• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /அடல் பென்ஷன் திட்டம்: மாதம் வெறும் ரூ.210 டெபாசிட் செய்து ரூ.5,000 ஓய்வூதியம் பெறுவது எப்படி?

அடல் பென்ஷன் திட்டம்: மாதம் வெறும் ரூ.210 டெபாசிட் செய்து ரூ.5,000 ஓய்வூதியம் பெறுவது எப்படி?

Atal Pension Scheme: ஓய்வுக்குப் பிறகு நிலையான மாதத் தொகையைப் பெற விரும்பும் நபர்களுக்கு, 'அடல் பென்ஷன் யோஜனா' (Atal Pension Yojana) எனப்படும் அடல் ஓய்வுதியத் திட்டம் சிறந்த தேர்வாக அமையலாம்.

Written BySripriya Sambathkumar
Published: Oct 08, 2026, 17:16 IST|Updated: Oct 08, 2026, 17:37 IST
joinshare
அடல் பென்ஷன் திட்டம்: மாதம் வெறும் ரூ.210 டெபாசிட் செய்து ரூ.5,000 ஓய்வூதியம் பெறுவது எப்படி?
Image Credit: Representative - AI / Atal Pension Scheme

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
தவெக கல்வி விருது விழா: 2 நாட்கள் சென்னையில் நிகழ்ச்சி.. எந்தெந்த மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு?

தவெக கல்வி விருது விழா: 2 நாட்கள் சென்னையில் நிகழ்ச்சி.. எந்தெந்த மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு?

2

கோவையில் கொடூரம்: பெற்ற தாயை கொன்ற மகன்.. மறைக்க முயன்ற மனைவி! என்ன நடந்தது?

3

Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

4

IPL 2027 Auction: பென் ஸ்டோக்ஸுக்கு அனுமதி.. ஹாரி புரூக்கிற்கு மட்டும் ஏன் தடை? பிசிசிஐ சொல்வது என்ன?

5

Explained : வாக்காளர்களின் தேவையை எளிமையாக்கிய 18 வயது ஹேக்கர்! SIR லிஸ்டை சரிபார்ப்பது ஈசி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Atal Pension Scheme: பணத்திற்கான தேவை எப்பொதும் இருக்கிறது. முதுமையயில் இந்த தேவை அதிகரிக்கிறது. ஆனால் அக்காலத்தில் வழக்கமான வருமான ஆதாரங்கள் பெரும்பாலும் குறைந்துவிடுகின்றன. இதனால்தான், மக்கள் தாங்கள் பணியில் இருக்கும்போதே அல்லது வருமானம் ஈட்டும்போதே எதிர்காலத்திற்கான சேமிப்பு மற்றும் முதலீடுகளைத் திட்டமிடத் தொடங்குகிறார்கள்.

அடல் ஓய்வூதியத் திட்டம்

ஓய்வுக்குப் பிறகு நிலையான மாதத் தொகையைப் பெற விரும்பும் நபர்களுக்கு, 'அடல் பென்ஷன் யோஜனா' (Atal Pension Yojana) எனப்படும் அடல் ஓய்வுதியத் திட்டம் சிறந்த தேர்வாக அமையலாம். இது மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு ஓய்வூதியத் திட்டமாகும். இதில் மாதந்தோறும் வெறும் ₹210 முதலீடு செய்து 60 வயதை அடைந்த பிறகு மாதம் ₹5,000 வரை ஓய்வூதியத்தைப் பெற முடியும். இத்திட்டத்தைப் பற்றிய முழுமையாக தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

அடல் பென்ஷன் யோஜனாவில் யாரெல்லாம் சேர முடியும்?

இதற்கான தகுதி நிபந்தனைகள் பின்வருமாறு:

  • இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.
  • நீங்கள் வருமான வரி செலுத்துபவராக இருக்கக்கூடாது.
  • இத்திட்டத்தில் சேரச் செயல்பாட்டில் உள்ள வங்கிக் கணக்கு அவசியம்.

மேலும் படிக்க | தீபாவளிக்குள் கிலோ ரூ.100-ஐ எட்டும்! உச்சத்தில் அரிசி விலை.. விழிபிதுங்கும் சாமானியர்கள் - காரணம் என்ன?

60 வயதுக்குப் பிறகு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?

அடல் பென்ஷன் யோஜனா ₹1,000 முதல் ₹5,000 வரையிலான மாத ஓய்வூதியத் திட்டங்களை வழங்குகிறது. 60 வயதுக்குப் பிறகு கிடைக்கும் மாத ஓய்வூதியம், நீங்கள் தேர்ந்தெடுக்கும் குறிப்பிட்ட திட்டத்தைப் பொறுத்தது. ஆகையால், இத்திட்டத்தில் சேரும்போது உங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான ஓய்வூதியத் தேர்வை மேற்கொள்வது முக்கியம்.

₹210 முதலீட்டுத் திட்டம்

அடல் பென்ஷன் திட்டத்திற்கான பங்களிப்புத் தொகை நபருக்கு நபர் மாறுபடும். பிரீமியம் (பங்களிப்பு) தொகை உங்கள் வயது மற்றும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஓய்வூதியத் தொகையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

உதாரணமாக, ஒருவருக்கு 18 வயதாக இருந்து, அவர் மாதம் ₹5,000 ஓய்வூதியத்தைத் தேர்வு செய்தால், அவர் மாதந்தோறும் ₹210 பிரீமியம் செலுத்த வேண்டும்.
ஒருவருக்கு 30 வயதாக இருந்து, அவர் ₹5,000 ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வு செய்தால், அவர் மாதந்தோறும் ₹577 பிரீமியம் செலுத்த வேண்டும்.

குறிப்பு: 60 வயதுக்குப் பிறகு அடல் பென்ஷன் யோஜனாவின் கீழ் மாத ஓய்வூதியப் பலனைப் பெற, நீங்கள் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | மாத சம்பளம் ரூ.20,000: EPF மற்றும் EPS கணக்குகளில் எவ்வளவு பங்களிப்பு இருக்கும்?

அடல் பென்ஷன் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?

  1. 'அடல் பென்ஷன் யோஜனா' திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வங்கி மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன.
  2. இதற்கு முதலில், நீங்கள் உங்கள் வங்கிக்குச் செல்ல வேண்டும்.
  3. வங்கி உங்கள் KYC (வாடிக்கையாளர் விவரச் சரிபார்ப்பு) நடைமுறையை நிறைவு செய்யும்.
  4. அடுத்ததாக, உங்கள் தேவைகளுக்கு ஏற்ற ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  5. நீங்கள் தேர்ந்தெடுத்த திட்டத்தின் அடிப்படையில், அதற்கான பிரீமியம் (பங்களிப்புத் தொகை) குறித்த விவரங்களை வங்கி வழங்கும்.
  6. இறுதியாக, உங்கள் வங்கிக் கணக்கு இத்திட்டத்துடன் இணைக்கப்பட்டு, நீங்கள் ஒரு பயனாளியாக இதில் பதிவு செய்யப்படுவீர்கள்.

மேலும் படிக்க | Explainer: ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது எப்படி?

Add Zee News as a Preferred Source
TAGS:
Pension