• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /திருப்பரங்குன்றம் தீபத்தூண் பகுதி யாருக்கு சொந்தம்...? உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்

திருப்பரங்குன்றம் தீபத்தூண் பகுதி யாருக்கு சொந்தம்...? உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்

Thiruparankundram Deepa Thoon Case: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் 2வது நாள் விசாரணை நடைபெற்றது. தீபத்தூண் எல்லைக் கல் என மதுரை ஆட்சியர் தரப்பு வாதிட்ட நிலையில், அந்த தூண் உள்ள இடம் யாருக்கு சொந்தம் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு மாவட்ட ஆட்சியர் தரப்பு, தமிழக அரசு தரப்பு, தர்கா தரப்பு தங்களின் வாதங்களை முன்வைத்தனர்.

Written BySudharsan G
Published: Nov 18, 2026, 18:02 IST|Updated: Nov 18, 2026, 18:55 IST
joinshare
திருப்பரங்குன்றம் தீபத்தூண் பகுதி யாருக்கு சொந்தம்...? உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்
Image Credit: Thiruparankundram Deepa Thoon Case, Supreme Court Hearing | AI Generated Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Thiruparankundram Deepa Thoon Case, Supreme Court: தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்ட உயர் நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் சிக்கந்தர் தர்கா நிர்வாகம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீடு வழக்கின் மீது இரண்டாவது நாள் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று (நவ. 18) நடந்தது. உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வில் வழக்கின் விசாரணை நடைபெற்றது.

மேலும் படிக்க | கார்த்திகை தீபத் திருநாளன்று மழை! நவம்பர் 20 - 24... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

அது எல்லைக் கல் மட்டுமே - மதுரை ஆட்சியர்

மதுரை ஆட்சியர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், "கோவில் அருகே இருக்கும் இடத்தில்தான் நூறாண்டுகளுக்கு மேலாக விளக்கு ஏற்றப்பட்டு வருகிறது. ஆனால் அதை விடுத்து தர்கா அருகே இருக்கும் கல்தூணில் விளக்கு ஏற்ற வேண்டும் என மனுதாரர் கேட்கிறார்.

ஆனால், ஆவணங்களின் அடிப்படையில் பார்த்தால் அந்த கல் தூண் என்பது தீபத்தூண் கிடையாது. மாறாக அது ஒரு எல்லைக் கல் ஆகும். நிலத்தை அளவிட்டு அதை உறுதி செய்யும் ஒரு கல் தூணாகத்தான் இருக்கிறது. குறிப்பாக, ஆங்கிலேயர்கள் காலத்தில் மலைப்பகுதிகளில் நிலத்தை அளவீடு செய்ய இப்படியான கல் தூண்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூண்கள் எவரெஸ்ட் சிகரத்திலும் உள்ளன. எவரெஸ்ட் சிகரத்தை அளவிட பயன்படுத்தப்பட்ட தூண்கள்தான் திருப்பரங்குன்றத்திலும் உள்ளன. சென்னையில் உள்ள பரங்கி மலை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மலைப்பகுதிகளிலும் இப்படியான நில அளவீட்டு கல் தூண் இருப்பதை பார்க்க முடியும்" என வாதிடப்பட்டது.

தீபத்தூண் பகுதி யாருக்கு சொந்தம்...?

உடனே நீதிபதிகள், "அந்த தீபத்தூண் பகுதி கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமா ? இல்லையா?" என கேள்வி எழுப்பினார். அதற்கு, நான் அதிகாரிகளிடம் கேட்டு விளக்கமளிக்கிறேன் என மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பு வழக்கறிஞர் பதிலளித்தார்.

வழக்கறிஞரின் பதிலால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், "ஒரு மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்... அந்த இடம் கோவிலுக்கு சொந்தமானதா... இல்லையா... ஒரே வார்த்தையில் சொல்லுங்கள்" என்றனர்.

Thiruparankundram Row | Thousands Of Survey Pillars Will Become Religious If HC Order Not Stayed, TN Govt Tells Supreme Court |@1Simranbakshi #SupremeCourt #TamilNadu https://t.co/9hMnywcATX

— Live Law (@LiveLawIndia) November 18, 2026

கோவிலுக்கு சொந்தமான இடம் - தமிழக அரசு

உடனே எதிர் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், "ஒரு மாவட்ட ஆட்சியருக்கு கூட இந்த விஷயத்தில் என்ன தகவல் என்று தெரியவில்லை... என்ன நடக்கிறது...?" என வாதிட்டார். அப்போது அங்கிருந்த தமிழ்நாடு அரசு வழக்கறிஞர், மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பு வழக்கறிஞரிடம், ஆமாம் அந்த இடம் கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான இடம்தான் என்றார். அது நீதிபதிகளிடமும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க | தற்குறித்தனமான செயல்களில் ஈடுபடும் தவெக அமைச்சர்கள் - டிடிவி தினகரன் கடும் விமர்சனம்

ஆட்சியர் என்ற முறையில் அங்கு இருக்கக்கூடிய நிலவரம் குறித்தும், ஏற்கனவே இருக்கக்கூடிய விவகாரங்கள் குறித்தும் மட்டுமே தன்னால் கூற முடியும் என்றும்; அதேநேரத்தில் நில அளவு மற்றும் அந்த இடம் யாருக்கு சொந்தமானது என்பதை வருவாய்துறை மற்றும் தமிழக அரசுதான் கூற முடியும் என்றும் மாவட்ட ஆட்சியர் தரப்பு விளக்கம் அளித்தது.

தர்கா தரப்பு வாதம் என்ன?

சிக்கந்தர் தர்கா தரப்பு, "பல நூறாண்டுகளுக்கு மேலாக நெல்லித்தோப்பு தர்கா என அழைக்கப்படும் சிக்கந்தர் தர்கா திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் இருந்து வருகிறது. இது ஒரு முழுமையான மசூதி கிடையாது, இஸ்லாமிய மத குருமார்களுக்கு அமைக்கப்படும் தர்கா மட்டுமே.

ஆனால் இந்த இடத்தின் பட்டய உரிமைகளை மன்னர்கள் காலம் தொடங்கி ஆங்கிலேயர்கள் காலம் வரை அதன் பிறகு இந்திய அரசாங்கம் வரை தர்காவுக்கு சொந்தமானது என வரையறுத்து கூறியிருக்கிறார்கள். அதற்கான ஆவணங்கள் அனைத்தும் உள்ளன.

முன்னர், 1862 - 1912 காலகட்டங்களிலும் தர்காவிற்கு சொந்தமான நிலப்பகுதிகளில் மாற்று மத நடவடிக்கைகளில் ஈடுபட சிலர் முயற்சித்தனர். அப்போது இருந்த ஆட்சியாளர்களும் நீதிமன்றங்களும் பொது அமைதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை காரணம் காட்டியும் மத வழிபாட்டு நடைமுறைகளை அலசி ஆராய்ந்தும் அவற்றை தடுத்துள்ளனர்.

நெல்லிதோப்பு முதல் தர்கா வரையிலான இடம் தர்காவுக்கு சொந்தமானது. கோயில் அங்கு தெற்குப் பகுதியில் இருக்கிறது. 1862ஆம் ஆண்டு முதல் 1923ஆம் ஆண்டு வரையிலான உத்தரவுகள் தற்போதைய பாரம்பரிய  நடைமுறையை உறுதி செய்கின்றன.

நெல்லித்தோப்பு புது மண்டபம் படிக்கட்டுகள், தர்கா அமைந்திருக்கக் கூடிய பகுதி அதன் பக்கத்தில் இருக்கும் கொடியேற்றும் இடம் என அனைத்தும் தர்காவிற்கு சொந்தமான இடம்." என உச்ச நீதின்றத்தில் வாதாடியது.

உரிமை கோறும் தர்கா தரப்பு

திருப்பரங்குன்றம் தீபத்தூண் இருக்கும் பகுதி கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானதா...? இல்லையா...? என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீண்டும் கேள்வி எழுப்ப, தீபத்தூண் உள்ள இடத்தை தர்கா தரப்பினர் தங்களுக்கு உரியது என உரிமை கோருவதாக கூறினர்.

நாளையும் விசாரணை

இதைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையை நீதிபதிகள், நாளைய தினம் (நவம்பர் 19) ஒத்திவைத்தனர். தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு மீது எதிர் மனுதாரர் ராமரவிக்குமார் தரப்பு நாளை வாதங்களை முன்வைக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றத்தில் போலீசார் குவிப்பு

வரும் நவம்பர் 24ஆம் தேதி அன்று கார்த்திகை தீபம் திருநாளாகும். அன்றைய தினம் திருப்பரங்குன்றம் தீபத்தூண் என சொல்லப்படும் இடத்தில் தீபம் ஏற்ற முன்னர் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் திருப்பரங்குன்றத்தில் இன்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையும் நடைபெற்று வரும் சூழலில், திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பழனி ஆண்டவர் கோவில் வாசல் பகுதியில் மூன்று காவல் உதவி ஆணையர்கள் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோட்டை தெரு, 16 கால் மண்டபம் என திருப்பரங்குன்றத்தில் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் படிக்க | திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: இடைக்கால தடை கோரும் தமிழக அரசு, இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu