SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

Tamil News LIVE: தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்; தங்கம் விலை சரிவு; ஐபிஎல் டிரேட்; தமிழ்நாடு வானிலை - அப்டேட்ஸ்

Tamil News LIVE Updates: தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்; தங்கம் விலை சரிவு; அசாம் ரயில் விபத்து; தமிழ்நாடு வானிலை உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்ஸை இங்கு விரிவாக காணலாம்.

Written By Sudharsan G
Published: Nov 11, 2026, 10:07 AM IST | Updated: Nov 11, 2026, 03:30 PM IST
Image Credit: CM Vijay | Image Source : X
Join

தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்: சென்னையில் தவெக சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று (நவ. 11) காலை 11 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என தகவல்.

தமிழ்நாடு வானிலை: சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

11 Nov 2026 13:31 IST

Chennai Traffic Diversion: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் ஆதம்பாக்கம், மஸ்தான்கோரி சாலை, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலை சந்திப்பு அருகே கழிவுநீர் குழாய் சீரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் ஐந்து நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. வாகன ஓட்டிகள் அறிவிக்கப்பட்ட மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
 

11 Nov 2026 13:30 IST

Sonia Gandhi News: சோனியா காந்தி சுயசரிதை புத்தகம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை குறித்து இரண்டு மாதங்களுக்கு முன்பே எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்ததாக சோனியா காந்தி தனது சுயசரிதையில் குறிப்பிட்டு இருந்தது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. (மேலும் படிக்க)
 

11 Nov 2026 12:51 IST

Madurai Latest News: மதுரை புத்தக திருவிழா - எங்கு, எப்போது?

மதுரை மாவட்டத்தில் வரும் நவம்பர் 13ஆம் தேதி முதல் நவம்பர் 23ஆம் தேதி முதல் தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த புத்தகத் திருவிழாவில் 10% தள்ளுபடி விற்பனை நடைபெறும். (மேலும் படிக்க)

11 Nov 2026 10:57 IST

TN Job News: பள்ளியில் பியூன், உதவியாளர் பணி

அரக்கோணம் கடற்படை பள்ளியில் அலுவலக உதவியாளர், பியூன் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
 

11 Nov 2026 10:56 IST

Local Holiday News: மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

நவம்பர் 16ஆம் தேதி திங்கள்கிழமை மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால், மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். (மேலும் படிக்க)
 

11 Nov 2026 10:33 IST

IPL Trade Live : ஹர்திக் - அர்ஷ்தீப் டிரேட் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஹர்திக் பாண்டியா - அர்ஷ்தீப் சிங் டிரேட் ஐபிஎல் நிர்வாகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், எந்த அணிக்கு அதிக லாபம் (மேலும் படிக்க)

11 Nov 2026 10:15 IST

Indian Railways Update : மின்சார ரயில்களில் இனி கதவுகள் இருக்கும்

மும்பை ஏசி அல்லாத புறநகர் ரயில்களில் முதல்முறையாக தானியங்கி கதவுகள் பொருத்தப்பட உள்ளன. சென்னை ஐசிஎப் தயாரித்துள்ள 12 பெட்டிகள் கொண்ட ரயிலின் சிறப்பம்சங்கள் மற்றும் விபத்துகளை தடுக்கும் புதிய வசதிகள் (மேலும் படிக்க)

11 Nov 2026 10:14 IST

IPL Updates : ஐபிஎல் தொடரில் வரும் மாற்றங்கள் - Explained

ஐபிஎல் 2028 தொடரில் பல்வேறு மாற்றங்களை எதிர்பார்க்கும் சூழலில், 2 புதிய அணிகளை சேர்க்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ஐபிஎல் தொடரில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அறிய இதை கிளிக் செய்யவும்.

11 Nov 2026 10:13 IST

Tamil News Live : முதலமைச்சர் விஜய் மீது சிபிஐ விமர்சனம்

13 கோடி பேர் வாக்கு பறிபோனதற்கு முதலமைச்சர் ஏன் மௌனமாக இருக்கிறார்? என சிபிஐ மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் கேள்வி எழுப்பி உள்ளார். (மேலும் படிக்க)

11 Nov 2026 10:13 IST

Gold Rate Live Updates: தங்கம் விலை நிலவரம்

சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 195 குறைந்து, ரூ.13,015 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவரனுக்கு ரூ.1,560 குறைந்து, ரூ.1,04,120 ஆக விற்பனையாகிறது.

11 Nov 2026 10:09 IST

Assam Train Derails : அசாமில் ரயில் விபத்து

கொல்கத்தாவில் இருந்து மிசோரம் செல்லும் விரைவு ரயில், அசாம் தலைநகர் கௌகாத்தி அருகே இன்று காலை தடம் புரண்டது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதுமில்லை என ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES