SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.37... தவெக அரசு ஏன் இவ்வளவு விலை கொடுக்கிறது? Explained

ஒரு யூனிட் மின்சாரத்தை 37 ரூபாய் வரை கொடுத்து வாங்கும் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழக வரலாற்றில் இவ்வளவு அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்வதே இதுதான் முதல்முறை. அந்த வகையில், தமிழ்நாடு அரசின் ஒப்பந்த விவரம், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு, தவெக அரசின் விளக்கம் என இதுகுறித்து விரிவாக இங்கு அலசலாம்.

Written By Sudharsan G
Published: Oct 13, 2026, 03:03 PM IST | Updated: Oct 13, 2026, 03:18 PM IST
Join

தமிழ்நாடு அரசின்  வரலாற்றிலேயே மிக அதிக விலையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மின்சாரத் தேவைக்கும், விநியோகத்திற்கும் இடையிலான பற்றாக்குறையை சமாளிக்க அரசு அதிக விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு அரசு மின்சாரம் கொள்முதல் செய்வதில் மேற்கொண்டுள்ள ஒப்பந்த விவரம், ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள், ஆளுங்கட்சியின் விளக்கம் ஆகியவற்றை தெளிவாக இங்கு காணலாம்.

மேலும் படிக்க | தலைமைச் செயலகத்தில் பவர் கட்... நடந்தது என்ன? - குற்றச்சாட்டும் விளக்கமும் Explained

மின்சார கொள்முதல் ஒப்பந்த விவரம்

குறுகிய காலத்தில் டெண்டர்

திமுகவின் குற்றச்சாட்டு

5 ரூபாய் மின்சாரத்தை 37 ரூபாய்க்கு வாங்கி 2,880 கோடி ரூபாய் மக்கள் பணத்தை வீணடிக்கும் தவெக அரசு என திமுக ஐ.டி.விங் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இதுகுறித்து திமுக தொழில்நுட்ப அணியின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில், 2026ஆம் ஆண்டு பிப்ரவரி - மே மாதம் வரையிலான திமுக ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரம் 5.40 ரூபாய் முதல் 9.50 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது என்றும்; நடப்பு அக்டோபர் மாதத்தில் தவெக ஆட்சியில் அதே மின்சாரம் 31.99 ரூபாய் முதல் 37 ரூபாய் வரை கொடுத்து வாங்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளது.

தவெக அரசில் நடந்திருக்கும் மாற்றத்தை காலவரிசைப்படி திமுக குற்றஞ்சாட்டி உள்ளது:

மே 23: கடந்த மே மாதம் அன்று 'அதிக விலை, ஊழல் சந்தேகம்' என்று கூறி, முந்தைய குறைந்த விலை குறுகிய கால ஒப்பந்தங்களைத் தவெக அரசு ரத்து செய்ததாக திமுக குறிப்பிட்டுள்ளது.

ஜூன் 25: நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் குறைந்த விலையில் மின்சாரம் வாங்குவோம் என அமைச்சர் நிர்மல் குமார் கடந்த ஜூன் 25ஆம் தேதி வாக்குறுதி அளித்ததையும் குறிப்பிட்டு சாடி உள்ளது.

செப்டம்பர் 9: அண்டை மாநிலமான ஆந்திரா, அக்டோபர் தேவைக்கான மின்சாரத்தை யூனிட் 16 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை என முன்கூட்டியே ஒப்பந்தம் செய்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 12: தமிழ்நாடு அரசு ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, கடைசி நேரத்தில் யூனிட்டுக்கு ரூ.37 கொடுத்து அவசரக் கொள்முதல் செய்கிறது என்றும் தவெகவின் நிர்வாகக் குளறுபடியால், ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் இருளில் மூழ்குவதோடு, மின்கட்டண உயர்வில் மக்கள் பாதிக்கப்பட வேண்டுமா என்றும் திமுக கேள்வி எழுப்பி உள்ளது.

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் குற்றச்சாட்டு

திமுக முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவரது X , "முன்பு மிகக் குறைந்த விலையில் போடப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு, தற்போது ஒறு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்வது என்பது நிர்வாகம் மற்றும் திட்டமிடலில் உள்ள அதிர்ச்சியூட்டும் கையாலாகாத்தனம். இல்லையெனில் இது ஒரு மாபெரும் ஊழலாக இருக்க வேண்டும்; அல்லது இவை இரண்டுமே கூட இருக்கலாம்" என குற்றஞ்சாட்டி உள்ளார்.

மேலும் படிக்க | மெட்ரோ ரயில் பயணத்தின் போது..பிரதமர் மோடி பேசியது என்ன? வெளியான தகவல்!

முதலமைச்சரை சாடும் அதிமுக

அதேபோல், தமிழ்நாடு அரசின் மின்சார கொள்முதல் குறித்து அதிமுக ஐ.டி.விங் கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர்களின் X பக்கத்தில், 37 ரூபாய்க்கு எதற்கு மின் கொள்முதல் செய்கிறீர்கள் என அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமாரிடம் கேள்வி எழுப்பி உள்ளது.

போன ஆட்சியில் 20 ரூபாய்க்கு மின்சாரம் கொள்முதல் ஆனதை சுட்டிக்காட்டி நீங்கள் வாய் கிழிய பேசியது எல்லாம் நியாபகம் இருக்கிறதா என முதலமைச்சர் விஜய்யை சுட்டிக்காட்டி சாடி உள்ளது.

ஊரான் வீட்டு நெய்-ன்னு மக்கள் பணத்தை இப்படி தான் இஷ்டத்துக்கு அள்ளி வீசுவீர்களா என்றும் ஏற்கெனவே இதில் கமிஷன் இருப்பதாக எல்லாம் சில குற்றச்சாட்டுகள் வந்திருக்கிறது என்றும் குற்றஞ்சாட்டி உள்ளது. மேலும் இதுதான் தூயசக்தி மாடல் போல என்றும் சாடியுள்ளது. 

மின்சாரம் கொள்முதல் செய்வதில் அதிக விலைக்கு ஒப்பந்தம் போட்டு, ஏற்கெனவே கடன் சுமையில் இருக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கும் தவெக அரசு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சொல்வது என்ன?

மின் தேவை அதிகரிப்பும்... கிடைக்காத மின்சாரமும்...

அதிக விலையில் கேஸ் பவர் மின்சாரம்

24 மணிநேரத்திற்கும் கிடையாது

முடிவரை

தமிழ்நாடு அரசு 37 ரூபாய்க்கு கொள்முதல் செய்வது உண்மைதான். அது எல்லா நேரங்களிலும் கிடையாது. தற்போது வரும் அக். 31ஆம் தேதிவரை, அதுவும் ஒவ்வொரு நாளின் பீக் ஹவர்ஸ் 6 மணிநேரத்திற்கு மட்டுமே என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டும் வகையில் அதிகளவில் இழப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மக்களுக்கு அதிர்ச்சி! வேகமெடுக்கும் விலைவாசி.. செப்டம்பரில் பணவீக்கம் 5.54% ஆக உயர்வு

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES