SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் - சென்னையில் இன்று மழை இருக்குமா...? வானிலை அப்டேட்

தமிழ்நாட்டில் மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மற்றும் சென்னை உட்பட 26 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written By Sudharsan G
Published: Oct 23, 2026, 07:11 AM IST | Updated: Oct 23, 2026, 07:37 AM IST
Join

Tamil Nadu Weather Forecast, October 23: வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் இரவு நேரங்களிலும் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.

அந்த வகையில், சென்னை மாநகரின் தி.நகர், நந்தனம், வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, ஆலந்தூர், பழவந்தாங்கல், நங்கநல்லூர், பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

மேலும் படிக்க | தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனைக்கு Good Bye! அரசின் அசத்தல் Plan!

எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?

சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பின்படி மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் (மிக கனமழை: 15.6 மி.மீ - 204.4 மி.மீ); 26 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு அலர்ட்

மஞ்சள் அலர்ட்

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

வங்கக்கடலில் இன்று (அக். 23) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாகவும், இது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணிப்பு தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த உருவாக உள்ள புயலுக்கு என்ன பெயர் சூட்டப்பட உள்ளது என்பதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது.

புதிய புயலின் பெயர் அர்னாப்

இதுகுறித்து இன்று பதிவிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், "அடுத்த 4-5 நாட்களில் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் புயல், தமிழ்நாட்டைப் பாதிக்காமல் ஆந்திரப் பிரதேசத்தை நோக்கி நகரும் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு முரசு என பெயரிடப்படாது; அர்னாப் என்று பெயரிடப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | பனிச்சிறுத்தை முதல் பாகுபலி வரை..! iPod பிறந்தநாள்; அக்டோபர் 23-ன் சுவாரசியங்கள்!

இதுபோன்ற தகவல்களைப் பகிர்வதற்கு முன், அதிகாரப்பூர்வ பெயரிடும் வரிசையை சரிபார்க்க வேண்டும் என்றும் தவறான டிஜிட்டல் தடயத்தை விட்டுச் செல்லாதீர்கள் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

சென்னையின் இன்றைய வானிலை நிலவரம் குறித்து பதிவிட்டுள்ள அவர், "பல மணிநேரங்களுக்கு பிறகு தென் சென்னையில் இருந்து மேகங்கள் மெதுவாக சென்னையை நோக்கி நகர்ந்து வருகின்றன. சென்னையின் கடலோரப் பகுதிகளில் மழை தொடங்கி, நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழைப்பொழிவு இருக்கும்.

சூரியன் வெளிவரத் தொடங்கும்போது இந்த மழை பலவீனமடையும். சீரான லேசான / தூறல் போன்ற மழை தொடரும். இன்று சென்னைக்கு பெரியளவில் மழை இருக்காது. வரும் அக். 24, 25, 26 ஆகிய தேதிதகளில் சென்னையில் மிக நன்றாக மழை இருக்கும் என தெரிகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு என பதிவிட்டுள்ள அவர், விருதுநகர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தென்காசி, திருப்பூர், அரியலூர் மாவட்டங்களிலும்; டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | 40 கோடி செலவில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார்! தமிழ்நாடு அரசு உத்தரவு..

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES