக்கத் திட்டமிட வேண்டும்.

டெல்டா வெதர்மேன் கணிப்பு

அடுத்து வடகிழக்கு பருவமழை வர இருக்கிறது. இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பெருவறட்சி வருமா அல்லது பெருவெள்ளம் வருமா என்ற தலைப்பில் டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர் அவரது X தளத்தில் ஒரு சிறப்பு பதிவு ஒன்றை நேற்று (அக். 2) பதிவிட்டிருந்தார்.

அதில் இந்தாண்டு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் 50 - 65 செ.மீ., மேல் மழைப்பொழிவு இருக்க வாய்ப்புள்ளதாக அவர் கணித்துள்ளார். வழக்கமாக அக்டோபர் முதல் டிசம்பர் வரை தமிழ்நாட்டில் 44 செ.மீ., அளவில் மழை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, கிடைக்கும் மழைப்பொழிவை பயன்படுத்தி நிலத்தடி நீர் சேமிப்பு மேற்கொண்டால் மட்டுமே, அடுத்த கோடை காலத்தில் வர வாய்ப்புள்ள பெரும் வறட்சியை மக்களால் சிரமமின்றி எதிர்கொள்ள முடியும் என்றும் ஹேமசந்தர் அறிவுறுத்தி உள்ளார்.

முடிவுரை

அணைகளில் நீர் இருப்பு 34% சரிந்திருப்பது வெறும் புள்ளிவிவரம் மட்டுமல்ல; அது வரவிருக்கும் கடுமையான கோடை மற்றும் வறட்சியின் எச்சரிக்கை மணி ஆகும்.

அரசு துறைகளின் சீரிய நீர் மேலாண்மையும் பொதுமக்களின் விவேகமான நீர் பயன்பாடும் மட்டுமே இந்த நெருக்கடியைச் சமாளிக்க உதவும்.

மேலும் படிக்க | மக்களே உஷார்! அக்., 4 முதல் வெளுக்கப்போகும் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை!

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer