SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

BRICS 2026: பிரதமர் மோடியின் டின்னரில் சீன அதிபர் பங்கேற்காதது ஏன்...?

புதுடெல்லியில் BRICS உச்சிமாநாட்டை தொடர்ந்து பிரதமர் மோடி ஏற்பாடு செய்த இரவு விருந்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட சில தலைவர்கள் பங்கேற்கவில்லை. இதன் காரணத்தை இங்கு விரிவாக காணலாம்.

Written By Sudharsan G
Published: Sep 13, 2026, 13:57 IST | Updated: Sep 13, 2026, 14:48 IST
Image Credit: Chinese President XI Jinping, PM Narendra Modi | Image Source : X/@narendramodi, @BricsIndia2026
Join

BRICS உச்சிமாநாடு புதுடெல்லியின் பாரத மண்டபத்தில் நேற்று (செப். 12) தொடங்கியது. இன்றுடன் மாநாடு நிறைவடைகிறது. இந்தியா தலைமையேற்று இந்த 18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டை நடத்தி வருகிறது. இன்று நிறைவடைகிறது. இன்று பிரதமர் மோடி 7 நாட்டுத் தலைவர்களுடன் இருத்தரப்பு பேச்சுவார்த்தையை மேற்கொள்கிறார்.

பிரிக்ஸ் அமைப்பு

பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், சீனா, இந்தியா, ரஷ்யா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ரஷ்யா, சௌதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 11 உறுப்பு நாடுகள் உள்ளன.

பெலாரஸ், பொலிவியா, கியூபா, கஜகஸ்தான், மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான், வியட்நாம் உள்ளிட்ட 10 துணை நாடுகளும் பிரிக்ஸ் அமைப்பில் உள்ளன.

மேலும் படிக்க | Explained: BRICS 2026 'புதுடெல்லி பிரகடனம்' – உலக அரசியலில் என்ன மாற்றம் வரப்போகிறது?

பல நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் மசூத் பெஷேஷ்கியன், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, பிரேசில் வெளியுறவுத்துறை அமைச்சர் மௌரோ வியெய்ரா, சௌதி அரேபியா இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவூத், எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களும் தலைநகர் புதுடெல்லிக்கு வருகை வந்தனர்.

நேற்று தொடங்கிய உச்சிமாநாடு

பிரிக்ஸ் உச்சிமாநாட்டை முன்னிட்டு பாரத மண்டபத்தில் பல்வேறு நாட்டுத் தலைவர்களையும் பிரதமர் மோடி வரவேற்றார். தொடர்ந்து உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். மேலும் புதுடெல்லி பிரகடனமும் உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்டது.

இரவு விருந்தில் பங்கேற்காத சீன அதிபர்

உச்சிமாநாட்டை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ஏற்பாடு செய்த இரவு விருந்தை சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அபுதாபி இளவரசர் ஷேக் கலீத் பின் முகமது உள்ளிட்ட சிலர் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் படிக்க | Explained : 7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வரும் சீன அதிபர் ஜின்பிங்! இனி என்ன ஆகும்?

சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று (செப். 12) மதியம் டெல்லிக்கு வருகை தந்தார். பிரதமர் மோடியுடன் இருத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்திய உடன் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிலும் பங்கேற்றார். தலைவர்கள் அனைவரும் நாள் முழுவதும் முக்கியமான தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் இடம்பெற்றன.

சீன அதிபர் பங்கேற்காததன் காரணம்

நேர வேறுபாடு காரணமாக ஏற்பட்ட சோர்வு மற்றும் களைப்பு காரணமாகவே சீன அதிபர் ஜி ஜின்பிங் இரவு விருந்தில் கலந்துகொள்ளவில்லை என்று இத்தகவல் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். நீண்ட விமானப் பயணத்திற்கு பின்னரே அவர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் பங்கேற்பு

ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட பிரிக்ஸ் அமைப்பின் பிற தலைவர்கள் பிரதமர் மோடியின் இரவு நேர விருந்தில் கலந்துகொண்டனர். மத்திய அமைச்சர்களும், மாநில முதலமைச்சர்களும் விருந்தில் பங்கேற்றனர். இவர்கள் இரண்டு பேருந்தில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து பாரத மண்டபத்திற்கு வருகை தந்தனர்.

மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ், சிவ்ராஜ் சிங் சௌகான் ஆகியோரும்; மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபாட்னாவிஸ், மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோர் இரவு விருந்தில் பங்கேற்றனர்.

மேலும் படிக்க | Video | BRICS 2026: 'ஒரு போட்டோ ப்ளீஸ்..’ பிரதமர் மோடியுடன் போட்டோ எடுத்த வெளிநாட்டு அதிகாரிகளின் ஃபேன் மொமெண்ட்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES