திருச்சி மாவட்டம் மணப்பாறையில், 868 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய உணவு தயாரிப்பு ஆலையை அமைக்க பெப்சிகோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. லேஸ், குர்குரே உள்ளிட்ட நொறுக்குத் தீனிகள் இங்கு தயாரிக்கப்பட உள்ள நிலையில், சுமார் 650 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.