• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /விநாயகர் சதுர்த்தி 2026: தமிழகம் முழுவதும் 1 லட்சம் சிலைகள்.. சென்னையில் 18,000 போலீசார் பாதுகாப்பு!

விநாயகர் சதுர்த்தி 2026: தமிழகம் முழுவதும் 1 லட்சம் சிலைகள்.. சென்னையில் 18,000 போலீசார் பாதுகாப்பு!

விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் சிலைகள் நிறுவப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Written ByR Balaji
Published: Sep 14, 2026, 08:22 AM IST|Updated: Sep 14, 2026, 08:27 AM IST
joinshare
விநாயகர் சதுர்த்தி 2026: தமிழகம் முழுவதும் 1 லட்சம் சிலைகள்.. சென்னையில் 18,000 போலீசார் பாதுகாப்பு!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

2

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

3

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

4

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

5

வீடு கட்டுவோருக்கு சூப்பர் நியூஸ்: உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிய தமிழ்நாடு அரசு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாமை முன்னிட்டு சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்து அமைப்புகள் மட்டுமின்றி, பொதுமக்கள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்கள் சார்பிலும் பல்வேறு இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் விநாயகர் சிலைகள் வழிபாட்டிற்காக நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் காவல்துறையின் அனுமதியுடன் 1,562 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்த்து சுமார் 3000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரி மணக்குள் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு

புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்து வருகிறார். அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்த நிலையில், சிறப்பு பூஜைகள் விமர்சையாக நடைபெற்றன. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை தறக்கப்பட்டதை தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 21 வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கலசாபிஷேகமும் நடைபெற்றது.

பின்னர் மூலவர் விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. உற்சவர் விநாயகர் கற்பக விருட்ச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் 16 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இவை பிரசாதமாக வழங்கப்படு வருகின்றன. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நீண்ட வரிசையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சிறப்பு தரிசனத்திற்காக ரூ. 100 கட்டணத்தில் VIP நுழைவுச்சீட்டு வசதியும் இன்று மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 18000 போலீசார் பாதுகாப்பு

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கை உறுதி செய்வதுடன், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முக்கிய பகுதிகளில் கூடுதல் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் 16,500 காவல்துறையினருடன் 1,500 ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இதன் மூலம் மொத்தம் 18,000 பேர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள், சிலைகள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

விநாயகர் சிலை வைக்க விதிமுறைகள் என்னென்ன?

பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர், உள்ளாட்சி அமைப்பு மற்றும் நெடுஞ்சாலை துறையிடம் உரிய அனுமதி பெற வேண்டும். அதேபோல், தீயணைப்புத் துறை மற்றும் மின்சார வாரியத்திடமிருந்து தடையில்லா சான்றிதழும் பெற வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுட்த்தக்கூடிய ரசாயனப் பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுதப்பட்டுள்ளது. சிலையின் உயரம் பீடத்துடன் சேர்த்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். மருத்துவமனைகள், பள்ளி மற்று கல்லூரிகள் உள்ளிட்ட கவ்வி நறுவனங்கள், பிற வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் சிலைகளை நிறுவுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல் விளம்பரங்களுக்கு அனுமதி இல்லை

விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும் இடங்களில் அரசியல் கட்சிகள் அல்லது மதத் தலைவர்களை முன்னிறுத்தும் விளம்பர பதாகைகள் மற்றும் பேனர்களை வைக்க கூடாது என காவல்துறை தரப்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோல் பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான கோஷங்கள் அல்லது செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழா அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu