8வது ஊதியக் குழு: அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு அரியர் கிடைக்கும்? கணக்கீடு என்ன?
8th Pay Commission Arrears: கடந்த ஆண்டு நவம்பரில் 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது பணிகளை முடிக்க மொத்தம் 18 மாத கால அவகாசத்தைக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், அடுத்த ஆண்டு மத்தியில் இதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8th Pay Commission Arrears: 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலாக்கப்படும் நாளுக்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இதன் மூலம் அவர்களது சம்பளம், அலவன்சுகள் மற்றும் ஓய்வூதியத்தில் பெரிய ஏற்றம் கிடைப்பதோடு ஜனவரி 2026 முதல் பிதிய ஊதியக் குழுவின் நன்மைகளுக்கான அரியர் தொகையும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நவம்பரில் 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது பணிகளை முடிக்க மொத்தம் 18 மாத கால அவகாசத்தைக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், அடுத்த ஆண்டு மத்தியில் இதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பள உயர்வு எப்போது தொடங்கும்?
- அறிக்கை அடுத்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களுக்கான உயர்த்தப்பட்ட ஊதியம் எப்போது முதல் கிடைக்கத் தொடங்கும்?
- மத்திய அரசு ஊழியர்களுக்கு 2026 ஜனவரி 1 முதல் புதிய ஊதியக் குழுவின் பலன் கிடைக்குமா?
- அல்லது அடுத்த ஆண்டிலேயே ஊதிய உயர்வு கிடைக்குமா?
- நிலுவைத் தொகை (arrears) எந்தத் தேதியிலிருந்து கணக்கிடப்படும்?
இந்த அனைத்து கேள்விகளுக்கான விடைகளையும் இந்த பதிவில் புரிந்துகொள்ளலாம்.
7வது ஊதியக் குழுவின் போது என்ன நடந்தது?
7வது ஊதியக் குழு பிப்ரவரி 2014-ல் அறிவிக்கப்பட்டது, ஆனால் அதன் பரிந்துரைகள் 2016 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்தன. அப்போது, பிப்ரவரி 2014 முதல் டிசம்பர் 2015 வரையிலான காலத்திற்கான ஊதிய உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையாக வழங்கப்பட்டது.
இதை ஒரு உதாரணம் மூலம் புரிந்துகொள்வோம்:
- 7வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ₹18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
- அகவிலைப்படியில் (DA) 125% உயர்வு அளிக்கப்பட்டது.
- இதன் விளைவாக, அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றைச் சேர்த்தபோது மாத ஊதியம் ₹40,500 ஆக இருந்தது.
- அதேவேளையில், 2.57 என்ற 'ஃபிட்மென்ட் ஃபேக்டர்’ (fitment factor) பயன்படுத்தப்பட்டு, அகவிலைப்படி பூஜ்ஜியமாக மாற்றியமைக்கப்பட்டது.
- இந்த புதிய கணக்கீடுகளின்படி, ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ₹46,260 ஆக உயர்ந்தது.
- அதாவது, ஊதியக் குழு அறிவிக்கப்பட்டதற்கும் அது நடைமுறைக்கு வந்த தேதிக்கும் இடைப்பட்ட காலத்திற்கு, மாதந்தோறும் ₹5,760 நிலுவைத் தொகையாகக் கணக்கிடப்பட்டது. 12 மாத காலத்திற்கு இது மொத்தம் ₹69,120 ஆக அமைந்தது.
8வது ஊதியக் குழுவின் நிலை என்ன?
மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும்? அக்டோபர் 28, 2025 அன்று PIB வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "கடந்தகால நடைமுறைகளின் அடிப்படையில், 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு அரியர் தொகை: அவ்வாறு நிகழ்ந்தால், மத்திய அரசு ஊழியர்கள் பல மாதங்களுக்கான ஊதிய உயர்வை அரியர் தொகையாகப் (Salary Hike Arrears) பெறுவார்கள். இந்த நிலுவைத் தொகையின் அளவு, 'ஃபிட்மென்ட் ஃபேக்டர்', அகவிலைப்படி (DA) மற்றும் பிற கூறுகள் தொடர்பாக ஊதியக் குழு எடுக்கும் முடிவுகளைப் பொறுத்து அமையும்.
தொடரும் காத்திருப்பு: ஊதியக் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்து, அரசு அதற்கு ஒப்புதல் அளித்த பின்னரே மத்திய அரசு ஊழியர்கள் புதிய ஊதிய அமைப்பின் பலன்களைப் பெறுவார்கள். இதன் விளைவாக, ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.
மேலும் படிக்க | பிஎம் கிசான் 24வது தவணை: விவசாயிகள் அறிந்திருக்க வேண்டிய 4 முக்கிய மாற்றங்கள்
மத்திய அரசு ஊழியர்களுக்கான அரியர் எப்படி கணக்கிடப்படுகின்றது?
அரியர் கணக்கீட்டிற்கான சூத்திரம் இதோ:
அரியர் தொகை = மாதாந்திர சம்பள வித்தியாசம் (8வது மற்றும் 7வது ஊதியக் குழுக்களின் அடிப்படை ஊதியங்களுக்கு இடையிலான வித்தியாசம்) x தாமதமான மாதங்களின் எண்ணிக்கை.
ஊழியர்களுக்கு அரியர் தொகை எவ்வளவு கிடைக்கும்?
இதற்கான கணக்கீட்டை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். லெவல் 6 ஊழியர்களுக்கான கணக்கீட்டை எடுத்துக்கொண்டு, இந்த கணக்கீட்டிற்கு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம்.
- 7வது ஊதியக் குழுவின்படி, நிலை 6 (Level 6) ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம்: ரூ.35,400.
- 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டரின் படி திருத்தப்பட்ட ஊதியம்: ரூ. 90,978
- மாத ஊதிய உயர்வு: ரூ. 55,578
- அரியர் தொகை (20 மாதங்களுக்கு): ரூ. 11,11,560
8வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.75 -ஐ விட அதிகமாக இருந்தால், சம்பள உயர்வும், அரியர் தொகையும் இன்னும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.