டிகிரி இருக்கா? வங்கி வேலை ரெடியா இருக்கு! 2482 காலியிடங்கள், தமிழகத்தில் மட்டும் 132
BOB LBO Recruitment 2026: பொதுத்துறை வங்கியில் பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். பேங்க் ஆஃப் பரோடா LBO பணி நியமனத்திற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்று, ஆகஸ்ட் 18 அன்று தொடங்கியது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 7, 2026 வரை தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
BOB LBO Recruitment 2026: வங்கி பணிகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. பேங்க் ஆஃப் பரோடாவில் (Bank of Baroda) மொத்தம் 2,482 உள்ளூர் வங்கி அதிகாரி (LBO) பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
பேங்க் ஆஃப் பரோடாவில் வேலை
பொதுத்துறை வங்கியில் பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். பேங்க் ஆஃப் பரோடா LBO பணி நியமனத்திற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்று, ஆகஸ்ட் 18 அன்று தொடங்கியது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 7, 2026 வரை தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
BOB LBO Recruitment 2026: முக்கிய அம்சங்கள்
| அம்சம் | விவரம் |
| நிறுவனம் | Bank of Baroda (BOB) |
| அறிவிப்பு எண் | BOB/ HRM/ REC/ ADVT/ 2026/ 16 |
| வகை | வங்கி வேலை |
| காலியிடங்கள் | 2482 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| விண்ணப்ப செயல்முறை தொடங்கிய நாள் | 18.08.2026 |
| விண்ணப்பிக்க கடைசி நாள் | 07.09.2026 |
BOB LBO Recruitment 2026: சம்பள விவரங்கள்
இப்பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ₹48,480 முதல் ₹85,920 வரையிலான ஊதியம் வழங்கப்படும்.
BOB LBO Recruitment 2026: முக்கியத் தகுதி வரம்புகள்
- இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- கூடுதலாக, விண்ணப்பதாரர்களுக்கு ஓராண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.
BOB LBO Recruitment 2026: வயது வரம்பு
குறைந்தபட்ச வயது வரம்பு 21 ஆண்டுகளாகவும், அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்:
- SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்,
- OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும்
- மாற்றுத்திறனாளிகளுக்கு (PwD) 10 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும்.
BOB LBO Recruitment 2026: விண்ணப்பக் கட்டணம்
- உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
- இது பொதுப் பிரிவினருக்கு (unreserved category) கட்டணம் ₹850 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ₹175 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
BOB LBO Recruitment 2026: மாநில வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை
ஆந்திரப் பிரதேசம்: 80
அருணாச்சலப் பிரதேசம்: 20
அசாம்: 40
கோவா: 21
குஜராத்: 1,185
ஜம்மு & காஷ்மீர்: 15
கர்நாடகா: 418
கேரளா: 49
மகாராஷ்டிரா: 218
மணிப்பூர்: 15
மேகாலயா: 15
மிசோரம்: 15
நாகாலாந்து: 15
ஒடிசா: 100
பஞ்சாப்: 34
சிக்கிம்: 10
தமிழ்நாடு: 132
தெலங்கானா: 50
திரிபுரா: 8
மேற்கு வங்காளம்: 42
மொத்தம்: 2482
மேலும் படிக்க | சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை: ரூ.1,05,000 சம்பளம்... உடனே அப்ளை பண்ணுங்க
BOB LBO Recruitment 2026: தேர்வு முறை
- எழுத்துத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- இத்தேர்வில் ஆங்கிலம், பொது மற்றும் நிதி விழிப்புணர்வு, பகுத்தறிவு (Reasoning) மற்றும் எண் கணிதத் திறன் (Quantitative Aptitude) ஆகிய பாடங்களிலிருந்து மொத்தம் 120 மதிப்பெண்களுக்கான 120 கேள்விகள் கேட்கப்படும்.
- தேர்வு 120 நிமிடங்கள் நடைபெறும்.
- தவறான பதில்களுக்கு கால் மதிப்பெண் (1/4 mark) குறைக்கப்படும்.
- தேர்வில் தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல், மொழித் திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
BOB LBO Recruitment 2026: விண்ணப்பிக்கும் முறை
- இதற்கு முதலில் Bank of Baroda-வின் அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு பக்கத்திற்கு செல்லவும்.
- அதன் பிறகு "Recruitment of Local Bank Officers on regular basis – 2026/16” என்பதை தேர்வு செய்யவும்.
- “Apply Now” என்பதை கிளிக் செய்யவும்.
- இது IBPS online application portal-க்கு அழைத்துச் செல்லும்.
- புதிய பதிவு (New Registration) செய்து, பெயர், மொபைல் எண், Email போன்ற விவரங்களை பதிவு செய்யவும்.
- Login செய்து Local Bank Officer பதவியைத் தேர்வு செய்யவும்.
- தனிப்பட்ட விவரங்கள், கல்வித்தகுதி, அனுபவம் மற்றும் தேர்வு மைய விவரங்களை நிரப்பவும்.
- தேவையான புகைப்படம், கையொப்பம் மற்றும் பிற ஆவணங்களை அப்லோட் செய்யவும்.
- விண்ணப்பக் கட்டணத்தை online-ல் செலுத்தவும்.
- நிறைவாக, சப்மிட் செய்து, அப்ளிக்ஷன் படிவம் மற்றும் கட்டண ரசீதை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண இங்கே கிளிக் செய்யவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.