• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /திருச்சி
  • /ஆன்லைனில் விரித்த வலையில் சிக்கி... ரூ.1.9 லட்சத்தை இழந்த பெண் - திருச்சியில் நடந்தது என்ன?

ஆன்லைனில் விரித்த வலையில் சிக்கி... ரூ.1.9 லட்சத்தை இழந்த பெண் - திருச்சியில் நடந்தது என்ன?

Trichy Cyber Crime News: திருச்சியில் பெண் ஐ.டி. ஊழியர் ஆன்லைன் முதலீட்டு மோசடியில் சுமார் ரூ.1.9 லட்சத்தை இழந்துள்ளார். இதுகுறித்து போலீசாரிடம் அவர் புகார் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் மோசடி சார்ந்து போலீசார் சில அறிவுறுத்தல்களையு் வழங்கி உள்ளனர்.

Written BySudharsan G
Published: Nov 28, 2026, 14:43 IST|Updated: Nov 28, 2026, 14:52 IST
joinshare
ஆன்லைனில் விரித்த வலையில் சிக்கி... ரூ.1.9 லட்சத்தை இழந்த பெண் - திருச்சியில் நடந்தது என்ன?
Image Credit: AI Generated Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

2

ஆன்லைனில் விரித்த வலையில் சிக்கி... ரூ.1.9 லட்சத்தை இழந்த பெண் - திருச்சியில் நடந்தது என்ன?

3

15 நாட்கள் வீட்டிலேயே இல்லை... ஆனால் ரூ.14,000 கரண்ட் பில் - மதுரை மக்களுக்கு ஷாக்

4

வேறு மாநிலத்தவருக்கு அட்ரெஸ் கொடுக்க கூடாது! மீறினால் ரேஷன் சலுகை கட்..புதுவை அரசு அதிரடி

5

ராகு, கேது பெயர்ச்சி: டிசம்பர் 5 முதல் 6 ராசிகளுக்கு அட்டகாசம்!! ராகு, கேது அருளால் கேட்டது கிடைக்கும்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Trichy Cyber Crime News: திருச்சி விமான நிலையம் அருகே உள்ள நவல்பட்டு பகுதியில் எல்காட்டு திருச்சி ஐ.டி. பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றி வரும் 22 வயது பெண் மென்பொறியாளர், ஆன்லைன் முதலீட்டு மோசடியில் சுமார் ரூ.1.9 லட்சத்தை இழந்துள்ளார்.

கடந்த நவம்பர் 1ஆம் தேதி, டெலிகிராம் செயலி மூலம் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் அவரைத் தொடர்புகொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | திருச்சி மணப்பாறையில் ரூ.868 கோடியில் புதிய ஆலை... 650 வேலைவாய்ப்பு!

ஆன்லைன் ரேட்டிங்கிற்கு ரூ.3,900

அந்த பெண் மென்பொறியாளரிடம் தன்னை லட்சுமி என அந்த நபர் தன்னை அறிமுகப்படுத்தி உள்ளார். ஹோட்டல்களுக்கு ஆன்லைன் ரேட்டிங் வழங்குவது மற்றும் நேர்மறையான வாடிக்கையாளர் விமர்சனங்களைப் பதிவிடுவது போன்ற பணிகளைச் செய்யுமாறு ஐ.டி., ஊழியரிடம் கேட்டுள்ளார்.

இதை செய்த உடன் ஊழியரின் ஆன்லைன் வாலட்டில் ரூ.3,900 செலுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அதனை பணத்தை அவரால் வங்கிக் கணக்கிற்கு மாற்றிக்கொள்ள முடியவில்லை.

முதலீடு பேரில் ரூ.1.9 லட்சம் மோசடி

இதையடுத்து, மற்றொரு அடையாளம் தெரியாத நபர் அவரைத் தொடர்புகொண்டு, எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்துடன் தொடர்புடையே புதிய ஆன்லைன் முதலீட்டுத் தளத்தில் பணத்தை முதலீடு செய்யுமாறு கூறி, முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் ஆசை காட்டி உள்ளார்.

இதை நம்பி, அந்த பெண் கடந்த நவம்பர் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை அந்த நபர் வழங்கிய வங்கிக் கணக்கிற்கு ரூ.1.9 லட்சத்தை அனுப்பியிருக்கிறார். ஆனால், அதன் பிறகு அந்த நபரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

மேலும் படிக்க | திருச்சி : பழங்குடியினர், நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

புகார் அளித்த ஐ.டி. ஊழியர்

அதன் பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண், கடந்த வியாழக்கிழமை (நவ. 26) திருச்சி சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதுகுரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, திருச்சி மாநகர காவல் துறையினர் டிஜிட்டல் கைது மோசடி மற்றும் குழந்தைகளின் இணையப் பாதுகாப்பு ஆகியவை குறித்து கடும் எச்சரிக்கை அளித்து அவர்களின் X பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

டிஜிட்டல் கைது மோசடிக்கு எச்சரிக்கை

டிஜிட்டல் கைது (Digital Arrest) மோசடி – எச்சரிக்கை! #TrichyCityPolice #DigitalArrest #Scam #Alert #cyberawareness https://t.co/yVrIrJ6Hl3

— Trichy city police (@TrichyCityPolic) November 26, 2026

  • காவல்துறை அல்லது அரசு அதிகாரிகள் போல் நடித்து வீடியோ அழைப்பில் மிரட்டுபவர்களை நம்ப வேண்டும் என்றும்; கைது செய்வதாகக் கூறி பணம் கேட்பது சைபர் மோடியாகும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
  • OTP, வங்கி விவரங்களைப் பகிரவோ, பணம் அனுப்பவோ வேண்டாம் என்றும் டிஜிட்டல் கைது என்ற சட்ட நடைமுறையே கிடையாது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
  • சைபர் நிதி மோசடிக்கு ஆளானால் உடனடியாக 1930 என்ற எண்ணை அழைக்க வேண்டும்.

குழந்தைகளின் இணையப் பாதுகாப்பு

#childcyberawareness #CyberSafetyforKids #StaySafeOnline #DigitalSafety #OnlineSafetyForChildren #CyberSmartKids #InternetSafety #CyberAwareness #ProtectOurChildren #ThinkBeforeYouClick #CyberSecurityAwareness #TrichyCityPolice https://t.co/DnhR1WrgU8

— Trichy city police (@TrichyCityPolic) November 27, 2026

  • அறிமுகமில்லாத நபர்களுடன் ஆன்லைனில் பேச வேண்டாம் என்றும் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தகவல்களைப் பகிர வேண்டாம் என்றும் குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
  • தெரியாத Link மற்றும் செயலிகளைத் திறக்க வேண்டாம் என்றும் ஆன்லைன் மிரட்டல் அல்லது தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் குழந்தைகளுக்கு காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
  • குழந்தைகளின் இணையப் பயன்பாட்டைப் பெற்றோர்கள் கண்காணிக்கும்படியும் காவல்துறை தெரிவித்துள்ளது. குழந்தை உதவி எண்: 1098

மேலும் படிக்க | திருச்சி மக்களே! உங்களுக்கான பொன்னான வாய்ப்பு - மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu