மழைப்பொழிவில் ஏற்படும் மாறுபாடுகள், எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடிய தண்ணீர் தட்டுப்பாடு போன்ற சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தில் நீர்வளப் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. VB-G RAM G திட்டத்தின் கீழ், நடப்பு நிதியாண்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் அமைக்கவும், 1,752 தடுப்பணைகள் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பயன்பாட்டில் இல்லாத 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைப்பம்புகளை நிலத்தடி நிலத்தடி நீர் செறிவூட்டும் அமைப்புகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் ஆயிரத்துக்கும் சற்று அதிகமான நிலத்தடி நீர் செறிவூட்டும் அமைப்புகள் அமைக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் 10,598 அமைப்புகளை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பூர் உள்ளிட்ட