மத்திய அமைச்சரவை கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. மதியம் 1 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், தொகுதி மறுசீரமைப்புச் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
இடைத்தேர்தல் வழக்கில் தீர்ப்பு: திருச்சி கிழக்கு, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை கோரிய வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
திருப்பரங்குன்றம் வழக்கு: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் மீது தொடுக்கப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
பாலியல் வழக்கில் தீர்ப்பு: கோவை சூலூர் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது.