வங்கக் கடலில் நவ.16 ஆம் தேதி 'அக்வான்' புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதுவும் முந்தைய புயல்கள் போல ஆந்திரத்தை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் வி.ஆர்.துரை தெரிவித்துள்ளார். தங்கம் விலை இன்றும் சரிவை கண்டுள்ளது. சவரனுக்கு ரூ. 640 குறைந்து ஒரு பவுன் ரூ. 1,00,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று குழந்தைகள் தினம் என்பதால் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் உள்ளூரில் நடக்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டி மும்பை, இந்தூர், கொல்கத்தா, நியூசண்டிகார் உள்பட பல்வேறு நகரங்களில் இன்று தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி வரை நடக்கிறது.