திருச்சி மாநகரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், நாளை (செப். 16) மாலை 6 மணிமுதல் நாளை மறுதினம் (செப். 17) காலை 6 மணிவரை போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில் சரக்கு வாகனங்களுக்கான மாற்று வழித்தடங்கள், நகரப் பேருந்துகளுக்கான மாற்று வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், விநாயகர் சிலைகளை கரைக்க பயன்படுத்த வேண்டிய வழித்தடங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| மதுரை - சென்னை | துவரங்குறிச்சி லஞ்சமேடு | துவரங்குறிச்சி-மணப்பாறை-குளித்தலை-முசிறி-பெரம்பலூர் |
| சென்னை – மதுரை | பெரம்பலூர் ரோவர் கல்லூரி பைபாஸ் | பெரம்பலூர்-முசிறி-குளித்தலை-மணப்பாறை-துவரங்குறிச்சி |
| திண்டுக்கல்-சென்னை | மணப்பாறை ஆண்டவர் கோவில் | மணப்பாறை-குளித்தலை-முசிறி-பெரம்பலூர் |
| சென்னை-திண்டுக்கல் | பெரம்பலூர் ரோவர் கல்லூரி பைபாஸ் | பெரம்பலூர்-முசிறி-குளித்தலை-மணப்பாறை |
| கரூர்-தஞ்சாவூர் | குளித்தலை சங்ககேட் | குளித்தலை-முசிறி-பெரம்பலூர்-அரியலூர்-திருவையாறு |
| தஞ்சாவூர்-கரூர் | தஞ்சாவூர் பெட் பள்ளி சந்திப்பு | திருவையாறு-அரியலூர்-பெரம்பலூர்-முசிறி-குளித்தலை |
| நாமக்கல்-தஞ்சாவூர் | முசிறி பெரியபாளயம் பூங்கா | முசிறி-பெரம்பலூர்-அரியலூர்-திருவையாறு |
| தஞ்சாவூர்-நாமக்கல் | தஞ்சாவூர் பெட் பள்ளி சந்திப்பு | திருவையாறு-அரியலூர்-பெரம்பலூர்-முசிறி |
| புதுக்கோட்டை-சென்னை | புதுக்கோட்டை சிப்காட்-ரெங்கம்மாள் சத்திரம் | தஞ்சாவூர்-திருவையாறு-அரியலூர்-பெரம்பலூர் |
| சென்னை-புதுக்கோட்டை | பெரம்பலூர் ரோவர் கல்லூரி பைபாஸ் | பெரம்பலூர்-அரியலூர்-திருவையாறு-தஞ்சாவூர் |
நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இருந்து வரும் அனைத்து நகரப் பேருந்துகளும் மாம்பழச்சாலையில் பயணிகளை இறக்கிவிட்டு, வலதுபுறமாக அம்மா மண்டபம் வழியாகச் சென்று ஸ்ரீரங்கம் பெரிய கோபுரம் - திருவானைக்காவல் வழியாக, மீண்டும் தங்களது வழித்தடத்தில் செல்ல வேண்டிய ஊர்களுக்கு இயக்கப்பட வேண்டும்.
மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வரும் அனைத்து நகரப் பேருந்துகளும் சத்திரம் பேருந்து நிலையத்துடன் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட வேண்டும்.
அதேநேரத்தில், விநாயகர் சிலைகளை காவேரி ஆற்றில் கரைக்க எந்தெந்த வழிதடங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை இங்கு காணலாம்.
1. பெரம்பலூர் அரியலூர் - மண்ணச்சநல்லூர் - லால்குடி சாலைகளின் வழியாக வரும் விநாயகர் சிலைகள் நம்பர் 1 டோல்கேட் - CP-6, திருவானைக்காவல், மாம்பழச்சாலை வழியாக காவேரி ஆற்றின் இடதுபுறம் விநாயகர் சிலைகளை கரைத்துவிட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2. திருவெறும்பூர் சாலை வழியாக வரும் விநாயகர் சிலைகள் பாலக்கரை காந்தி மார்க்கெட் ஆர்ச் - பெரியகடை வீதி - அண்ணா சிலை வழியாக காவேரி பாலத்தின் வலதுபுறம் விநாயகர் சிலைகளை கரைத்துவிட்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
3. புதுக்கோட்டை சாலை வழியாக வரும் விநாயகர் சிலைகள் டி.வி.எஸ் டோல்கேட், ஹெச்பிஓ, பிரபாத் ஜங்ஷன், அஞ்சுமன் பஜார் (காயிதே மில்லத் சாலை), காந்தி மார்க்கெட் ஆர்ச், பெரியகடைவீதி, அண்ணா சிலை வழியாக காவேரி பாலத்தின் வலதுபுறம் விநாயகர் சிலைகளை கரைத்துவிட்டு செல்லவேண்டும்.
4. திண்டுக்கல் சாலை வழியாக வரும் விநாயகர் சிலைகள் பொன்நகர் - பெரியமிளகுபாறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெஸ்ட்ரி ரவுண்டானா எம்ஜிஆர் சிலை - ஸ்டூடன்ஸ் ரோடு - சாஸ்திரி ரோடு - KT ஜங்ஷன் - கரூர் பைபாஸ் ரோடு அண்ணாசிலை வழியாக காவேரி பாலத்தின் வலதுபுறம் விநாயகர் சிலைகளை கரைத்துவிட்டு செல்லவேண்டும்.
5. வயலூர் சாலை வழியாக வரும் விநாயகர் சிலைகள் புத்தூர் 4 ரோடு, சவுத் ஆர்ச், நார்த் ஆர்ச், KT ஜங்ஷன், கரூர் பைபாஸ் ரோடு, அண்ணா சிலை வழியாக காவேரி பாலத்தின் வலதுபுறம் விநாயகர் சிலைகளை கரைத்துவிட்டு செல்லவேண்டும்.
6. குழுமணி சாலை வழியாக வரும் விநாயகர் சிலைகள் வெக்காளியம்மன் நகர், ஜங்ஷன், சாலைரோடு நார்த் ஆர்ச், KT ஜங்ஷன், கரூர் பைபாஸ் ரோடு, அண்ணா சிலை வழியாக காவேரி பாலத்தின் வலதுபுறம் விநாயகர் சிலைகளை கரைத்துவிட்டு செல்லவேண்டும்.