6 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்... லேட்டஸ்ட் வானிலை அப்டேட் இதோ!
தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்றைய வானிலை நிலவரம் குறித்த லேட்டஸ்ட் தகவல்களை இங்கு விரிவாக காணலாம்.
Tamil Nadu Weather Latest News Updates: நீலகிரி, கோயம்புத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை இன்று (அக். 17)பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இன்று சென்னை, செங்கல்பட்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், வேலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ராமநாதபுரம், திருச்சி, நாமக்கல், கடலூர், கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது.
மேலும் படிக்க | வடகிழக்கு பருவமழை: அக்டோபர் 17 சென்னை மற்றும் 25 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
லேட்டஸ்ட் வானிலை அப்டேட்
அதேபோல், தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் அதன் X பக்கத்தில் இன்று காலை போட்டிருக்கும் பதிவில், "தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு
Chennai Rains என்ற சுயாதீன வானிலை சார்ந்த X பக்கத்தில் இன்று காலையில் பகிரப்பட்ட பதிவில், "வட தமிழகத்தில் நேற்று (அக். 16) பரவலான இடியுடன் கூடிய மழை பெய்ததுடன், சென்னையின் பல பகுதிகளிலும் கனமழை பெய்தது. அதே பகுதியில் புயல் சுழற்சி நீடிப்பதால் இன்று வட தமிழகத்தில் பரலான இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | TN Shutdown: தமிழகத்தில் அக்., 17 மின்தடை ஏற்படும் பகுதிகள்!
மேலும் காற்றின் குவிப்பை பொறுத்து, சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையிலான கடலோரப் பகுதியில் சில இடங்களில் இன்று பிற்பகல் அல்லது மாலை நேரங்களில் மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. தீவிர பருவமழை நிலவுவதால், அடுத்த சில நாட்களுக்கு சென்னையில் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு
கவனம் வட தமிழ்நாட்டின் பக்கம் திரும்புவதால், சென்னை அதிக மழை பெய்யும் மண்டலத்திற்குள் வருகிறது என்றும் அக்டோபர் 17-18, அக்டோபர் 21-22 ஆகிய நாட்கள் மிக நல்ல மழையை எதிர்பார்க்க வேண்டிய முக்கிய நாட்களாகும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவரது X பதிவில் தெரிவித்துள்ளார்.
பகல் நேரங்களில் வெயில் நிலவக்கூடும், ஆனால் திடீரென எதிர்பாராத விதமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் பிரதீப் ஜான் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார். கடல் அருகே உள்ள பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மழை உச்சத்தில் இருக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | அக்., 22 வரை கொட்டித் தீர்க்கப்போகும் மழை.. சென்னைக்கும் அலர்ட்! வானிலை அப்டேட்