• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /டிகிரி போதும், மாதம் ரூ.23,000 சம்பளம்: தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை, உடனே அப்ளை பண்ணுங்க

டிகிரி போதும், மாதம் ரூ.23,000 சம்பளம்: தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை, உடனே அப்ளை பண்ணுங்க

Thanjavur District Recruitment News: தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கம் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்போர் மட்டும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

Written BySripriya Sambathkumar
Published: Aug 18, 2026, 01:03 PM IST|Updated: Aug 18, 2026, 01:09 PM IST
joinshare
டிகிரி போதும், மாதம் ரூ.23,000 சம்பளம்: தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை, உடனே அப்ளை பண்ணுங்க
Image Credit: Thanjavur District Recruitment News (Representative Photo)

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
கோயில் பணியாளர்களுக்கு குட் நியூஸ் கொடுத்த தமிழ்நாடு அரசு - முழு விவரம் Explained

கோயில் பணியாளர்களுக்கு குட் நியூஸ் கொடுத்த தமிழ்நாடு அரசு - முழு விவரம் Explained

2

Explained: கிரீன் கார்டுக்கு தடை!! இந்திய ஐடி ஊழியர்கள், நிறுவனங்கள் மீதான உடனடி தாக்கம் என்ன?

3

தாராபுரத்தில் தவெக வெற்றி; குறைந்தது வெற்றி வித்தியாசம் - 3வது இடத்தில் அதிமுக

4

57 மெட்ரோக்கள் மூடல்; அனைத்து ரயில்களும் ரத்து; பிரதமரை சாடும் CJP - டெல்லி நிலவரம் என்ன?

5

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு... யார் இந்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Thanjavur District Recruitment News: தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கம், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட தற்காலிக பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள நபர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கம் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்போர் மட்டும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு: முக்கிய அம்சங்கள்

விவரம்அம்சம்
அமைப்புமாவட்ட சுகாதார சங்கம்
பதவிமுதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் / ஆய்வக நுட்புநர்
விண்னப்பிக்க கடைசி நாள்ஆகஸ்ட் 19
விண்ணப்பம்www.thanjavur.nic.in

இந்த பணியிடங்களுக்கான பதவி விவரம், கல்வித் தகுதி, விண்ணப்ப விவரம், தொகுப்பூதியம், காலியிடங்கள் போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.

மேலும் படிக்க | சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை: ரூ.1,05,000 சம்பளம்... உடனே அப்ளை பண்ணுங்க

முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்: Senior Treatment Supervisor

பதவி: முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்
காலியிடங்கள்: 1
தொகுப்பூதியம்: ரூ.23,000

கல்வித் தகுதி:

  • இளங்கலைப் பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர் தகுதி.
  • கணினி இயக்கச் சான்றிதழ் படிப்பு.
  • வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் வேடருக்கு ஓட்டிச் செல்லத் தெரிந்திருக்க வேண்டும்.

முன்னுரிமைத் தகுதிகள்:

  • காசநோய் சுகாதாரப் பார்வையாளருக்கான அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி.
  • சமூக பணி அல்லது மருத்துவத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற பட்ட மேற்படிப்பு.
  • பல்நோக்கு சுகாதார சேவைகளுக்காக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சித் திட்டமான BIC-ஐ நிறைவு செய்தல்.

ஆய்வக நுட்புதர்: Laboratory Technician

பதவி: ஆய்வக நுட்புதர்
காலியிடங்கள்: 1
தொகுப்பூதியம்: ரூ.17,000

கல்வித் தகுதி:

  • இடைநிலைக் கல்வி (10+2) மற்றும்
  • மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பத்தில் (Medical Laboratory Technology) டிப்ளோமா அல்லது சான்றிதழ் படிப்பு அல்லது அதற்கு இணையான தகுதி.

முன்னுரிமைத் தகுதிகள்:

  • NTEP அல்லது சளிப் பரிசோதனையில் ஓராண்டு அனுபவம்.
  • உயர் கல்வித் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு (உதாரணமாக பட்டதாரிகளுக்கு) முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் படிக்க | இலவச லேப்டாப், மிதிவண்டி.. ரூ.1,000 உதவித்தொகையுடன் ஐடிஐ பயிற்சி - தமிழக அரசின் அறிவிப்பு!

விண்ணப்பதாரர்களுக்கான முக்கிய குறிப்புகள்

  • வின்னப்பப் படிவம் தஞ்சாவூர் மாவட்ட இணையதளத்தில் (https://thanjavur.nic.in) பதியிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் அனைத்து கல்வி மற்றும் தகுதி சான்றிதழ், கணிணி சான்று, வாகன ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச்சான்று ஆகியவற்றின் நகல்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • தபால் உறையின் மேல் பதவியின் பெயர் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.
  • தஞ்சாவூர் மாவட்டத்தில் தேவையான இடத்தில் பணியாற்ற வேண்டியிருக்கும் தகுதியில் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்:

துணை இயக்குநர்,
மருத்துவப் பணிகள் (காசநோய்),
மாவட்ட காசநோய் மையம்,
இராசா மீராகதார் மருத்துவமனை வளாகம்,
தஞ்சாவூர்-413001

தொலைபேசி எண்:04362-27123

விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 19/08/2006.

அதிகாரப்பூர்வ அறிவிப்பை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

முக்கிய குறிப்பு: கடைசி தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள், சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள், முழுமையான விபரங்கள் இல்லாத விண்ணப்பங்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

மேலும் படிக்க | 10ம் வகுப்பு படித்தவரா? மத்திய அரசின் வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu