தமிழ்நாடு முழுக்க சூப்பர் சுற்றுலா... தமிழ்நாடு அரசின் 8 நாள் டூர் - உடனே முந்துங்கள்
TTDC: தமிழ்நாடு முழுவதும் எட்டு நாட்கள் சுற்றுலாவான Tamil Nadu Tour வரும் நவம்பர் 21ஆம் தேதி அன்று தொடங்குகிறது. இந்த சுற்றுலாவில் எங்கெல்லாம் செல்லலாம்...? என்னென்ன வசதிகள் கிடைக்கும்...? கட்டணம் எவ்வளவு...? என்பதை இங்கு விரிவாக காணலாம்.
TTDC Tamil Nadu Tour: தமிழ்நாடு அரசின் சுற்றுலா துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) ஆன்மீக சுற்றுலா, கல்விச் சுற்றுலா, இன்பச் சுற்றுலா உள்ளிட்ட பல சுற்றுலா திட்டங்களை வகுத்துள்ளது.
அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களுக்கு எட்டு நாட்கள் சுற்றுலாவை TTDC திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில், 'Tamil Nadu Tour - A Journey through the Soul of Tamil Nadu' (தமிழ்நாட்டின் ஆன்மா வழியாத ஒரு பயணம்) என்ற பெயரில் உள்ள இந்த திட்டம் மொத்தம் எட்டு நாளாகும்.
இன்னும் 6 இருக்கைகளே உள்ளன
சென்னையில் தொடங்கி பாண்டிச்சேரி, பிச்சாவாரம், சிதம்பரம், வைத்தீஸ்வரன் கோவில், நாகூர், வேளாங்கண்ணி, தஞ்சாவூர், ராமேஸ்வரம், சுசீந்திரம், கன்னியாகுமரி, மதுரை, கொடைக்கானல் திருச்சி வழியாக இந்த சுற்றுலா அழைத்துச் செல்லப்படும்.
வரும் நவம்பர் 21ஆம் தேதி அன்று இந்த சுற்றுலா தொடங்க இருக்கிறது. இன்னும் 6 இருக்கைகள் மட்டுமே இருப்பதாக TTDC X பக்கத்தில் நவ. 10ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு பதிவிடப்பட்டுள்ளது.
www.ttdcbooking.com என்ற இணையதளத்தில் இந்த சுற்றுலாவுக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம்.
தொடர்பு எண்கள்: 044-25333333, 1800 4253 1111
மின்னஞ்சல்: sales@ttdconline.com
முதல் நாள் (நவம்பர் 21)
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சுற்றுலா வளாகத்தில் இருந்து பேருந்து மூலம் புறப்பட்டு மாமல்லபுரத்தில் காலை உணவு சாப்பிட்டு, புதுச்சேரி கடற்கரைக்கு சென்று அங்கிருந்து அரோபிந்தோ ஆஷரமம் செல்லலாம்.
மதியம் 1 மணிக்கு கடலூரில் மதிய உணவை அருந்தி, அடுத்து பிச்சாவாரம் சென்று அங்கு போட்டிங் செல்லலாம். மாலையில் சிதம்பரம் நடராஜர்கோவிலுக்குச் செல்லலாம். திருக்கடையூரில் உள்ள ஹோட்டல் தமிழ்நாட்டில் இரவு உணவு அருந்தி, அங்கேயே இரவு தங்கலாம்.
2ஆம் நாள் (நவம்பர் 22)
காலை உணவு சாப்பிட்டு நாகூர் தர்காவுக்கு செல்லலாம். அடுத்து வேளாங்கன்னி தேவாலயம் சென்று வழிபடலாம். அடுத்து தஞ்சாவூர் செல்லும் வழியில் மதிய உணவு அருந்தலாம். தஞ்சை பெரிய கோவிலில் தரிசனம் செய்து, தஞ்சையில் இரவு உணவருந்தி, அங்கேயே தங்கலாம்.
மேலும் படிக்க | சென்னை முருகன் கோவில்களுக்கு ஒருநாள் டூர்... தமிழக அரசு அறிவிப்பு
3ஆம் நாள் (நவம்பர் 23)
காலை உணவருந்தி ராமேஸ்வரம் நோக்கி புறப்படலாம். ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் மேற்கொண்டு, மதியம் உணவை அருந்தலாம். அங்கு ராமேஸ்வரத்தில் இரவு உணவு அருந்தி அங்கேயே தங்கலாம்.
4ஆம் நாள் (நவம்பர் 24)
காலையில் உணவருந்திவிட்டு பாம்பன் பாலத்திற்கு செல்லலாம். திருநெல்வேலி நோக்கி புறப்பட்டு மதியம் 1.30 மணிக்கு அங்கு மதிய உணவை சாப்பிடலாம். அங்கிருந்து கன்னியாகுமரி கோவிலுக்கு புறப்படலாம். அங்கிருந்து திருவள்ளூவர் சிலை, விவேகானந்தர் பாறைக்கு செல்லலாம். கன்னியாகுமரி ஹோட்டல் தமிழ்நாட்டில் இரவு உணவருந்தி, அங்கேயே தங்கலாம்.
5ஆம் நாள் (நவம்பர் 25)
காலை உணவருந்தி சுசீந்திரம் செல்லலாம். அங்கு சுசீந்திரம் திருமூர்த்தி கோவிலுக்குச் செல்லலாம். அங்கிருந்து புறப்பட்டு சாத்தூரில் மதிய உணவு அருந்தி, மாலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் மேற்கொள்ளலாம். மதுரையில் இரவு உணவருந்தி, அங்கேயே தங்கலாம்.
6ஆம் நாள் (நவம்பர் 26)
காலை உணவருந்திவிட்டு, கொடைக்கானல் புறப்படலாம். அங்கு மதிய உணவை முடித்து Coaker's Walk பகுதிக்கு செல்லலாம். ஷாப்பிங் முடித்துவிட்டு பில்லர் ராக், கிரீன் வேலி வியூ பார்த்துவிட்டு, போட்டிங் செல்லலாம். கொடைக்கானலில் உள்ள ஹோட்டல் தமிழ்நாட்டில் இரவு உணவருந்தி, அங்கேயே தங்கலாம்.
7ஆம் நாள் (நவம்பர் 27)
காலை உணவருந்திவிட்டு கொடைக்கானல் சில்வர் அருவிக்கு செல்லலாம். அங்கிருந்து திருச்சி நோக்கி செல்லலாம். ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலுக்குச் சென்று, உச்சி பிள்ளையார் கோவிலுக்கு செல்லலாம். திருச்சியில் அன்று இரவு தங்கி, உணவருந்தலாம்.
8ஆம் நாள் (நவம்பர் 28)
காலையில் உணவருந்திவிட்டு சென்னை நோக்கி புறப்படலாம். மதியம் செல்லும் வழியில் உணவருந்தலாம். மாலையில் சுற்றுலா வளாகத்தை சென்றடையலாம்.
கிடைக்கும் வசதிகள்
- பேருந்து
- சுற்றுலா வழிகாட்டி
- தங்கும் விடுதி
- உணவு
கட்டண விவரம்: ஒரு நபருக்கு ரூ.18,500
இன்னும் குறைந்த இருக்கைகளே உள்ளது என்பதால் உடனடியாக TTDC அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று முன்பதிவை மேற்கொள்ளலாம்.
மேலும் படிக்க | கொடைக்கானலில் இந்த வாகனங்களுக்கு தடை - சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு...