SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

Tamil News LIVE: சென்னையில் கனமழை; மேற்கு வங்க கூட்டநெரிசல்; ம.பி., லாரி விபத்து

Tamil News LIVE Updates: சென்னையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது; மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை விழாவில் கூட்டநெரிசல்; மத்திய பிரதேசத்தில் லாரி விபத்து உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்ஸ் இதோ...

Written By Sudharsan G
Published: Oct 18, 2026, 09:14 AM IST | Updated: Oct 18, 2026, 11:05 AM IST
Join

சென்னையில் கனமழை அலர்ட்: சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், சென்னையில் இன்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

லாரி விபத்து: மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். நெல் மூட்டைகளை ஏற்றிவந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் கூட்டத்தில் புகுந்ததில் விபத்து ஏற்பட்டது. 39 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

18 Oct 2026, 11:04 AM

Tamil News LIVE: அக்.23 முதல் கண்ணாடி மேற்கூரை ரயில் சேவை

மதுரை - குருவாயூர் வழித்தடத்தில் கண்ணாடி மேற்கூரை ரயில் பெட்டிகள் இருக்கும் வகையில், ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் தமிழக - கேரளா எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை அழகை ரசிக்க முடியும். (மேலும் படிக்க)
 

18 Oct 2026, 11:02 AM

Tamil News LIVE: புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்வரத்து

தலைநகர் சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 300 மி.மீட்டருக்கு மேல் மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. நேற்று இரவு கொட்டித் தீர்த்த அதி கனமழையால், சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளின் நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டு இருக்கிறார் (மேலும் படிக்க)

18 Oct 2026, 9:17 AM

IND vs WI : சூர்யவன்ஷி விளையாடாதது ஏன்?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20ஐ தொடரில் வைபவ் சூர்யவன்ஷி களமிறக்கப்படாதது குறித்து இந்திய அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கருத்து தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)

18 Oct 2026, 9:15 AM

Tamil News Live : சென்னையில் மேக வெடிப்பு இல்லை

சென்னை மாநகரில் நேற்றிரவு தொடங்கி நள்ளிரவு வரை கனமழை கொட்டித் தீர்த்தது. மேக வெடிப்பு நிகழ்ந்ததாக இணையத்தில் பலரும் பதிவிட்ட நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் அதை மறுத்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் கருத்துக்கு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அதிருப்தி தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES