SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

8வது ஊதியக் குழு: அகவிலைப்படி இணைப்பு, ஊதிய மறுஆய்வு... அரசு ஊழியர்களுக்கு புத்தம் புது அப்டேட்

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்காக அமைக்கப்பட்ட 8-வது ஊதியக் குழுவின் கூட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, ஊதியக் குழுவின் கூட்டங்கள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன. அடுத்த முக்கியமான கூட்டம் மும்பையில் நடைபெறவுள்ளது.

Written By Sripriya Sambathkumar
Published: Oct 17, 2026, 08:24 AM IST | Updated: Oct 17, 2026, 08:46 AM IST
Join

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இது முக்கியமான காலகட்டம். அவர்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் இன்னும் சில மாதங்களில் அமலுக்கு வரவுள்ளன. இந்த செயல்முறையின் ஒரு அங்கமாக, நாடு முழுவதும் குழு உறுப்பினர்கள் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

மத்திய அரசு ஊழியர்களுக்காக அமைக்கப்பட்ட 8-வது ஊதியக் குழுவின் கூட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த முக்கியமான கூட்டம் மும்பையில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக, 'நிரந்தர ஊதிய மறுஆய்வு அமைப்பை' (Permanent Pay Review Body) உருவாக்க வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கை ஊதியக் குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் புதிய 'ஃபிட்மென்ட் ஃபாக்டர்’ (fitment factor) குறித்து பரிந்துரைக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று அந்த முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையின் விவரங்கள் என்ன, இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நிதி நிலையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பார்ப்போம்.

மேலும் படிக்க | Explainer: 8வது ஊதியக் குழு... அரசு ஊழியர்களுக்கு அரியர் எவ்வளவு கிடைக்கும்? ஜனவரி 2026 முதல் கிடைக்குமா?

மத்திய அரசு ஊழியர்களின் சமீபத்திய கோரிக்கைகள்

அகவிலைப்படி இணைப்பு

தேசிய அஞ்சல் அமைப்புகளின் கூட்டமைப்பு (FNPO), அகவிலைப்படி (Dearness Allowance) அல்லது அகவிலை நிவாரணம் (Dearness Relief) 25 சதவீதத்தைத் தாண்டும்போதெல்லாம், அதை உடனடியாக அடிப்படை ஊதியத்துடன் அல்லது அடிப்படை ஓய்வூதியத்துடன் இணைக்க வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது.

நிரந்தர ஊதிய மறுஆய்வு அமைப்பு

மேலும், ஒரு 'நிரந்தர ஊதிய மறுஆய்வு அமைப்பை' உருவாக்க வேண்டும் என்றும் FNPO அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் ஊதியக் குழுவுக்கு காத்திராமல், அதாவது 10 ஆண்டுகள் இடைவெளி இல்லாமல் இன்னும் குறுகிய காலத்திலேயே ஊதிய திருத்தம் செய்ய வழிவகை செய்யப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

90 நாட்களுக்குள் புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டர்

அகவிலைப்படி அல்லது அகவிலை நிவாரணம் 50 சதவீதத்தை எட்டிய 90 நாட்களுக்குள், ஊதிய மறுசீரமைப்பிற்கான புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டரைப் பரிந்துரைப்பதே இந்த அமைப்பின் முதன்மைப் பணியாக இருக்கும்.

மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: எகிறப்போகும் சம்பளம், ஓய்வூதியம்... அரசு ஊழியர்களுக்கு மொத்தமாய் மாறப்போகும் அமைப்பு

ஓய்வூதியதாரர்களுக்கான கோரிக்கை

அகவிலை நிவாரண இணைப்பு

இதேபோல், 'பாரத் பென்ஷனர்ஸ் சமாஜ்' (Bharat Pensioners Samaj) அமைப்பும், அகவிலை நிவாரணம் 25 சதவீதத்தைத் தாண்டும்போது அதை அடிப்படை ஓய்வூதியத்துடன் இணைக்கும் முன்மொழிவை அரசு தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

3.83 ஃபிட்மென்ட் ஃபாக்டர்

மேலும், 3.83 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரையும் இந்த அமைப்பு முன்மொழிந்துள்ளது.

இக்கோரிக்கைகளின் முக்கிய நோக்கம் என்னவென்றால், பணவீக்கத்தால் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வாங்கும் திறன் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதும், ஒவ்வொரு ஊதிய அல்லது ஓய்வூதிய மறுசீரமைப்பிற்கும் அடுத்த ஊதியக் குழு அமைக்கப்படும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டிய சூழலைத் தவிர்ப்பதுமே ஆகும்.

இருப்பினும், இவை தற்போது பல்வேறு அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் மட்டுமே என்பதையும், அரசு இன்னும் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மும்பையில் 8வது ஊதியக் குழுவின் முக்கிய கூட்டம்

8வது ஊதியக் குழு, அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மும்பையில் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவுள்ளது. தசரா பண்டிகைக்குப் பிறகு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், பல முக்கியமான கோரிக்கைகள் ஊதியக் குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட வாய்ப்புள்ளது.

2025-ஆம் ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதியன்று 8-வது ஊதியக் குழு அமைக்கப்பட்டதிலிருந்து கடந்த 11 மாதங்களுக்குள், இந்த நிபுணர் குழு டெல்லி, லடாக், மேற்கு வங்கம், சென்னை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியான முக்கியக் கூட்டங்களை நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: 2027 -இல் ரிப்போர்ட்? சம்பளம், ஓய்வூதியம், அரியர்.... எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES